Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, 5 June 2014

அளவுக்கு அதிகமாக சாட்டிங் செய்ததால் கண்கள் குருடாகும் - எச்சரிக்கை..!




அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி, சாப்பாட்டுக்கு மட்டுமல்ல... செல்போன் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும்.

 இதனை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் தனது காதலிக்கு இரவில் அளவுக்கு அதிகமான செய்தி அனுப்பி கண்பார்வையை இழக்கும் அபாயகட்டத்தில் இருக்கிறார் நெருக்கமானவர்களுடன் உரையாடுவதற்கான வி-சாட் என்ற மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி இரவு பகலாக தன் காதலிக்கு செய்தி அனுப்பியதால் அவரது கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இருட்டில் அவர் தொடர்ந்து சாட்டிங் செய்ததால் விழித்திரை கிழிந்து விலகியுள்ளதாக மருத்துவ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விழித்திரை விலகினால் உள்வரும் ஒளிக்கதிர்களிலிருந்து தெளிவான படத்தைப் பெற முடியாது.

 இவ்வாறு விழித்திரை விலகல் பெரும்பாலும் கிட்டப்பார்வை உடையவர்களுக்கே ஏற்படுகிறது. இவர்களுக்கு கண் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் தென்படும். கரும்புள்ளிகள் அதிகரிக்கும். இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை முற்றிலும் பறிபோகும்.

செல்போனில் அளவுக்கு அதிகமாக சாட்டிங் செய்ததால் இப்போது விழித்திரை விலகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சீன வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் கண்பார்வை நீடிக்கும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Sunday, 5 January 2014

மருந்து வியாபாரமா? மரண வியாபாரமா?



போலி மருந்துகளும், காலாவதியான மருந்துகளும், தமிழகத்தில் முழு வீச்சில் பல வருடங்களாக விற்பனை செய்யப்பட்ட கொடுமையான உண்மை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டையே உலுக்கி உள்ளது. சில உயிர்கள் பலியான பிறகே இந்தக் கொடூர மோசடி வெளிவந்துள்ளது. சென்னை கொடுங்கையூரில் காலாவதியான மருந்துகளை அழிக்கும் கிடங்கு உள்ளது. கொடுங்கையூருக்குக் கொண்டு வரப்படும் காலாவதியான மருந்துகளை சில கொடுங்கையர்கள் வழியிலேயே மடக்கி, அவற்றை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று, காலாவதியான தேதிகளை மாற்றி, புதிய தேதிகளை அச்சடித்து மறுபடியும் விற்பனைக்கு அனுப்பி வந்துள்ளனர்.

இப்படி காலாவதியான மருந்துகளை சாப்பிட்டு, இவரை எத்தனை பேர் காலாவதியாகினார்கள் என்பது கணக்கில் இல்லை. இதுவல்லாமல், போலி மருந்துகளும், நூற்றுக்கணக்கான வகைகளில் புழக்கத்தில் விடப்பட்டு பொதுமக்களின் உயிரோடு திருவிளையாடல் நடத்தப்பட்டுள்ளது. 600 வகையான போலி மருந்துகள் மாநில முழுவதுமுள்ள மருந்து கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு கனஜோராக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மருந்து வியாபாரமா? மரண வியாபாரமா?மக்களின் உயிர் அவ்வளவு மட்டமா? அல்லது மாநிலத்தில் இருப்பது கையாலாகாத சட்டமா? ஒன்றும் புரியவில்லை. காலாவதி மருந்துகளை தேதி மாற்றி விற்று, கோடிகோடியாய் குவித்த கும்பலைச் சேர்ந்த பிரதீப் சோர்டியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலாவதி+போலி மருந்து கும்பலின் மூளை என கருதப்படும் மீனா ஹெல்த்கேர் மீனாட்சிசுந்தரம், சஞ்சீவ்குமார், உட்பட 5 பேரை போலீஸ் பிடிக்கவில்லை.

அவர்களே நீதிமன்றத்தில் (பாதுகாப்பாக) சரண் அடைந்துள்ளனர். மீனாட்சி சுந்தரம் மருந்துகளின் பெயரால் மரண வியாபாரம் செய்து 100 கோடிக்கு மேல் குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி என்றால் எவ்வளவு காலம் இந்தக் கொடுமை அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள். காலாவதி+போலிமருந்து வழக்கு, சிபிசிஐடி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் திகிலூட்டும் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

வசந்தா பார்மா, மீனா ஹெல்த் கேர் நிறுவனங்களின் பெயரில் காலாவதி மருந்து மாத்திரை விற்றதில் கோடிக்கணக்கில் லாபம் கிடைத்ததால் அவற்றை பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளாய் மாற்றி மீனாட்சி சுந்தரம் தம்பதியர் அதன் இயக்குநர்களாக இருந்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 42 ஆயிரம் கடைகளுக்கு மேல், காலாவதி+போலி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் வழக்கமாய் மருந்து மாத்திரைகள் வாங்கும் கடையும் இதில் இருக்கலாம். மாநிலமெங்கும் மூட்டை மூட்டையாக காலாவதி+போலி மருந்துகள் கொட்டப்படுவதும், கண்டுபிடிக்கப்படுவதும் பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவைச் சேர்ந்த ராமு என்பவர் டெல்லியில் உள்ள ஒரு கம்பெனியிலிருந்து போலி+காலாவதி மருந்துகளை வாங்கி மீனாட்சி சுந்தரத்துக்கு விற்பனை செய்ததும் அதை மீனாட்சி சுந்தரமும் பல கேடிகளும் சேர்ந்து கோடிகளாய் மாற்றிய கொடுமையும் நடந்துள்ளது.

பல மாநிலத்திலும் இந்த பாதக வலை விரிந்துள்ளது.  கல்வியறிவற்றவர்களும், வறுமைகோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற ஏழை எளியவர்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற நம் நாட்டில் மருத்துவம் வணிகமாகவும், மருத்துவமனைகள் கொள்ளைக் கூடங்களாகவும் மருந்து கடைகள் மரண வியாபார கேந்திரங்களாகவும் மாறி இருப்பதற்கு யார் காரணம்? மக்களிடம் வாக்குகளை வாங்கிக் கொண்டு மக்களின் மீது அக்கறையே இல்லாமல் இருக்கின்ற ஆட்சியாளர்கள் அல்லவா?

கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால், உயிருக்கு உத்தரவாதமில்லை என்று அஞ்சுகிற மக்கள், தனியார் மருத்துவர்களிடம் செல்கின்றனர். கிளினிக்குகள் என்ற பெயரில் இயங்கும் இவை, ‘கிளின்’ செய்வது நோயை அல்ல, நோயாளியின் மணிப்பர்சை. மருத்துவர்களுக்கும், ஆய்வகங்களுக்கும் இ.சி.ஜி. ஸ்கேன் நிறுவனங்களுக்கும், மருந்துக் கடைகளுக்கும் இடையே ஓர் அயோக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளது. கையில் பிளேடு அறுத்துவிட்டது.

 மருந்து போட்டு விடுங்கள் என்று போனால், எக்ஸ்ரே, இ.சி.ஜி, ஸ்கேன், ரத்தசோதனை, சிறுநீர் சோதனை, மலம், சளி சோதனை, சோதனை மேல் சோதனை செய்து, பிறகு 4 பக்கங்களுக்கு 40 வகையான மருந்துகளை புரியாத கையெழுத்தில் எழுதித் தருவார், மருத்துவர். எனவே, பணத்தையும், உயிரையும் பாதுகாக்க விரும்பும் ஏழை மக்கள், நேராக மருந்து கடைகளுக்கே சென்று நோயை சொல்லி மருந்துகளை வாங்குவது பரவலாக நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு, முடித்து பாதி டாக்டர் வேலை செய்யும் நபர்கள் இருக்கும் மருந்துக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதுண்டு.

இப்போது, மருந்துக்கடைகளில் விற்கும் மருந்துகளும் போலியானவை, காலாவதியானவை என்றால், எவ்வளவு கொடுமை. காலாவதி மருந்துகளை விற்ற காலிகள் மீது அரசு எடுத்துள்ள காலங்கடந்த நடவடிக்கை இன்னும் கடுமையாக இருக்க வேண்டும்.

பரபரப்பாக பத்திரிகைகளில் வரும் செய்திகள் பத்து நாளைக்குப் பிறகு பழைய செய்தியாகி, பிறகு மறதியை பிறவிக்குணமாய் கொண்ட மக்கள் மனதிலிருந்து மறைந்து விடுவதுண்டு, கொடிய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து விடுதலையாவதும் உண்டு. போதை மருந்து வைத்திருந்தாலே இஸ்லாமிய நாடுகளில் மரணதண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்பட்டுவிடும். போலி மருந்தை விற்பவர்களுக்கும் இங்கே போதிய பாதுகாப்புண்டு.

இதுமிகவும் அவலமானது, கேவலமானது. மக்களின் உயிரோடு விளையாடும் கொடியவர்கள், தூக்கு மரத்தில் ஏற்றப்படாவிட்டால், சட்டமும், நீதியும், கழுமரத்தில் ஏறிவிடும் என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

அழிவுப் பாதையின் உச்சக்கட்டத்தில்!!!



(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)


மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக - அறிவியல் – அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் - அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் - திரைப்படங்களும் – ஆடல் பாடல் – கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.

ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் – நடிகர்கள் – நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் – வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் – இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை – கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) - வேகமாக கற்றுத் தரமுடியும். காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை - குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் – நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் – மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் – நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் – அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் - வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் – கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் – மது அருந்தாமல் – விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? என்று யாராவது காட்டினால் தெரிந்து கொள்ளலாம். ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் – நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?

திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா – நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சும் மனநிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் – ஒரே ஒரு சணடை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான். எல்லா மொழிக்காரர்களும் ஒருவேளை அரசாணை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்தந்த மொழி வெறி அவரவர்களுக்கு.

அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க – ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் – சின்னத்திரை எனப்படும் T.V.   சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V.   க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் – தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் – குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் – செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப - தேசிய சர்டிபிகேட்,

சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் – பணப் புயலும் போங்கள். நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி – எண்ணை – மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? – சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை. எல்லாம் T.V.  மயம்; இல்லை இல்லை எல்லாம் T.V.   மாயம்.

இந்த மூன்றைத் தவிர அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை – மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். பள்ளி- கல்லூரி காலங்களில் கைக்கடியாரம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியாமலிருந்த மக்களுக்கு விஞ்ஞானம் - கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்ஃபோன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்ஃபூன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு.

பெரிதான் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் கெட்டுவிடும் என்று சொன்னார்கள் – அதையும் தாண்டி புனிதமாக சிறிதே – சிறிதான் இந்த செல்போன்களில் இன்டர்நெட் இணைப்புடன் – F.M. T.V. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அதையே உற்றுநோக்கி - இயக்குவதாலும் – படம் பார்ப்பதாலும் கண் என்ன  ஆகும் என்று மெய்ஞானம் தான் பதில் சொல்லவேண்டும்.

ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டு முதல் தயாரிப்பை ஒருவன் கண்டுப்பிடித்தவுடனேயே அதைப் போன்ற – அதனைவிட பன்மடங்கு வசதிகளுடன் அடுத்தடுத்தவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஒருவர் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவே செல்போன்கள் தயாரிக்கப்ட்டன. ஆனால் இன்று அதன் நிலையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் – பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் – பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் – பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் – காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் – திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாரும் எல்லாமும் பெற அன்பு மட்டுமே போதாது நல்லறிவும் வேண்டும். நல்லறிவும் நம் வீடு தேடி வரும்; வீடு தேடி என்ன நல்ல உள்ளங்களை தேடி நாடி வரும்; அழிவே வீடு தேடி வரும்போது அறிவு வீடு தேடி வராதா என்ன? எனவே உள்ளங்களை சுத்தமாக்கிட நற்போதனை சார்ந்த அறிவை வரவேற்பதை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதவும் கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறந்த ஐந்து நிமிடத்திலேயே ???

