Pages - Menu

Tuesday, 3 June 2014

காதலிப்பது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி.. : மனம் திறக்கிறார்கள் ஸ்ருதி, ரெய்னா...!




தாங்கள் இருவரும் காதலில் உள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் ரெய்னா இருவரும் மறுத்துள்ளனர். நடிகர் கமலின் மூத்த மகளும், பிரபல நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமைகளைக் கொண்டவருமான ஸ்ருதிஹாசன், பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னாவைக் காதலிப்பதாகவும், இருவரும் படு ரகசியமாக காதலை வளர்ப்பதாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், தற்போது அத்தகவலை சம்பந்தப்பட்ட இருவரும் மறுத்துள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரரான ரெய்னா, ஏற்கனவே பல நடிகைகளுடன் காதலில் உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது ஸ்ருதியுடன் இணைத்துப் பேசப்பட்டார். ஆனால், இக்காதல் செய்தி உண்மையில்லை என ரெய்னா மறுத்துள்ளார்.

 இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தகவல் வெளியிட்டுள்ளார் ரெய்னா. அதில் அவர், ‘நிறைய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.ஆனால் யாருமே இதனை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. எல்லோருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நான் யாரையும் காதலிக்கவில்லை’ என இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இதேபோல், இப்பிரச்சினை தொடர்பாக ஸ்ருதியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுரேஷ் ரெய்னாவை ஸ்ருதி ஹாசன் காதலிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. சுருதிஹாசன் சினிமாவில் பிசியாக இருக்கிறார்’ எனக் கூறப்பட்டுள்ளது.