Pages - Menu

Saturday, 9 November 2013

விஐபிக்களின் உறவினர்களுக்கு விருது : வெளிவந்திருக்கும் புதிய பூதம் !

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற பரிந்துரைக்கப்பட்டோரின் பட்டியலில், விஐபிக்களின் உறவினர்கள் பலரும் இடம்பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.




பத்ம விருதுகள் பெற முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்கள் சார்பில் சிலரை விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம். அந்த வகையில், சுமார் 1,300 பேரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், பல்வேறு விஐபிக்கள், தங்களது பிள்ளைகள், உடன்பிறப்புகள், உறவினர்களின் பெயர்களையே பரிந்துரை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, பாரத் ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர், தனது சகோதரி உஷா மங்கேஷ்கர், பின்னணி பாடகர் சுரேஷ் வட்கர், சமூக சேவகர் ராஜ்மால் பரக் ஆகியோரது பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.

அதே போல, பத்ம விபூஷன் விருது பெற்ற உஸ்தாத் அம்ஜத் அலி, அவரது மகன்கள் அமான், அயான் மற்றும் பாடகர் கௌஷிகி சக்ரபர்தி, தபலா கலைஞர் விஜய் காடே, கலைஞர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி என்கிற நடராஜ கிருஷ்ணமூர்த்தி, சித்தார் கலைஞர் நிலத்ரி குமாரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.

ஒரு சில பிரமுகர்கள் இதுபோல தங்களது உறவினர்கள், நண்பர்களின் பெயர்கள் என 25 பேரைக் கூட பரிந்துரைத்துள்ளனர்.

விருதுகள் என்பது கலைஞர்களையும் கலைகளையும் ஊக்கு விக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த காலம் போய், அதிலும் ஊழலும், முறைகேடுகளும் நிறைந்துவிட்டன.

No comments:

Post a Comment