எதிர்கால பள்ளிப்படிப்புகளில் சாதனை படைக்கும் நபர்களை அவர்கள் பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


குழந்தை பிறந்த 5 நிமிடத்தில் அதன் அறிவுத்திறனை கணித்து அதன் சாதனை விவரங்களை அளிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


8 லட்சத்து 77 ஆயிரம் ஸ்வீடன் மாணவர்களின் பள்ளி தேர்வு முடிவுகளை ஒப்பிட்டு இந்த ஆய்வு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


குழந்தை பிறந்த 1 முதல் 5 நிமிடத்தில் ஆப்கர் என்ற சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனையில் பிறந்த சிசுவின் இதயத்துடிப்பு, சுவாசம், தோல் நிறம், இருமல் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.


இந்தச் சோதனையில் மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் பிறந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்றும், அதனால் நல்ல கல்விச் சாதனை படைக்கும் என்றும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.


இந்த சேதனையை 1952 ஆம் ஆண்டு டொக்டர் விர்ஜினியா ஆப்கர் மற்றும் குழுவினர் உருவாக்கி செயல்படுத்தினர்.


ஸ்வீடன் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரியா ஸ்டுவர்ட் இந்த ஆய்வு முடிவு குறித்து விளக்கி உள்ளார்.


இந்த ஆய்வு கட்டுரை அடுத்த மாதம் வெளியாகும் குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் இதழில் வெளியாகிறது.

வெற்றிக்கான சுருக்கு வழி.





வெற்றிக்கான சுருக்கு வழி.



1.என்னுடைய உறுப்புகள் விலங்குகளின் வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன,மாறாக என்னுடைய எண்ணங்கள் கடவுளின்  படைப்பாற்றல்  வழியாக  .என்னுடைய உறுப்புகளின் வழியாக விலங்குகளின்  குணங்களும் என்னுடைய சிந்தனைகள்  வழியாகக் கடவுளின் படைப்பாற்றலும்.இவை இரண்டின் செயல்களும்  இயற்கையாகவே கடவுளின்  படைப்பாற்றல் வழியில்.உறுப்புக்களின் செயலில்  கடவுளின்  எண்ணத்தைச் செயல் படுத்தும் போது அது கடவுளின் படைப்பாற்றலாகவும் உறுப்புக்களைத் தன்னிச்சையாக விடும் போது  அவை விலங்குப் பண்பையும்  வெளிக்  காட்டுகின்றது.

2.நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு .நாம்  ஒவ்வொருவரும்  வரலாற்றை உருவாக்கும்  நபர்களாக இருப்போம்.நம்முடைய  வாழ்க்கை  ஒரு முடிந்து போன வரலாறாக இல்லாமல்.உலகத்தில் உள்ள எல்லா நற்பண்பாளர்களையும்தனியாக ஒரு தீவில் வைத்து  அங்கு கூட்டம் ஒன்றை நடத்துவோம்,அவர்கள் அங்கு ஒரு குறிப்பிட்ட நாட்கள் தங்கும்படியாகச்  செய்வோம்.அவர்கள் உலக மக்களிடையே உண்மை நிலவ வேண்டும் என்றும் நம்பிக்கை ,அன்பு ,எண்ணத் தூய்மை ஆகியவை நிலவ வேண்டும் என்று பாடுபட்டவர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்கள் .ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் 100 பேரில் 5 பேருக்கு மட்டுமே தேவையான உணவு மட்டும் கிடைக்கும் படிச் செய்வோம் .

3.அவர்களிடையே ஒரு பெரிய உணவுப் போராட்டத்தை தோற்றுவிப்போம் என்ன நிகழும் அவர்கள் போதித்த கொள்கைகள் அணைத்தையும் அவர்களே மீறும் படியாக ஆகிவிடும்.அப்படி என்றால் எல்லா நல்லவைகளும் போதனைகளும் ஒழுக்கங்களும் எந்த ஒரு தனி  மனிதனுக்கும்பிறப்பின் வழியாகவோ சிந்தனையின் வழியாகவோ  சொந்தமல்ல.யாரும் இயற்கையாக இப்படிப்பட்ட குணங்களோடு இருப்பதில்லை.அவர்கள்  இது நாள் வரை வெளிப்படுத்தியவைகள் எல்லாம்   அவர்களைச் சுற்றியிருந்த சூழ்நிலைகளில்  இருந்து அவர்களுக்குத் தேவையானதை  கிரகித்து  வெளிப்படுத்தியது  தான்.ஆகவே  நாம்  நமக்கு எப்போதெல்லாம்  எதுவெல்லாம்  வேண்டுமோ அப்போதெல்லாம் நமது  தேவைகள்  கொட்டிக்கிடக்கும் சூழ்நிலைகளின் ஊடே செல்வோம் அல்லது அப்படிப்பட்ட சூழ்நிலைகளைப் படைப்போம்  அவற்றைக் கிரகிப்போம் .

4.சூழ்நிலைகளில் நல்லதும் கெட்டதும் இணைந்தும் பிணைந்தும்   நமது  கிரகிப்பிற்காக
அண்டம் முழுவதும்  கொட்டிக்  கிடக்கின்றது.அதனை  எப்படி கிரகிப்பது  என்பது நமது இயற்கை பற்றிய புரிதல்களைப்  பொறுத்தது .உலகின் அந்த நற்பண்பாளர்கள் அந்தத் தீவிற்கு  வருவதற்கு  முன்பாக தாங்கள் கிரகித்து  இருந்த நற்பண்பாளர்கள் என்னும்   சூழ்நிலையைப் போலவும், பின்பு  உணவுக்காகப் போராடும் போது அவர்களால்  கிரகிக்கப்பட  நற்பண்புகள் என்னும் சூழல் அறவே இல்லாதது போலவும்.ஆகையால் சூழ்நிலைகளைப் பார்ப்போம் நாம் கிரகிக்க என்ன இருக்கின்றது என்று நமது அடையாளத்திற்காக.

5.நமது அன்றாட வாழ்க்கையில் மின்சாரத்தால் இயங்கும் மின்விசிறி  ,மின் மோட்டார் ஆகியவற்றைப் பயன் படுத்துகின்றோம் அதில் மின்சாரத்தைச் செலுத்தினால் மின் சக்தி இயங்கு சக்தியாக மாற்றப்படும் அதே போல் மேலே சொன்ன மின் மோட்டாரை நாம் வேறு ஏதாவது ஒரு சக்தியைக் கொண்டு இயக்கினால் அங்கு  இயங்கு சக்தி மின்சக்தியாக மாற்றப்படும் .இது போலத்தான் நமது வாழ்க்கைச் சூழ்நிலைகளும் ரிவர்சு பொசிசனில், எதிர் இயங்கு நிலையில் வைத்துப் பார்க்க வேன்டும்.

6.மனிதன் தனக்கு வேண்டிய வெற்றிகளைக் கிரகிக்க அந்த வெற்றி அடங்கிய சூழ்நிலைகள் வேண்டும்.அல்லது தனது அதே கிரகித்தலை எதிர் நிலையில் வைத்து  வெற்றிக்கான  சூழ்நிலைகளை தனது  மனதில் உருவாக்கி  அதனை  புற உலகிற்கு அனுப்பி   வெற்றியை அடைவதற்கான சூழ்நிலைகளைப் படைக்கலாம்.இந்த  வெளித்தள்ளல் என்னும் சக்தி மூலமாக சூழ்நிலைகளை  வெளித்தள்ளும்  போது  அதன் வெற்றிக்காக எல்லாப்  பொருட்களும் ,மனிதர்களும்  மாறுவார்கள் .

7.வெற்றிகளுக்கான சுருக்க வழி  எதுவும் இல்லை என்றே நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம்.ஒரு மனிதனின் வெற்றியைத் தொடரும் இன்னொரு மனிதனின் பயணம் தொடர்பவனைப் பொறுத்து ஒரு சுருக்கு வழி தான்.ஏற்கனவே பயணம் செய்தவனின் அலைச்சல்களைப் பின் வருபவன் தொடரத் தேவையில்லை.அதே போல் மனித இனத்தைப் பற்றிய மனிதனின் புரிதல்கள் அவன் பெற இருக்கும் வெற்றிக்கான களங்களையும் ,வழிகளின் நீளத்தையும் சுருங்க வைக்கத்  தான் செய்யும்.மனிதனின் வெற்றிகள்  எதுவும் மனிதன் தொடர்புடையவைகளில் மட்டுமே.

8.படைத்தலும் பயன்படுத்தலும் நம்மிடம் தான் வெற்றியும் வெற்றிக்கான சூழ்நிலைகளும் நாம் தான் என்று  அதனைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்துக் கையாளும் போது எதுவும் எளிதாகின்றது.வெற்றிக்கான சுருக்க வழி ஆகின்றது.இந்த பதிவின் மூலமான புரிதல்களை உணர சுருக்க வழி இதனைப் படித்துப் புரிந்து கொள்வது மட்டுமே.சுருக்க வழிக்குக்கூட ஏதாவது சுருக்க வழிகள் இருக்க வாய்ப்பில்லாமல் இல்லை.

பழக்கங்களை சமாளிப்பது எப்படி?





பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

       
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் இது முதுமொழி.

எனவே நமது ஆரம்பகால பழக்கங்கள் புதிது புதிதாய் ஆழ்மனதில் தொடர்ந்து பதிந்து கொண்டே வருகிறது.
   
எதுவும் பழக்கமாகுவது கெடுதலா?
  
மனோதத்துவ முறையில் பழக்கம் என்பது மனதில் உருவாகும் ஒரு பதிவு.பெரும்பாலான நமது திறமைகள் பழக்கத்தின் ஆதாரத்திலேயே உருவாகின்றன.
  
அவற்றை இருவகைகளாக பிரித்து கொள்ளலாம் ஒன்று நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றது தீய பழக்க வழக்கங்கள்.முன்னது வளர பின்னது தேய அவனது வாழ்க்கையில் உயர்வும் நல்ல பல குண நலன்களையும் அடைகிறான்.
  
இரண்டிலும் மனபழக்கங்கள்,உடல் பழக்கங்கள் என இரண்டு வகை உண்டு.
 
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் உணவு,உடை, நடை,உறக்கம்,உணர்வுகள்,பொழுதுபோக்கு என்ற பல நூறு செயல்களிலும் நமது மாறாத பழக்க வழக்கங்களை காணலாம்.
  
மேலோட்டமாக மாறாதது போல தோன்றினாலும் சில ஆண்டுகள் பிண்ணோக்கி பார்த்து ஒப்பிட்டால் நாம் நிறையவே மாறியிருப்பது தெரிகிறது.
 
ஆனால் சிலர் பெரிய அளவில் மாறாமலிருப்பது புரிகிறது. நன்மையான பழக்கங்கள் உடையவர் மாறாதிருத்தல் நல்லது.தீய பழக்கங்கள் உள்ளவர் திருந்தாமலிருந்தால் தீயது.
  
இயல்பாகவே நல்ல பழக்கங்களை தொடர்வது கடினமானது அவை நீர் மேல் எழுத்துக்களை போல நிரந்தமற்றவை.தீய பழக்கங்களை விடுவது அதைவிட கடினம்,அவை நம் உடன் பிறந்த உறுப்புகளை போல் ஒட்டி கொள்கின்றன வெட்ட வெட்ட துளிர்க்கும் நகம்,முடி போல குறையாமல் வளர்கின்றன.
  
தெளிந்த அறிவால்,தீவிர முயர்சியால்,உறுதியான தீர்மானங்களால் நல்ல பழக்கங்களை கற்கவும்,தீமை பழக்கங்களை விடவும் ஒவ்வொரு புதிய நாளும் வாக்குறுதி தரப்படும்.

பழக்கத்தினால் என்ன பயன்?
   
