Pages - Menu

Friday, 3 January 2014

அம்மாவாக அமலாபால்....?




இரண்டு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளாராம் அமலாபால்.


தமிழ் சினிமாவில்தான் கதாநாயகிகள் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க தயங்குகிறார்கள்.


ஆனால், மலையாள சினிமாவில் அப்படியல்ல. எத்தனை வயது குழந்தைகளுக்கும் தாயாக நடிக்கிறார்கள்.


அந்த வகையில், தமிழில் யூத்புல் கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் அமலாபால், தாய்மொழியான மலையாளத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார்.அப்படமும் வெற்றி பெற்றிருப்பதால், அதேபோன்று மெச்சூரிட்டியான வேடங்கள் நிறைய அமலாபாலை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கிறதாம்.


அதனால், தமிழிலும் பிசியாக இருக்கும் அமலாபால், அடுத்தடுத்து மாறுபட்ட கதாநாயகி வேடங்களாக மலையாளத்தில் ஓ.கே செய்து கொண்டிருக்கிறாராம்.


மேலும் இதற்கு முன்பு நரைமுடி கதாநாயகர்களுடன் நடிக்க தயங்கி நின்ற அமலாபால், இப்போது மம்மூட்டி, மோகன்லால் போன்ற ஹீரோக்களுடனான வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு வருகிறாராம்.

No comments:

Post a Comment