Pages - Menu

Saturday, 4 January 2014

அஜித் வழியில் விஜயசேதுபதி..!



தமிழ்சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் விஜயசேதுபதி வளர்ந்துவிட்ட நடிகர்.  நான்கு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து திரையுலகில் தனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்குமென்றோ, ரசிகர்களின் பேராதரவு கிடைக்குமென்றோ விஜயசேதுபதி எதிர்பார்க்கவில்லை.

ரசிகர்களின் ஆதரவு பற்றி சூதுகவ்வும் திரைப்படம் ரிலீஸான போது விஜயசேதுபதி “ நான் யாருக்கும் தெரியாம லாஸ்ட் சீட்ல உட்கார்ந்து படம் பாத்துகிட்டிருந்தேன். ஸ்கிரீன்ல நான் வந்த அந்த மொக்க எண்ட்ரிக்கு எல்லாரும் கை தட்டுனத பாத்து அப்படியே ஷாக் ஆகிட்டேன்” என்று கூறியிருந்தார்.

இவ்வளவு பெரிய ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா! விஜய சேதுபதியின் ரசிகர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து ஆங்காங்கு விஜயசேதுபதிக்கு ரசிகர்மன்றங்களை திறந்துவிட்டனர்.

இதையறிந்த விஜயசேதுபதி “ரசிகர்மன்றம் வைத்து வீணாக்கும் நேரத்தை வேறு ஏதாவது உபயோகமான செயலில் செலவழிக்கலாம். இதுபோன்ற செயல்களை நான் ஒருபோதும் ஊக்குவிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டாராம். 

இருக்கிற பணத்தையெல்லாம் செலவு செய்து தனக்காக தானே ரசிகர் மன்றங்கள் வைத்துக்கொள்ளும் தற்போதைய சூழ்நிலையில், ரசிகர்களாக விருப்பப்பட்டு அமைக்கும் ரசிகர்மன்றங்களை வேண்டாம் என்று விஜயசேதுபதி புறக்கணித்தது அவரது மதிப்பை ரசிகர்களிடையே உயர்த்துகிறதே தவிர துளியும் குறைக்கவில்லை.

No comments:

Post a Comment