நாம் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சாலையோடு அதை ஒப்பிடலாம். நமது நரம்பியல் மண்டலத்தின் வரைப்படத்தை பார்த்தால் டெல்லி  மாநகரத்தின் சாலைகளின் வரைபடம் போலத்தான் இருக்கும்.கை தேர்ந்த அனுபவமுள்ள ஓட்டுனர் ஒருவன் அந்த மாநகரத்திலும் சுலபமாக வாகனம் ஒட்ட பழகி விடுவார்.அது போலத்தான் நமது வாழ்வின் பழக்க வழக்கங்க்ளும்.
   முன்பு நாம் கண்டது போல ஒரு செயலின் கொள்கை குறிக்கோள் எனப்து இன்பம் என்ற எல்லையை தேடுவது அல்லது வலி,துன்பம் என்ற எல்லையை தேடுவது தவிர்த்து ஓடுவது ஒரு சாலையின் இடது பக்கம் இன்பம் அதன் வலது பக்கம் துன்பம். நமது வாழ்வு என்ற வாகனம் தினம் வழக்கி கொண்டு துன்பக்கரையை நோக்கி ஓடும்.அதை மீண்டும் திசை திருப்பி இன்பத்துக்கான ஓரத்திலே ஓட்ட முயல்கிறோம்.வாழ்வின் சவால்களை சந்திக்க சமாளிக்க நாம் படும் பிரயத்தளங்களை முயற்சிகளை இவ்வாறு பெயரிட்டார்கள்.
  
வாழ்வு என்பதை ஒரு எலியின் வாழும் வளை என்பார்கள்.ஒரு திறந்த தப்பிக்கும் பாதையை கண்டுபிடிக்க அது பல அடைப்பட்ட வழிகளில் போய் திரும்பி திரும்பி தடுமாறுகிறது.அது போலவே நாம் துன்பக்கரைபக்கம் போகாமல் இன்பக்கரை பக்கம் வருவதற்காக பல நூறு சமாளிப்பு வேலைகள் செய்கிறோம்.இது சில நேரங்களில் நன்மையாக முடிகிறது.அதை ஆஆஆஆஆஅ என்றார்கள்.ஆனால் பல நேரங்கலில் தீம்கையாக முடிகிறது அதிகமாக வழக்கி துன்பக் கடலில் போய் மூழ்கிறோம் இதை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்றார்கள்.

மனம் என்பது பரிணாம வளர்ச்சியில் முதலில் சில பழக்கங்களை முயற்சி செய்து பார்த்தது இயற்கையாக உணவு,உறவு,உறக்கம் என்ற மூன்றும் இன்பம் தந்தன.
  
ஆனால் இன்றும் இதை அளவுக்கதிகமாக உபயோகித்து அழிபவர் அதிகம்.வாழ்வதற்காகவே சாப்பிடுகிறோம்.ஆனால் பலர் சாப்பிடவே வாழப் பிறந்தவர் போல சாப்பிட்டுக் கொண்டே சாகிறார்கள்.மனச் சோர்வில் பலருக்கு அதீத உணவு இன்பம் தருகிறது.கவலைகளை மறக்க,மயக்க மருந்தாக போதையாக அதீத உணவு,அதிக உறவு,அதிக உறக்கம் அவர்களுக்கு வடிகாலாகிறது.
  
விளைவு உடல் பருத்து தீவிர நோயாளியாகிறார் அது போலவே துன்பம் தவிர்க்க உடலுறவு இன்பத்தை நாடி அடிமையாகிறார்.தீராத காமம்,திருமண முன் உறவு,திருமணம் தாண்டிய உறவு,பிறரது மணைவிகள் தொடர்பு விலைமகளிர் தொடர்பு,பாலியல் வக்ரங்கள் பல வற்றில் அடிமையாகிறார் உடல் நோய் மன நோய் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கபடவும் வாழ்வின் பாதை திசை மாறவும் இவரது உடலுறவு பழக்கங்கள் காரணமாகிறது.பாதிக்கப்படுவது பெண்கள் என்றால் தீமைகளின் விளைவுகள் மிக தீவிரமானது இயல்பான காமமே அளவு மீறி நோயாக தொடங்குவது வாலிப பருவம்தான்.
 
அதற்கடுத்தது உறக்கம் பலருக்கு தப்பிக்க தெரிந்த ஒரே வழி உறங்குவது.தூங்கியே வாழ்வின் தோற்றவர்கள் ஏராளம் இந்த மூன்றையும் அளவோடு உபயோகித்தால் நிச்சயம் நல்ல இன்பம் தரும்.ஒரு நாளில் மூன்றில் ஒருபங்கு உறக்கம் ஒரு நாளுக்கு மூன்று முறை உணவு மூன்று நாளுக்கு ஒரு முறைஒரே பெண் உறவு இவை முறையாக அளவிடப்பட்ட இன்பங்கள்.எல்லை தாண்டியவர் கண்டதெல்லாம் துன்பமே.   இன்னும் கொஞ்சம் மனிதன் பணம் பொருள் உறைவிடம் பாதுகாப்பு எனப்து வசதிகள் வளர்ந்ததும் மனதை சாந்தபடுத்த இசை, நாடகம்,கலைகள்,விளையாட்டு என்ற பொழுதுபோக்கு அம்சங்களை வளர்த்தான்.
 
இவை ஆரம்ப காலங்களில் நிச்சயமாக மனதுக்கு நலத்தையும் வளத்தையும் கொடுத்தன.ஆனால் காமம்,வியாபாரம்,போட்டி,பொறாமை,சூது என்ற நஞ்சு கலந்ததும் இவற்றில் பல பழக்கங்களும் தீமையாகி விட்டன.முக்யமாக விளையாட்டு பொழுது போக்காக தொடங்கிய சூதாட்டம்,சீட்டாட்டம்,லாட்டரி போன்றவை அதிக துன்பம் தரும் பழக்கங்களாக மாறின இசை, நாடகம்,கலைகள் எல்லாம் சினிமா என்ற பெரிய திரை மற்றும் சின்ன திரை மறைவில்  மனிதனை அடிமையாக்கி அவனது அமைதியை கெடுத்தன.
 
இலக்கியங்களும்,புத்தங்களும் காம கோபம் குரோதம் வன்முறை பழிவாங்கும் உணர்வுகளை தூண்டும்வசிய முறைகளாகியப் போனதால் அதில் அடிமையானவர்களும் துயர்களையே சந்தித்தார்கள்.
 
இறுதியாக ஆண்மீகம் புதிய ஒளியுடன் வந்து மனித மனங்களுக்கு ஆறுதளிக்க வந்தது.மத போட்டிகளும் மத குருமார்களது தந்திரங்களும் இறுதியில் உபயோகமில்லாத சடங்குகளுக்கும்,மூட நம்பிக்கைகளுக்கும்  மக்களை அடிமையாக்கிவிட்டது.    
  
உண்டு பார்த்தான் உறங்கிபார்த்தான் கண்டவர் யாரோடும் உறவு கொண்டு பார்த்தான் கூத்தாட்டம் கொண்டாட்டம்,சூதாட்டம்,சீட்டாட்டம் எல்லாம் முயன்று பார்த்தான்.புத்தகங்கள்,பெரிய திரை,சின்னதிரை அத்தனைக்குள் சென்று பார்த்தான்.ஆன்மீகம்,மந்திரம்,தந்திரம் எந்திரம்,ஆருடம்,சாதகம் அத்தனையும் மூழ்கிபார்த்தான் எத்தனை சமாளிக்க முயற்சிகள் ஆனால் பலருக்கும் திருப்தியடையவில்லை இஎத பழக்கங்களால்.
  
ஆராய்ச்சி செய்த மனிதன் எதற்கு தலையை சுற்றி மூகை தொட வேண்டும். நேரடியாக தொட்டால் என்ன என்று சிந்தித்தான் இன்பம் தரும் மூளை நரம்பு மண்டலத்தையே நேரடியாக இயக்கி பார்க்க ஆராய்ச்சி பல செய்தான்.காப்பி,தேநீர்,புகை,கஞ்சா எல்லாம் பயரி செய்து பழகி ருசித்தார்கள்.சோம பானங்கள் மதுரசங்கள் வடித்து மகிழ்ந்தார்கள்.
  
இப்படி மூளையை பொம்மலாட்டாம் ஆடும் பொம்மை போல ஆட்டி வைத்தார்கள்.திட திரவு வாயு  பொருள் என பல் நூறு வகை மருந்துகளை கண்டு பிடித்தனர் இந்த போதை விஞ்ஞானிகள் இந்து துயர குகைக்குள்ளே மாண்டவர்கள் கோடி கோடி.
  
இன்றும் போதையின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றன.அதிர்ஷ்ட வசமாக பெண்கள் இனம் இந்த சீரழிவுகளில் அதிகமாக சிக்கி கொள்ளாமல் தப்பித்து வருகிறது,ஆனால் அதுவும் இந்த நூற்றாண்டு எல்லை வரை தாக்கு பிடிக்காது என்று தோன்றுகிறது நாளுக்கு நான் நாட்டுக்கு நாடு பெண்களும் போதை பழக்கங்களுக்கு மேலும் மேலும் அடிமையாகி வருகிறார்கள்.
  
15 வயது முதல் 40 வயது வரை உள்ள மிக முக்யமான வாழ்வின் 30 வருடங்களில் பலர் இந்த போதையால் பாதை மாறிப் போகிறார்.
  
மிருகத்திலிருந்து சமூக மிருமாகி,மனிதனாகி சமூக மனிதனாகி புனிதனாகி மாமனிதானாகும் பரிணாம  வளர்ச்சியின் பல திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் இது போன்று தீமையான பழக்கங்கள் இடையூறாக இருக்கிறது.
  
நல்ல பழக்கங்கள் நாளும் குறைவதும் தீய பழக்கங்கள் தினம் தோறும் வளர்வதும் தெளிவாக தெரிகிறது.தனிமனிதன் மிது குடும்ப,சமுதாய,தேசிய,கலாசார கட்டுபாடுகள் தளர்ந்து தனிமனித சுதந்திரம் அதி வேகமாக வளர்கிறது.இது ஒரு வகையில் மிகவும் நன்மை தரும் தனிமனித சிந்தனையும் செயலும் விரிவடைந்து வளர மிக உபயாகமாகிறது நல்லவர்கள் மிகமிக வல்லவர்களாக மாறுவதற்காக இது பயன்படுகிறது.
        
ஆனால் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதன் கால் போன போக்கில் கெட்டுவிட வாய்ப்பானது.எதுவும் தவறில்லை எவருக்கும் அடிமையில்லை என்ற தனிமனித தத்துவம் பல விதமான தீய பழக்கங்களை ஆராய்ச்சி செய்கிறது அதிலே அடிமையாகிறது.கொஞ்ச கொஞ்சமாக பெற்றோர்,ஆசிரியர்,அயலார் என்ற கண்காணிப்பு தளர்கிறது.அதிகாரிகள்,அரசினர் தனிமனிதனை பற்றி என்களுக்கு ஆர்வமில்லை அக்கறையில்லை அடுத்தவர்க்கு தொல்லை கொடுகாதவரை அவனைப்பறி எங்களுக்கு நினைவுமில்லை   என்று விட்டு விட்டார்கள்.
       
பலருக்கு வாழ்வதற்காக கிடைத்த விடுதலை தாழ்வதற்கு பயன்படுகிறது  நெரடியாக மனதை மயக்கி மகிழ்விக்கின்றன போதை பழக்கங்கள் இதன் விளைவாக இன்பத்தின் கொள்கை துன்பத்திற்கு பாதையாகி விடுகிறது கண் விழித்து பார்க்கும் முன்பு வாழ்வு எனும் வாகனம் திரும்ப முடியாத ஆழாத்துக்குள் போய்விடுகிறது.
       
ஆனால் இது நன்று இது தீது என்று எல்லோருக்கும் தெரியுமே? பஞ்சமாபாதகங்களில் கள்ளும் காமமும் முதல் என்று மூடருக்கு கூட புரியுமே?பழக்கங்களை சமாளிப்பது எப்படி அதுதானெ புரியவில்லை அதைச் சொல்லுங்கள் என்கிறார் பலர் ஆனால் அவர் கேட்கும் போது தீயபழக்கங்களில் கழுத்து வரை மூழ்கி போய் கிடக்கிறார்.
     
எனவே இளைமயில் அது கூட தாமதம்தான் குழைந்தை பருவத்திலேயே நல்ல பழக்கங்கள் விதைக்கபட வேண்டும் தீய பழக்கங்கள் தடுக்கப்பட வேண்டும் ஆனால் இதை சொல்வது சுலபம் செய்வதுதான் கடினம்.
     
பல பெற்றோர்கள் தனது குழைந்தைகள் வயதுக்கு மீறிய கேவலமான தகாத வார்த்தைகளை பேசுகிறது பள்ளியில் போய் கற்று கொண்டது என புகார் செய்கிறார்கள் ஆனால் குழந்தையை கேட்டால் இது வீட்டிலிருந்துதானே கேட்டறிந்தேன் என்கிறது
    
உண்மையில் தொப்பியை கழற்றி எறிந்தால் குரங்கும்தொப்பியை தொப்பியை கழற்றி எரியும் என்பது தான் நமக்கு தெரியுமே,குழந்தைகளும் அப்படித்தானே நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை கழற்றி எறிந்தால் எதிர்கால சந்ததிக்கே அது தெரிய வராதே
       
நன்னடத்தை என்பது கற்பதுதானே நல்ல பழக்கவழக்க‌ங்கள் அப்பா,அம்மா ஆசிரியர்,அயலார்களின் அச்சடித்த பிரதி போலத்தானே அடுத்த தலைமுறை வளர்கிறது இவர்களது நடத்தைகள் முன் மாதியாக அமைந்து விட்டால் பாடமும் தேவையில்லை.
  
இளம்வயதிலேயே நல்ல பழக்கங்களின் நன்மைகளையும் தீயபழக்கங்களின் தீமைகளையும் மனதில் ஆழமாக பதிவு செய்ய வேண்டும்.இது நேரடியான போதனைகளாக இருக்க கூடாது மறைமுகமான சுவையான செய்திகள் பயிற்சிகள் வழியாக இவை செயல்பட வேண்டும்.ஜந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது என்பார்கள்.

 தீமையான பழக்கங்களை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து கொடுக்கபட வேண்டும் புகைபழக்கம் உடல் நலத்துக்கு கெடுதி மதுபழக்கம் மன நலத்துக்கு கெடுதி என்று ஒப்புக்காக கடமைகள் எழுதி ஒட்டிவிட்டால் என் கடமை தீர்ந்தது என அரசு இருந்து விடக்கூடாது தீமை என விளம்பரபடுத்தும் வியாபாரிகளும் அரசும் அதை வியாபாரம் செய்வது ஏன்?
 
ஒரு கோலா பட்டியல் ஒரு துளி நஞ்சு என பதட்டபடும் அரசு முழு பாட்டிலும் நஞ்சான மதுவைப்பற்றி கவலைப்படாதது ஏன்
  
எனவே இந்த மாதிரியான கால கட்டத்தில் ஒரு தனி மனிதன் தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளவில்லை என்றால் வேறு வழியில்லை.யாரும் அவரைப் பற்றி கவலைப் பட போவதில்லை.தகுதியுள்ளதே வாழும் தகுதியற்றவை எல்லாம் சாகும் என்ற மிருகத்தனமான பரிணாம த‌த்துவம் முதலாளித்துவமாக நிலவுகிறது.
 
இன்று தனிமனித நடத்தை,ஒழுக்கம்,வலிமை அந்தஸ்து,பொருளாதாரம் பாதிக்கபட்டால் அவரது துணையும்,அவரது குழந்தைகளுமே அவரை புறக்கணிக்க த்யங்குவதில்லை இன்று தீய பழக்கங்களால் உடல் ந,மன நல பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே சமூக பாதிப்புகள் நிறைய அவர் கெடும் போது யாரும் தடுப்பதில்லை அவர் கெட்ட பின்பு யாரும் கைகொடுப்பதில்லை.வெறுத்து ஒதுக்கப்பட்டு வீதிக்கு வரும் நிலை ஏற்படுகிறது.
 
வந்தபின் சமாளிப்பது கடினம் தீய பழக்கங்களை மன வாசலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்தவதே நல்லது.சுலபமானது அல்ல,ஆனாலும் உறுதியாக தடுப்பதே நல்லது.

பெண்கள் சேமிக்க உதவும் முதலீடுகள்..?



தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.


1. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.


2. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்கு பற்றிய விஷங்களை நன்கு அறிந்திருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் நிறைய லாபம் சம்பாதிக்கலாம். எனினும் இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களின் துணையுடன் இவ்வியாபாரத்தில் இறங்குவது நன்மை தரும். இல்லையென்றால் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.


3.நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.


4.பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.


5. முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.


6. பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை.


மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்

குரைக்கும் நாயை அமைதிப்படுத்த சில வழிகள்!!!




குரைக்கும் நாயை அமைதிப்படுத்த சில வழிகள்!!!


வீட்டில் நாயை செல்லப் பிராணியாக வளர்க்கும் போது, அனைத்து நாய்களும் செய்யும் ஒரு எரிச்சலூட்டும் விஷயம் தான் குரைப்பது. நாயும் மனிதரைப் போல் தான். ஒரு கட்டத்தில் அதற்கும் அழுப்பு தட்டிவிடும். அப்போது அது தனக்கு போர் அடிக்கிறது என்பதை குரைப்பதன் மூலம் வெளிப்படுத்தும்.


அதுமட்டுமின்றி வெறும் போர் அடிக்கும் போது மட்டும் நாய் குரைப்பதில்லை. சந்தோஷமாக இருந்தாலும், கோபமாக இருந்தாலும், ஆபத்தின் போதும் கூட நாய் குரைக்கும். ஆனால் சில சமயங்களில் நாயானது மற்றவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் எப்போதும் குரைத்துக் கொண்டே இருந்தால், அப்போது அதனை அடக்குவது என்பது சற்று கடினமான விஷயமே. அதற்காக குரைப்பதை நிறுத்த வேண்டுமென்று, அதனை அடித்தால் மட்டும் சரியாகிவிடாது. அதனை புரிந்து கொள்ள வேண்டும்.


ஏனெனில் நாய் எப்போதும் தேவையில்லாமல் தொடர்ச்சியாக குரைக்காது. சரி, இப்போது குரைக்கும் நாயை எப்படி சாந்தப்படுத்துவது என்று பார்ப்போம். அதிலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குரைத்துக் கொண்டே இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் சொன்னால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம்.


* நீங்கள் வீட்டில் இல்லாத போது நாய் குரைக்காமல் இருக்க வேண்டுமானால், அதற்கு ரப்பர் பொம்மையைக் கொடுத்து சென்றால், அது அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கும். இதனால் நீண்ட நேரம் குரைக்காமல் இருக்கும்.


* அக்கம் பக்கத்தினர் வந்து சண்டை போடும் வகையில் உங்கள் நாய் குரைத்தால், அதனுடன் பேசுங்கள். பேசினால் நாய்களுக்கு புரியாது என்று நினைக்க வேண்டாம். அது மனிதரைப் போலவே நன்கு புரிந்து கொள்ளும் திறன் கொண்டது. எனவே அதற்கு புரியுமாறு சொல்லுங்கள்.


* நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால், வீட்டினுள் நாயை கட்டிப் போட்டிக்கும் போது, வீட்டில் ரேடியோவை போட்டு விட்டு செல்லுங்கள். இதனால் அது வீட்டில் ஒருவர் இருப்பது போன்று உணர்ந்து, தனிமையை தவிர்த்து, குரைப்பதை நிறுத்தும்.


* நீங்கள் அனைத்தும் செய்தும், ஏன் நீங்கள் அதனுடன் இருக்கும் போதே தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தால், அதற்கு ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஆகவே அப்போது அதனை நன்கு கவனித்து, முடிந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்துப் பாருங்கள்.


* எதுவும் முடியாவிட்டால், நாயை பார்த்துக் கொள்ள ஒருவரை விட்டு செல்லுங்கள் அல்லது அதனை நன்கு பழகும் பக்கத்து வீட்டில் விட்டு செல்லுங்கள். இதனால் அது தனிமையை தவிர்த்து, குரைக்காமல் இருக்கும்.

கணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்....?




கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி?


குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?


1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10. குழந்தைகள்
   
   
 கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?



1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
   
   
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?


1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.
33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.
   
   
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?


தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.


பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
   

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?



பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
   
   
உங்கள் பங்கு என்ன?



உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.


1. அன்பாகப் பேசுவது.
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7. முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.
10. பணிவு.
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு.
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

ஆத்ம சக்தி (Will Power)...??



இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான். ஆனால் நாம்தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை எப்படி வெளிக்கொணர்ந்து இயக்குவது என தெரிந்துகொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.


இறைவன் உள்மனம் மூலமாக இயங்கி நாம் பிறந்தது முதல் இறப்புவரை நம்மைக் காப்பாற்றி நம் உடம்பை இயக்கிக் கொண்டே இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு நம்மிட முள்ள சக்திகளை எப்படி உபயோகிப்பது எனவும் தெரிந்துகொண்டால் நாம் வாழ்க்கை யில் நமது கஷ்டங்களை எல்லாம் நிவர்த்தி செய்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.


நம்மிடம் தேங்கிக் கிடக்கும் மகா சக்திகளை கண்டுபிடித்து அவைகளை நாம் உபயோகப்படுத்தி நமக்கு வேண்டிய செல்வங் கள், தொழில்கள், படிப்பு ஆகிய வசதிகளை மேம்படுத்திக்கொண்டு இன்பமாக வாழலாம்.


இதற்குத் தேவை திட நம்பிக்கையும், தைரியமுமே. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். நம்மேல் நமக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ஆத்ம சக்தியை (will power) வளர்த்துக்கொள்ள வேண்டும்.


ஆத்ம சக்தி என்பது நம்மிடம் உள்ளது தான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது. உருவம் அற்றது தான். ஆனால் அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் மட்டுமே அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.


முதலில் நமக்கு மனோ திடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு சுய நம்பிக்கை மந்திரத்தை முதலில் மனப்பாடம் செய்து மனதில் பதியவைத்துக் கொள்வோம்.


“சகல அறிவுகளுக்கும் ஊற்றாகிய
என் உள்மனமே
நான் நினைப்பதை முடிக்கும் வல்லமை
என் உள்மனதுக்கு உண்டு.
என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை.
நான் செய்வேன்; நான் செய்வேன்; என்னால்
எதுவும் செய்ய முடியும். என் சக்தி அபாரமானது
அந்த அபார சக்தியால் என்னால்
செய்து முடிக்க முடியும்; நான் செய்வேன்.”


இனி நாம் எந்த காரியத்தையும் செயல்படத் துவங்கும் முன் இந்த சுய நம்பிக்கை மந்திரத்தை ஒரு முறைசொல்லிவிட்டு மற்ற வேலைகளை ஆரம்பித்தால் எல்லாமே வெற்றிகரமாக முடியும்.


நம்மிடமுள்ள அளப்பரிய சக்தியை நமக்கு நாமே உணர்வதில் மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration) மற்றும் தன்னை அறிதல் (Know thyself) ஆகிய இரண்டு செயல்கள் முக்கியமானவை.


மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration)


மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது ஒன்றிலேயே சூழ்ந்து சிந்தனையை சிதறவிடாமல் நிறுத்துவது ஆகும். ஒன்றை அடையவேண்டும் என்ற விருப்பமானது உறுதியுடனும், திடமுடனும் யாரிடத்தில் வேரூன்றி இருக்கிறதோ அவரே அந்த விருப்பத்தில் திட சித்தத்தை செலுத்தி தான் விரும்பியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.


மனிதனால் முடியாத காரியம் எதுவும் இல்லை. நம்மால் எதையும் செய்து முடிக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். மனித சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியானாலும் காரியங்களை செய்து முடிக்க முடியாது.


இந்த சக்தியை தெரிந்து பயன்படுத்தி பலவிதமான சித்துக்களையும் காட்டி மறைந்த பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள், நாயன் மார்கள், ஆழ்வார்கள், மகான்கள் போன்றவர்கள் எல்லா மதத்திலும் தோன்றி மறைந்து இருக்கிறார்கள்.


இவைகளை தெரிந்தும், படித்தும், கேட்டும் இன்னமும் செயல்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். காரணம் நம்மை நாம் அறியாததே. நமது சக்தியின் தன்மையை நாம் தெரிந்து செயல்பட்டால் இவ்வுலகில் நாம் சுகபோக வாழ்வு வாழலாம். அதற்கு,


1 ) முதலில் நமது எண்ணங்களை நமக்கு எது தேவையோ அதிலேயே நிறுத்தி வைக்க வேண்டும். மனதில் வேறு பல எண்ணங்கள் புகவிடாமல் மனம் அலைபாயாமல் – நமது என்ன அலைகளை சிதறவிடாமல் ஒரு பிடியாக நாம் நினைத்த காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.


2 ) ஆத்ம சக்தி என்ற நமது மனோதிட சக்தியை நமது எண்ணம் எதுவோ அதிலேயே இருக்கச் செய்ய வேண்டும்.


3 ) நமது விருப்பங்களை இடைவிடாமல் ஏற்றத் தாழ்வு இல்லாமல் சமநிலையில் வைராக்கியத்துடன் எண்ணி அதிலேயே ஊன்றி கவனத்தைச் செலுத்தி வரவேண்டும்.


4 ) நாம் விரும்பும் காரியம் முடியும்வரை அதிலேயே மனதை வைத்து செயல்பட வேண்டும். வேறு சிந்தனை கூடாது. எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் இருந்து நினைத்ததை சாதிக்க வேண்டும்.


நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு எண்ணத்தை மனதில் நிறுத்தி தொடர்ந்து அமைதியாவும், அழுத்தமாகவும் அந்த எண்ணத்தை பற்றியே மனதில் தியானத்துக் கொண்டு இருப்பதே மனதை ஒரு நிலைப்படுத்தும் நிலையாகும்.


இந்த மனதை ஒரு நிலைப்படுத்தும் விதத்தைப் பயிற்சிகளினால் தான் பழக்கத்துக்குக் கொண்டுவர முடியும். மனதை ஒரு நிலைப்படுத்தி நிற்பது கடினம். காரணம் மனதில் ஆயிரக்கணக் கான எண்ணங்களை வைத்துக்கொண்டு நம் சிந்தனையை பல வழிகளிலும் சிதரவிட்டுக் கொண்டு பலவற்றையும் எண்ணிக்கொண்டே இருப்பதுதான்.


நமக்கு எது வேண்டுமோ அந்த எண்ணத்தையே அடிக்கடி மனதில் எண்ணி அதே எண்ணத்தில் விடாப்பிடியாக இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியும்.

யார் முட்டாள்..?



அமெரிக்க பாடசாலை ஒன்றில் எட்டரைவயது சிறுவனை "இவன் அடிமுட்டாள். பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் கெடுத்து விடுவான். இனி இவனுக்கு பாடசாலையில் அனுமதி இல்லை." என்று ஒர் கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டது. தாயார் கவலை கொண்டாலும் தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாய்யின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்.., பின்னாளில் ஆராட்சிகளில் ஈடுபட்டார்.

இன்றும் அக்டோபர் 21ம் திகதி மாலை 9:59க்கு வீதி பயணவிளக்குகளை தவிர மிகுதி மின்சார விளக்குகள் அனைத்தையும்அணைத்து ஓருநிமிடம்அமெரிக்காவை இருளாக்கி விட்டு மீண்டும் ஒளிரவிட்டு தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., "எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படிதான் இருளாக இருந்து இருக்கும்..!"

மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாலில் விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் அல்வா எடிசன் ஆவார். இப்போ சொல்லுங்கள்..! அந்த ஆசிரியர் கூறியது போல் எடிசன் முட்டாளா..?ஆகவே யாரும் இங்கு முட்டாள் இல்லை.. நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயபடுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொர் வைரம் இருக்கிறது. அதை பட்டை தீட்டுங்கள்.

தோல்விக்கு நன்றி சொல்!



ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு இலக்கை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறான். இவை குறுகிய கால இலக்காகவோ அல்லது நீண்ட கால இலக்காகவோ இருக்கலாம். இருந்தபோதிலும், அவற்றிற்கேற்ப அவன் சில இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனினும் அவற்றில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று உயர்ந்து நிற்க முடிகிறது. பலர் வெற்றிப்பாதையில் வரும் தடைகளை எண்ணி மனம் துவண்டு தனது குறிக்கோள்களைக் குறுக்கிக் கொள்வது அவர்களின் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது. எவ்வித தடை வருமாயினும் சிலர் குறிக்கோள்களை விடா முயற்சியுடன் அடைய முனைவதே தன்னம்பிக்கையாகும்.


வெற்றியாளர்களில் இருவகை, ஒன்று வெற்றிக்கான அடிப்படை வசதிகள், அனைத்தும் கொடுக்கப்பட்டவர்கள், மற்றொன்று வெற்றிக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கி அதில் வெற்றி காண்பவர்கள். இவற்றில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களே மேலோங்கி நிற்பவர்கள். ஏனென்றால், இவர்களுக்கு எந்த வசதியும் எந்த ஒரு நபரின் உதவியுமின்றி, தனது தன்னம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்துச் செயல்படுவார்கள்.


இதற்கு ஒரு உளவியல் காரணமும் உண்டு. பல சாதனையாளர்கள் தங்கள் கடந்த வாழ்வில் ஒரு வேளை உணவிற்குக் கூட எதுவுமில்லாமல் கஷ்டப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். உளவியல் ரீதியாகச் சொல்லப்போனால், தேவை என்ற ஒன்று உருவாகும் போது ஏதாவது ஒரு இலக்கை அடைய வேண்டுமென்ற உந்துதல் பிறக்கும், அந்த இலக்கை அடையும் வரை அந்த உந்துதல் நீடிக்கும். இலக்கை அடைந்துவிட்டால் உந்துதலின் வேகம் குறைந்து கடைசியில் நின்று விடும்.


 இது நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் முதல் வானளாவிய சாதனைகள் வரை இந்த அடிப்படையிலேயே நமது மனம் செயல்பட்டு வருகிறது. தேவை என்ற ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் தோன்றக்கூடிய ஒன்று, பிறந்தது முதல் சாகும் வரை ஏதாவது ஒரு தேவை நம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது. இதனையே Motivational Process என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.


எனவே, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். நிறைவேறும் வரை போராடிக் கொண்டிருக்கிறான். இந்த இலட்சியப் போராட்டத்தில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். பலர், இடர்வரும் தடைகளால் மனம் துவண்டு குறிக்கோளை விட்டுவிடுகிறார்கள். தன்னம்பிக்கை இழந்து, மனச்சோர்வடைந்து “எனது விதி”, “என்னால் இயலாது”, “சூழ்நிலைக்காரணம்” என்றெல்லாம் புலம்பும் குணத்தைக் காணலாம்.


இவை அனைத்திற்கும் காரணம், இலட்யத்தை அடைவதற்கான குணாதிசயங் களை வளர்த்துக் கொள்ளாமையே. அவரவருக் கேற்ப துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் தன்னுடைய முழு ஈடுபாட்டையும், உடல் உழைப்பையும், தன்னம்பிக்கையோடு உட்படுத்தினால் வெற்றி நிச்சயம்.


இவை எல்லாவற்றிற்கும் மேலாக தோல்வியைக் கண்டு துவண்டு போகாத குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு இலட்சியப் பயணத்திலும், தோல்வி யென்பது இல்லாமல் வெற்றி பெற இயலாது. இடைவரும் தடைகளால் தோல்வியும், சரிவும் வரும்போது அவற்றைக் கண்டு மனம் தளரா மலும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம். வெற்றியாளர்களைப் பட்டியலிட்டால், தோல்வியே அவர்களை உந்திய மாபெரும் சக்தியாக இருந்திருக்கும். அவர்கள், தோல்வியையும், சரிவுகளையும், வெற்றிப்படிகளாகவும், சிறந்த அனுபவங் களாகவே அனுசரித்திருக்கிறார்கள்.

சாப்பிடுவது எப்படி?




சாப்பிடுவது எப்படி?


ஓட்டல்களில் அதுவும் பெரிய ஓட்டல்களில் சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அவை:

 < கத்தி, முள் கரண்டிகளுடன் சாப்பிடும்போது கத்தியை வலது கையிலும், முள் கரண்டியை இடது கையிலும் பிடித்துக் கொள்ள வேண்டும்.

 < ஐஸ்கிரீமை கரண்டியால் எடுக்கும்போது உங்கள் பக்கமாக வெட்ட வேண்டும். சூப்பாக இருந்தால் எடுக்கும்போது கை உங்கள் புறத்திலிருந்து எதிர்ப்புறமாகப் போக
 வேண்டும்.

 < சூடான பொருளை வாயால் ஊதிச் சாப்பிடக் கூடாது.

 < கப்பில் காபி சாப்பிடும்போது அதன் காதைக் கட்டை விரலாலும் மற்ற விரல்களாலும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆள்காட்டி விரலை அதன் காதில் நுழைத்துக் கொள்வது அநாகரிகம்.

 < சாப்பிடும்போது உங்கள் உதடுகள் மூடியே இருக்க வேண்டும். முழங்கையை மேஜை மீது ஊன்றிக் கொள்ளக் கூடாது.

 < ஸ்பூனைக் காலியான கப்பிற்குள் வைக்கக் கூடாது. சாஸர் மீது தான் வைக்க வேண்டும்.

 < சாப்பிட்டு முடித்த பிறகு கத்தியையும் முள் கரண்டியையும் சேர்ந்தாற்போல் தட்டின் நடுவில் உங்கள் பக்கம் இருக்கும்படி வைக்க வேண்டும்.

 < ஸ்பூனில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஐஸ்கிரீமை நக்கக் கூடாது.

 < மீன் முள் அல்லது சிறிய எலும்பு வாயில் மாட்டிக் கொண்டால் வாயில் விரலை விட்டு எடுக்கலாம். இது மட்டும் பரவாயில்லை.

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!



கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.


இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர்.


பெருமளவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இந்த காலத்தில் இத்தகைய தவறான நம்பிக்கைகளையும் நாம் கைவிட மறுக்கிறோம். இத்தகைய தவறான கணிப்புகளையும், எண்ணங்களையும் இக்கட்டுரையில் காண்போம். அதிலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் முதலில் சரி என்று எண்ணிய பின் மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியால் இது தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அப்படி உண்மை என்று நினைக்கும் சில பொய்யான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
   
   
குளிர்காலத்தில் ஈரமான தலையுடன் வெளியே சென்றால் சளி பிடிக்கும்


தலையில் தொப்பி போடு அல்லது உனக்கு மிகுந்த சளி பிடிக்கும்' இப்படி எல்லா அம்மாகளும் குளிர்காலம் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது சகஜம் தான். இது சம்மந்தமான பல கணிப்புக்களும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. இந்த அடிப்படையில் குளிர்காலத்தில் வெளியே செல்பவர்களை விட குளிர்காலத்தை அனுபவிக்காதவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது நிருபணமான உண்மை. இதில் ஈரமான தலை அல்லது ஈரமில்லாத தலை என்றெல்லாம் எந்தவித வித்தியாசமும் கிடையாது.

   
சர்க்கரை குழந்தைகளை சுட்டியாக்கும்



அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசனின் பத்திரிக்கை குழந்தைகளையும் சர்க்கரையையும் வைத்து 23 ஆராய்ச்சி பாடங்களை வெளியிட்டது. அதன் முடிவு சர்க்கரை குழந்தையின் நடத்தையை பாதிப்பதில்லை. ஆனால் இது உண்மையானதாக நம்மில் திணிக்கப்பட்டுள்ளது.
   
   
உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்கும்


98 சதவிகித உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்குகின்றது எனவும், ஆதலால் தான் குளிர்காலத்தில தொப்பி அணிய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற இடங்களிலும் கூறுவது உங்கள் உடம்பில் இருந்து வெளியேரும் சூட்டின் அளவு பெரும்பாலும் பரப்பளவை பொறுத்ததே - தொப்பி அணியாத தலையை விட குளிர் நாளில் விரிவடைந்த கால்கள் மூலமோ அல்லது கைகள் மூலமோ தான் அதிக சூடு வெளியேறுகிறது.
   
   
சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படும்


இது நியாயமானதாக தோன்றினாலும் உண்மையல்ல. சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படாது. மேலும் எந்த சான்றும் இதை நிரூபிக்கவும் இல்லை மற்றும் சிறிய ஆராய்ச்சிகள் இவற்றில் நடத்தப்படும் போது, சுடக்கு உடைக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் சுடக்கு உடைக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூட்டு வீக்கம் ஏற்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவந்தது. மருத்துவத்துறையில் சுடக்கு உடைப்பதால் எழும்பை சுற்றியுள்ள தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும் அல்லது தசை நார்கள் இடப்பெயர்வுக்கும் தான் இணைப்பு இருப்பதே தவிர சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான இணைப்பு இல்லை.
   
   
நெப்போலியன் குள்ளமானவர்



நெப்போலியின் பிரெஞ்ச் நாட்டு அரசர். அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் பல வரலாற்று வல்லுனர்கள் தற்போது அவரது கூடுதல் உயரத்தை தந்துள்ளனர். அவர் பிரெஞ்ச் யூனிட்ஸ் பயன்படுத்தி அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று கணக்கிடபட்டுள்ளது. இந்த பிரஞ்ச் யூனிட்ஸ்சை இம்பீரியல் யூனிட்ஸ்சாக மாற்றப்பட்டால் அவரது உயரம் 5 அடி 7 அங்குலம் என்று மாறுகிறது. இந்த உயர அளவு பொதுவான பிரெஞ்ச் நாட்டு மனிதரின் சராசரி உயரத்தை விட அதிகமாவே உள்ளது.
   
   
உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும்


வாம் அப்' அல்லது உடற்பயிற்சிக்கு முன் கால், கைகள் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் ஸ்ட்ரெட்ச் செய்த பின் பயிற்சியை ஆரம்பித்தால் உங்களது செயல் திறன் அதிகரிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை மறுக்கின்றனர். ஸ்ட்ரெட்ச் செய்து பின்னர் ஓடினால் அது 5 சதவிகிதம் குறைச்சலான இயக்கு திறன் காணப்படும். அதே சமயத்தில் இத்தாலிய வல்லுனர்களின் கருத்துப்படி ஸ்ட்ரெட்ச் செய்வதால் செயல் திறன் குறைகிறது. மேலும் இந்த கூற்று சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
   
   
முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்திற்கு கேடு விளைவிக்கும்


உணவில் சேர்க்கப்படும் கொழுப்பு வகைகளும் அது ஏற்படுத்தும் பாதிப்புக்களும் மற்றும் அதற்கான உணவு கட்டுப்பாட்டு முறைகளும், இரத்த குழாய் சார்ந்த நோயை உண்டாக்குபவை பற்றிய ஆராய்ச்சியில் 1960-ல் சிறிதளவு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உருவாகியுள்ளது. ஆனால் இதை தவறு என்று உணர்த்த மிருகங்களிடையே தேவையை விட அதிக அளவு கொழுப்பு சத்தை சேர்த்த போதும், அது உடலில் கொழுப்பை அதிகப்படுத்தவில்லை. ஆனால் சாச்சுரேட்டட் கொழுப்பை (இறைச்சிகளில் உள்ள கொழுப்புக்கள்) உட்கொள்ளும் போது தான் அதிகரிக்கிறது. ஆகையால் முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்தை பாதிக்காது.

   
நாயின் ஏழு வயது ஒரு மனித ஆண்டு



மூன்று வயது நிரம்பிய நாய்க்கு மனிதர்களின் வாழ்நாளில் 21 ஆண்டுகள் என்பது சரியா? வல்லுநர்கள் இதை தவறு என்கிறார்கள். ஒருமித்த கருத்து என்னவென்றால் மனிதர்களை விட நாய்களின் முதிர்ச்சி வேகமாக இருக்கும். 21 ஆண்டு முதிர்ச்சியை இரண்டு ஆண்டுகளில் அடைந்து பின்னர் மெதுவாக குறைந்து ஒரு வருடத்திற்கு நான்கு மனித ஆண்டாக மாறும். டாக் விஸ்பரர் சீசர் மில்லன் நாயின் மனித ஆண்டை பின் வருமாறு கணக்கிட வேண்டும் என்கிறார்: நாயின் வயதில் இரண்டை கழித்து அதை நான்கால் பெருக்கி அதோடு 21-ஐ கூட்ட வேண்டும். என்ன கணக்கு புரிந்ததா?

   
ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பற்கள் இருந்தது



20 வயதிலிருந்தே பற்களை இழக்க நேர்ந்த முதல் அமெரிக்க ஜனாதிபதிக்கு மரத்தால் ஆன பற்கள் இருந்தது என்பது தவறான கூற்று. அவருக்கு பற்கள் விழுந்தது உண்மை தான். அவரிடம் நான்கு பொய்யான பற்கள் இருந்தது அவை தங்கம், நீர்யானை தந்தம், ஈயம், மனித மற்றும் மிருகங்களின் பற்களால் ஆனவை. அக்காலத்தில் கழுதை மற்றும் குதிரையின் பற்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்த பற்களை ஒன்றாக பிடித்துக் கொள்ள பற்களுக்கிடையே போல்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் திறப்பதற்கு உதவியாக ஸ்பிரிங்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை முயற்சி அவருக்கு பிடித்த உணவான மேரி வாஷிங்டனின் சுவையான ஜிஞ்சர் பிரட் ஆகியவற்றை உண்ண முடிந்தது.

ஆளுமை தரும் அடையாளம்!




ஆளுமை தரும் அடையாளம்! ஆளுமை... நாம் நம்மிடையே காண்பது சுயதோற்றம். பிறர் நம்மிடையே பார்ப்பதுதான் ஆளுமை. பெர்சனாலிட்டி (personality) என்ற ஆங்கிலச் சொல்லை அடிக்கடி இன்று கேட்கின்றோம். இந்தச் சொல் ‘பெர்சனா’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதாகும்.

பெர்சனாலிட்டி என்ற ஆங்கிலச் சொல்லின் மொழியாக்கம்தான் ‘ஆளுமை’ என்ற இந்தச்சொல். ஆளுமை என்பது ஒருவரது மனப்பான்மையைப் பொறுத்து அமையும். ஒரு தனிமனிதனின் அகம், புறம் ஆகியவற்றின் வெளிப்பாடே ஆளுமையாகும்.

அகத்தின் வெளிப்பாடாக உணரப்படும் ஆளுமை என்பது உள்ளத்து அக உயர்வு எண்ணங்கள், ஆசை, மனதின் எழுச்சி, சிந்தனை, கற்பனைத்திறன், அன்பு, கோபம், மகிழ்ச்சி, சோகம், கனவு, இரக்கம், ஏக்கம், பொறாமை போன்றவையாகும். புறத்தின் வெளிப்பாடாக உணரப்படும் ஆளுமையாவது பிறருடன் பழகும் முறை, அன்பு செலுத்துதல், உண்ணுதல், ஆடை அணிதல், பிறருக்கு உதவும் மனப்பான்மை போன் றவையாகும்.

இவ்வாளுமைப் பண்புகளே ஒருவரின் தனித் தன்மையை வெளிப்படுத்துவதாகும். ஆளுமை என்பது ஒருவருடைய சிறப்பு, மேன்மை, மதிப்பு, புகழ், வெற்றி ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பாகும். சிறப்பு என்பது ஒருவருடைய நற்பண்பாகும். மேன்மை என்பது இந்த நற்பண்புகளால் கிடைக்கும் உயர்வாகும்.

மதிப்பு என்பது இவ்வுயர்வால் சமூகத்தில் கிடைக்கப் பெறும் அங்கீகாரமாகும். அங்கீகாரத்தில் கிடைக்கப் பெறுவது வெற்றியாகும். இத்தகைய கூறுகள் அனைத்தும் ஆளுமையின் வெளிப்பாட்டுக் கூறுகளாகும். ஆற்றல் மிக்க இளைஞர்களே ! இப்படி உங்களது ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பண்புகள்தான் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். ஆளுமை பற்றிய அடையாளங்கள் இன்னும் நிரம்ப இருக்கின்றன. உடல் தோற்றம், முகத்தோற்றம், நடை, உடை, பாவனை இவை போன்ற ஒட்டு மொத்த வடிவமாகும். ஆளுமை ஒருவர் மற்றொருவருக்கு எப்படித் தோற்றமளிக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

ஆளுமை என்பது ஒரு செயல். சமூகக் காரணிகளாலும் உருவாகிறது. பழக்க வழக்கங்கள், அறநெறிப் பண்புகள் மற்றும் சமூக நிறுவனத்திடம் மனிதன் கொண்டிருக்கும் ஈடுபாடு, பங்களிப்பிற்கேற்ப ஆளுமை அமையும். இனிய இளைஞர்களே ! உங்களுக்குள் இருக்கும் படைப்பின் ஆளுமை வெளிப்படுகின்ற பருவம் இந்தப் பருவம்.

எந்த ஓர் உழைப்புக்கும் ஒரு கருவி தேவைப்படுகிறது. கரும்பை வெட்ட ஒரு கத்தி, களையெடுக்க ஒரு களைக் குச்சி, கதிர் அறுக்க ஒரு பண்ணரிவாள், அப்படித்தான், எழுத ஒரு பேனா. சொற்களை கருவியாகக் கொண்டு உழைக்கிற உழைப்பு படைப்பு.

சொல்லின் ததும்பல் நேயத்தை வளர்க்கும். நேயம் பிறரது நெஞ்சை நெகிழச்செய்யும். நந்தவனத்தில் மெல்ல நடக்கும் போது நம் மீது பரவும் பூமணமும் புன்னகைக்கும் பூக்களும் தரும் நலனை நல்ல படைப்புகள் தருகின்றன. உங்கள் மனதை இதில் உலவ விடுங்கள்.

இப்படி எந்தக் கருவியை எப்படி எப்படிக் கையாளுவது என்பதில் தான் ஆளுமை அடங்கியிருக்கின்றது. உங்களிடம் வெளிப்படும் சிந்தனை, செயல், எண்ணம், மொழி, மனம், ஒழுக்கம், சமூக உறவு போன்றவைதான் உங்களுடைய ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்தும். பிறருக்கு உங்களை அடையாளப்படுத்தும்!

Saturday, 4 January 2014

உண்மை தேடுவோர் வாழ்வில் ஓய்தல் என்பது இல்லையே...?



உண்மை



உண்மை தங்க ஒரு வீடின்றி ஒரு இதயத்தை தேடி அலைகிறது

உண்மை அதிட்டம் என்பது புனிதங்களின் புனிதத்திலிருந்தே துவங்குகிறது

உண்மை அன்பு ஒரு போதும் சந்தேகப்படாது பழிவாங்காது

உண்மை அன்பு துயரப்படுமே தவிர துரோகத்துக்கு பழி வாங்காது

உண்மை அனைத்தும் பேசப்பட்டு இருக்க வேண்டியதில்லை

உண்மை உண்மையானது என்ன சொன்னோம் என்பதை மற்ந்துவிடும்

உண்மை உணர வேண்டும் உள்ளம் தெளிய வேண்டும்

உண்மை உணர்ந்ததும் உற்சாகமாய் இருப்பவன் ஞானி

உண்மை உணர்ந்து வருந்துபவன் உத்தம வெற்றியடைவான்

உண்மை உனர்வுகள் நல்ல கவிதையாகுவதில்லை

உண்மை என்பது உயிரோட்டமுள்ளது இயக்கமுள்ளது நிற்பதில்லை

உண்மை என்பது ஒளி போலக் கூசும்

உண்மை என்பது திரையிடப்பட்டுள்ளது சத்யத்தை நேசிப்பவரே காண முடியும்

உண்மை என்பது வினோதமானது கற்பனைக் கதையை விட

உண்மை என்பதும் ஒரு அழகே,அழகென்பதும் ஒரு உண்மை

உண்மை என்ற தத்துவம் உலகை விட்டு மறைந்து வருகிறது

உண்மை ஒரு அடி நடப்பதற்குள் பொய் உலகை ஒரு சுற்று சுற்றி விடும்

உண்மை ஒரு போதும் அனாதையில்லை ஊர் கூடி தேரிழக்கும்

உண்மை ஒருநாள் ஒளிரும்

உண்மை ஓரடி வைப்பதற்குள் பொய் உலகைச் சுற்றிவருகிறது

உண்மை தெரிந்தும் ஊமையாய் இருப்பவன் கோழை

உண்மை தெரியும் உலகம் புரியும் படிப்பாலே

உண்மை தேடுவோர் வாழ்வில் ஓய்தல் என்பது இல்லையே

உண்மை நடந்து போய் சேர்வதற்குள் கயமை பறந்து சென்று கடைவிரிக்கிறது

உண்மை பயின்று கயவனாய் ஆசையிலிருந்து விடுபடுவதே பேரின்பம் ‍

உண்மை பயின்று தூயவனாய் ஆசையிலிருந்து விடுபடுவதே பேரின்பம்

உண்மை பரிசோதிகப்படலாம்

உண்மை புறப்பட்டு வாசல் வருவதற்குள் கயமை வானத்தை சென்று விடும்

உண்மை பேசியதால் உருவான எதிரிகள் அதிகம்

உண்மை போல பொய் பேசுவதே அரசியல் விவேகம்

உண்மை மட்டுமே தெய்வம் என்றால் நாத்திகரும் மறுப்பதில்லை

உண்மை மருந்தை விடக்கும் ஆனால் நோய்தீர்க்கும்

உண்மை முதலில் கேலி செய்யப்படுகிறது/ எதிர்க்கப்படுகிறது இறுதியில் ஏற்கப்படுகிறது

உண்மை, நேர்மை , தூய்மை,நீதி, அன்பு மற்றும் நன்மை என பல உருவங்கள் வாய்மைக்கு

உண்மைக்கு காலமில்லை ஏனென்றால் அது நிரந்தரமானது

உண்மைக்கு தொண்டு செய்யும் உத்தமாக்கு என்னும் சாவு இல்லை

உண்மைக்கு பயப்படுப‌வன் வேறு யாருக்கும் பயப்பட மாட்டான்

உண்மைக்குத் தக்க ஊக்கம் இல்லாவிட்டால் உலகெல்லாம் கயமை

உண்மைகள் அழகானது ஆனால் பொய்கள் அதை விட கவர்ச்சியானது

உண்மைகள் புறக்கணிக்கப்பட்டாலும் ஒரு போது மங்குவதில்லை

உண்மைகளை சொல்ல கோள் பார்த்து மயங்காதே

உண்மைப் பொருளும் உலோகாயுதன் உணர்வே

உண்மையாக காதலிப்பதைத் தவிர‌

உண்மையாக துணிச்சலாக உயர்ந்த லட்சியத்துக்காக பாடுபடவேண்டும்

உண்மையாய் உழைத்த ஊழியருக்கு உதவாதது நயவஞ்சகம்

உண்மையான மாற்று கருத்து நமது சிந்தனைக்கு வேலை தரும்

உண்மையான அன்பும் சந்தேகமும் ஒரு இடத்தில் வாழ முடியாது

உண்மையான சிறப்பான திறமை என்பது செயல்படும் போது ஆனந்தமடைகிறது

உண்மையான நல்ல மனிதன் எவர் ஒருவரையும் வெறுக்க மாட்டான்

உண்மையான நல்ல மனிதன் யார் ஒருவரையும் துவேசம் செய்வதில்லை

உண்மையான படைப்பாளிகளை காலம் என்றும் தலை வணங்கும்

உண்மையான மதீப்பீடுகளை சரியாககணிப்பதே தத்துவத்தின் கடமை

உண்மையான மன மாற்றம் கற்பனையில் துவங்குகிறது

உண்மையான முழுமனமாற்றமும் முழுபுரட்சியுமே இன்றைய தேவை

உண்மையானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது

உண்மையில் இருந்து ஒரு நூல் விலகினால் அக‌ல பாதாளம் தான்

உண்மையிலே உணர்வினிலே உயர் நோக்கத்திலே உய்ர்வோம் நாம்

உண்மையின் ஆழத்திலிருந்து சொல் வர வேண்டும்

உண்மையின் உருவம் மிகவும் எளிமை நிறைந்தது

உண்மையும் உயிர்த்தூய்மையுமே ஒழுக்கத்தின் உயிர்நாடி

உண்மையும் நன்மையும் நம்பப்படுவதில்லை மோரை விட கள்விரும்பப்படுகிறது

உண்மையென்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்

உண்மையே தெய்வம் கவலையற்றிருத்தலே வீடு

உண்மையே பொய் போலவும் பொய் உண்மை போலவும் விளங்குவதுமாளல

உண்மையே வெல்லும் பாதகம் படு தோல்வி அடையும்‍‍

உண்மையை அறியாதீர் அது உங்களை பித்தராக்கும்

உண்மையை உண்மைக்காக பற்றிக் கொள்வதே நற்பண்புகளின் வித்து

உண்மையை துணிச்சலாக பேச முடியாதவனால் உறங்க முடியாது

உண்மையை நேசியுங்கள் தவறுகளை மன்னியுங்கள்

உண்மையை முட்டாள் கூட பொய் சொல்ல முடியும் பொய் சொல்ல புத்தி வேண்டும்

உண்மையை விட இன்பமானது உலகில் வேறு எதுவுமில்லை

உண்மையை வெல்லும் பாதகம் படுதோல்வியடையும்

உண்மையைக் காண்பதற்கு மிகக் கொடிய எதிரி வாதமே

உண்மையைச் சிலரே விரும்புவர்

உண்மையைச் சொல்பவன் பின் ஒரு கூட்டமே வரும்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தார் உத்தம தலைவர்கள்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

உண்மையைத் தழுவு நன்மையை நாடு

உண்மையைத் தைர்யமாக பேச முடியாதவன் உறங்க முடியாது

உண்மையைப் போற்றுதலே உயர்ந்த பக்தியாகும்.

உறவை பரிசோதிக்காலாகாது...?




உணவால் அல்ல ஊக்கத்தால் ஊட்டம் பெருகிறது குழந்தை

உணவிலும் வார்த்தையிலும் செலவிலும் சிக்கனமாக இரு

உணவின்றி கூட ஒருவன் இருப்பான் ஓசையின்றி இருக்கமாட்டான்

உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கு அன்பு செய்தலே

உணவு இலையிலிருந்தால் விருப்பு தரையிலிருந்தால் அறுவெறுப்பு

உணவு உடை உத்தமம் சத்யம் என்பது அதற்கு சரியான வழிகள்

உணவு உண்ணாமல் யாராலும் சிந்திக்க முடியாது

உணவு உறவு உறக்கத்துக்கு அடிமையாகதவன் செயலே வெற்றி பெறும்

உணவு உறவு உறக்கம் தள்ளிப் போட்ட இளைஞன் அறிஞன் ஆனான்

உணவு ஒய்வு அமைதி ஆனந்தம் இவையே சிறந்த மருந்துகள்

உணவு பரிசோதிக்கப்படலாம் உறவை பரிசோதிக்காலாகாது

உணவு வேக காத்திராதவர் வேகாத சோறை உண்ணுகிறார்

உணவு,உடை,உறை கொடுத்தாலும் இனிய சொல்லுக்கு ஈடாகாதே

உணவை குறைத்து உழைப்பை அதிகரித்தால் நோய் வராது

உணவை சுவையாக்கும் உன்னத பொருள் பசியின்றி வேறில்லை

உணவைப் பார்த்தால் உறவைக் கூப்பிடும் கண்ணியவான்கள் காகங்கள்

பிரபலங்களின் பியூட்டி சீக்ரெட்ஸ்!




சினிமா நட்சத்திரங்களின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் சாமானிய மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. அழகுசாதனப் பொருள்களுக்கான விளம்பரங்களில், முன் எப்போதையும் விட, கடந்த சில வருடங்களில் நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் பின்னணியும் அதுவே. ஆஸ்தான நடிகையோ, நடிகரோ உபயோகிக்கிற அனைத்தையும் தானும் உபயோகித்தால் அவர்களைப் போலவே மாறிவிடலாம் என நம்புகிற  மனிதர்கள் நம்மிடையே பலர் உண்டு. அதெல்லாம் விளம்பர உத்தி என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள்!

நடிகர், நடிகைகள் என்ன வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களா என்ன? அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே? முதுமையும் தள்ளாமையும் அவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கும் முடி கொட்டும். நரைக்கும். வழுக்கை விழும். சருமத்தில் சுருக்கங்கள் வரும். அழகு மெல்ல விடைபெறும். சாதாரண மக்களுக்கும் பிரபலங்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் வித்தியாசம். அழகை ஆராதிப்பதிலும், கட்டிக் காப்பதிலும் அவர்கள் காட்டுகிற அக்கறை. அது நம்மிடம் மிஸ்ஸிங். அதனால்தான் நமக்கு சீக்கிரமே வரும் முதுமை, அவர்களுக்கெல்லாம் தாமதமாகிறது.
அழகைப் பேண பிரபலங்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? அழகுக்கலை நிபுணர் மேனகா பேசுகிறார்...

தலைக்கு...

* பிரபலங்கள், சாமானிய மனிதர்களைப்போல, நரைத்த முடியுடனும் வழுக்கைத் தலையுடனும் வெளியில் தலை காட்ட முடியாது. அதை மறைக்கும் டெக்னிக்குகளை பின்பற்றியே ஆக வேண்டும். நடிகைகளைப் பொறுத்த வரை முடியை ரொம்பவும் நீளமாகவோ, ரொம்பவும் குட்டையாகவோ வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மீடியம் நீளமுள்ள, அதாவது, தோள்பட்டை அளவுக்கு வைத்துக் கொள்வார்கள். அப்போதுதான் அவர்களால் எப்படிப்பட்ட ஹேர் ஸ்டைலுக்குள்ளும் பொருந்திப் போக முடியும்.

* வெஸ்டர்ன் லுக்கோ... ட்ரெடிஷனல் லுக்கோ... எதுவும் அவர்களுக்குப் பிரச்னையே இல்லை. எப்படிப்பட்ட ஸ்டைலுக்கும் ஹேர் அட்டாச்மென்ட்டுகள் கிடைக்கின்றன இன்று. கிளிப் உடன் கூடிய அவற்றை அப்படியே ஒரிஜினல் கூந்தலில் பொருத்திக்கொள்ள வேண்டியதுதான். கலரிங், அயர்னிங், பெர்மிங் என எதை வேண்டுமானாலும், அந்த செயற்கை அட்டாச்மென்ட்டின் மேல் செய்து கொள்ளலாம். கூந்தலுக்கு 1 சதவிகிதம்கூட பாதிப்பே இருக்காது. வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அவர்கள் ஒரிஜனல் கூந்தலில் செய்து கொண்டது மாதிரியே தெரியும்!

* நரையை மறைப்பதிலும் நட்சத்திரங்கள் ரொம்பவே கவனமாக இருப்பார்கள். ஒரு இன்ச் கூட நரை முடி வெளியே தெரியாமலிருக்க வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வில் வாரம் ஒரு முறை கூந்தலுக்கு டச் அப் செய்கிறவர்களும் உண்டு. இன்னும் சொல்லப் போனால், சம்பந்தப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ வெள்ளை முடி இருப்பது, அவர்களது வாழ்க்கைத்துணைக்குக் கூட தெரியாமலிருக்கலாம். எக்கா ரணம் கொண்டும், தரக் குறைவான ‘டை’யே  அவர்கள் உபயோகிக்கவே மாட்டார்கள். அமோனியா கலக்காத வாட்டர் பேஸ்டு ஹேர் கலரிங்கை மட்டுமே உபயோகிப்பார்கள்.

* சரி... திடீரென ஒரு ஃபங்ஷன்... அல்லது போட்டோ ஷூட்... கலரிங் செய்யவோ, பார்லர் போகவே நேரமில்லை... நரையையும் மறைத்தாக வேண்டும்... என்ன செய்வது? ‘டை ஸ்டிக்’ என ஒன்று இருக்கிறது. கருப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் மாதிரி இருக்கும்... அதை நரை உள்ள இடங்களில் டச் அப் செய்து கொண்டால் போதும்.

கண்களுக்கு...

கேமரா வெளிச்சமும், கண்ட நேரத்து வேலையும் அவர்களின் கண்களையும் பதம் பார்க்கும். அதிலிருந்து விடுபட கண்களுக்கான மசாஜ் செய்து கொள்வார்கள். நடிகைகளுக்கு கண்களின் கவர்ச்சி மிக முக்கியம். முகத்தில் மேக்கப்பே இல்லாவிட்டாலும், கண்களுக்கு மட்டும் மேக்கப் செய்துகொள்ள விரும்புவார்கள். கண் இமைகளை நீளமாகக் காட்ட, ஐ லேஷ் எக்ஸ்டென்ஷன்ஸ் இப்போது பிரபலமாகி வருகிறது. கூந்தல் இல்லாதவர்கள் ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்து நீளமான முடியிருப்பது போலக் காட்டிக் கொள்வது போல, இது கண் இமைகளுக்கானது. ஒருமுறை செய்து கொண்டால் ஒன்றரை மாதம் வரை அப்படியே இருக்கும்.

நகங்களுக்கு...

நடிகைகளின் கைகளை கவனித்தீர்களானால், நகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கலாம். அவர்களது நகங்கள் நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நெயில் ஆர்ட் செய்து கொள்வதை விரும்புவார்கள். அதில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்டோ அதையெல்லாம் முயற்சி செய்து பார்ப்பார்கள். நகங்களே இல்லாவிட்டாலும் நோ பிராப்ளம். செயற்கையாக ஒட்டிக்கொள்ளக் கூடிய ஜெல் மற்றும் அக்ரிலிக் நகங்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே உள்ள நகங்களின் மேல் இவற்றை ஒட்டிக் கொண்டு விட்டால் போதும், வித்தியாசம் தெரியாது!

வாக்கிங்...

நடிகைகள் உபயோகிக்கிற எல்லா அழகுசாதனங்களுமே ஸ்பெஷல் வகையறாதான். அதில் வாக்சும் ஒன்று. சாதாரணப் பெண்கள் உபயோகிக்கிற ஹாட் வாக்ஸ், கோல்ட் வாக்ஸெல்லாம் இவர்களுக்குப் பிடிக்காது. ஃப்ரூட் வாக்ஸ் என ஒன்று வந்திருக்கிறது. விதம் விதமான வாசனைகள் கொண்ட இதை உபயோகிக்கும் போது, மறுபடி முடி வளர நேரம் பிடிக்கும். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்புதான் இதை உபயோகிப்பார்கள். முகத்துக்குக் கூட இந்த வாக்ஸ் உபயோகிக்கிற நடிகைகள் இருக்கிறார்கள். இதில் வாக்ஸ் செய்வதற்கு முன் உபயோகிக்கக் கூடிய ப்ரீ லோஷனும், வாக்ஸ் செய்த பிறகு உபயோகிக்கக்    கூடிய லோஷனும் இருப்பதால், சருமமும் அழகாக மின்னும்.

உடைகள் மற்றும் நகைகள்...

ஆள் பாதி, ஆடை பாதி என்பது நடிகைகள் விஷயத்தில் மிகச் சரி. எந்த நடிகையாவது அவர்களுக்குப் பொருந்தாத உடை அணிந்து பார்த்திருக்கிறீர்களா? தைத்துப் போட்டார்களா? போட்டுக் கொண்ட பின் தைத்தார்களா எனக் கேட்க வைக்கிற அளவுக்கு அத்தனை கச்சிதமாக உடை அணிவார்கள்.

பெரும்பாலான நடிகைகள் பொது நிகழ்ச்சிகளிலும், சாதாரண நேரத்திலும் நகைகள் அணிய மாட்டார்கள். கழுத்தில் சின்னதாக ஒரு சங்கிலி கூட இருக்காது. தொடர்ந்து நகைகள் அணிவதுகூட சருமத்தில் சில அடையாளங்களைப் பதிக்கும். ஷூட்டிங்கின் போதும், பிரமாண்ட நிகழ்ச்சியின் போதும் மட்டும்தான் அவர்கள் நகைகள் அணிவார்கள்.

அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மறைக்கிற டெக்னிக்குகள் இவையெல்லாம். அதை வைத்து நடிகைகள் எல்லாம் அவலட்சணமானவர்கள் என்றும், இப்படித்தான் ஏமாற்று வேலைகளைச் செய்து, அவர்களது குறைகளை மறைத்து, அழகாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்றும் அவசரப்பட்டு நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம். அழகைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்களது அக்கறை நம்மையெல்லாம் பிரமிக்க வைக்கும். அப்படி என்ன செய்வார்கள் என்கிறீர்களா?

கூந்தலோ, சருமமோ அதற்கான சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்வார்கள். வாரம் 2 முறை கூந்தலுக்கான ஹேர் பாலிஷிங்கும், 4 வாரங்களுக்கு ஒரு முறை ஹேர் கட்டும், வாரம் ஒரு முறை ஹேர் ஸ்பாவும் செய்து கொள்வார்கள். கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் சீரம்தான் உபயோகிப்பார்கள். வாரம் ஒரு முறை கூந்தலுக்கு மசாஜ் செய்து கொள்வார்கள். கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய ‘வால்யூம் ட்ரீட்மென்ட்’ செய்து கொள்வார்கள்.

மிகச்சிறந்த மேக்கப் சாதனங்களை மட்டுமே உபயோகிப்பார்கள். அவை எஸ்.பி.எஃப் உள்ளதும், வாட்டர் பேஸ்டுமானதாக இருக்கும். மேக்கப் முடித்த பிறகு ஒருவித ஸ்பிரேவை அடித்துக்கொண்டால், பல மணி நேரத்துக்கு மேக்கப் அப்படியே இருக்கும்.

மேக்கப் செய்து கொள்வதில் எடுத்துக் கொள்கிற அக்கறையை, மேக்கப்பை நீக்குவதிலும் எடுத்துக் கொள்வார்கள். சரும அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் மேக்கப்பை முறையாக சுத்தப் படுத்த வேண்டியது மிக முக்கியம். எத்தனை தாமதமாக ஷூட்டிங் முடித்துத் திரும்பினாலும், மேக்கப்பை நீக்கி 100 சதவிகிதம் சுத்தமான பிறகுதான் தூங்கச் செல்வார்கள். கூந்தலுக்கும் அப்படித்தான். தவறாமல் நைட் கிரீம் உபயோகிப்பார்கள். வாரம் தவறாமல் ஃபேஷியலும், பாடி பாலிஷும் செய்து கொள்வார்கள். எங்கே வெளியில் சென்றாலும், உடல் முழுவதற்குமான சன் பிளாக் உபயோகிப்பார்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியம்... அவர்களது சாப்பாடு. நிறைய காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் சேர்த்துக் கொள்வார்கள். தூக்கத்தை
விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்வார்கள்.

கைகளுக்கும், கால்களுக்கும் ஸ்பா மெனிக்யூர் மற்றும் ஸ்பா பெடிக்யூர் செய்து கொள்வார்கள். டென்ஷனை விரட்ட ரெஃப்ளெக்சாலஜி செய்து கொள்வார்கள். என்னதான் வேலை இருந்தாலும் ஓய்வைத் தியாகம் செய்ய மாட்டார்கள்.

சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய 70 மடங்கு பெரிய நிலவு கண்டுபிடிப்பு...!




சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு மிகப் பெரிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிரகத்தின் தோற்றம் வியாழன் மற்றும் நிலவு கிரகங்களை விட 4 மடங்கு பெரிதாகவும், அதை தொடர்ந்து வரும் பூமியின் நிலவை விட 70 மடங்கு பெரிதாகவும் காணப்பட்டன.

அதாவது பூமியில் இருந்து நாம் காணும் நிலவை விட பலமடங்கு பெரியதாக இருந்தது. சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் புதிய நட்சத்திரங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.  இதனையடுத்து சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முதலாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துளள்ளனர்.

சூரியனை மையமாக கொண்டு அதை சுற்றிவரும் கோள்களை, குறிப்பாக, நம் கண்களுக்கு புலப்படும் கோள்களை சூரிய குடும்பம் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். சூரிய குடும்பத்தின் மூன்றாவது கோள்தான் நாம் வாழும் பூமி. இந்த சூரிய குடும்பத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவையும் இணைந்துள்ளன. சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 850 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆறுதல் சொல்வது எப்படி ?




உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும் போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்து கொள்வது என்று நீங்கள் குழம்பிப் போகலாம். நல்ல விதமாக ஒருவரை எப்படித் தேற்றுவது என்று பார்ப்போமா?.

• "அட, என்ன எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா இருக்கே, கவலையை விட்டுத் தள்ளுப்பா, இதெல்லாம் சகஜம் தான்" என்று கவலையை விடச்சொல்லி உபதேசம் செய்யாதீர்கள். கவலை அல்லது மனச் சோர்வை யாரும் வேண்டுமென்று கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு, அவர்கள் அனுபவப்படுவது.

காய்ச்சல் தலைவலி போன்ற ஒர் உடல் நலக் குறைவு. அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவரைப் போய் என்ன கை காலெல்லாம் வீங்கியிருக்கே எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு எழுந்திரு என்று கூறுவது எவ்வளவு அபத்தம். மனச் சோர்வு என்பது உண்மையிலேயே நோய் தாக்குவதைப் போன்ற ஒரு பாதிப்பு. மனம் உடைந்து போனவர் தன்னைத் தானே உடனே அதிலிருந்து மீண்டு சந்தோசமாக ஆகிவிட முடியாது. காலம் தான் ஆற்ற முடியும். மருத்துவமும் தேவைப்படும்.

• மனம் உடைந்து போயிருப்பவருக்கு தன் துன்பங்களை யாரிடமாவது சொல்லி அழத்தோன்றும். அதைக் கேட்க காதுகள் தான் தேவை. எனவே கேளுங்கள் நன்றாக செவி சாய்த்து கேளுங்கள். அவரது கவலை சிலவேளை உங்களுக்கு அற்பமாக தெரியலாம். அவருக்கு அதன் பாதிப்பு ஆழமாக இருக்கலாம். எனவே எவ்வித அலட்சியமும் காட்டாமல் உண்மையாகவே பரிவோடு அவர் சொல்வதை கேளுங்கள்.

• பொதுவாக உளம் சோர்ந்திருப்பவர்கள் தனிமையை விரும்புவார்கள். தனிமை நிலமையை இன்னும் மோசமாக்கி விடக்கூடும். எனவே அவர்களைக் கொஞ்சம் எதாவது செயல்களில் ஈடுபடத் தூண்டுங்கள். நீங்களும் அவர்களோடு சேர்ந்து செயல் படுங்கள். கவலை தரும் நினைவுகளை கொஞ்ச நேரம் மறந்திருக்க உதவுங்கள்.

• வெளியே எங்காவது காலாற நடந்து விட்டு வரலாம். எப்போதும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்காமல், பீச், பார்க் என்று போகலாம். சேர்ந்து பஸ் பயணம் மேற்கொள்ளலாம். புதிய விஷயங்களில் மனம் ஈடுபடும் போது மனம் கவலைகளை சற்று மூலைக்குத் தள்ளி விடும்.

• சுத்தமான ஆடைகள் அணிவது, முடிவெட்டி கொள்வது, தினமும் ஷேவ் செய்து கொள்வது, பிறருடன் பழகுவது போன்றவற்றை தூண்டுங்கள்.

• அவர்களை ஊக்கப்படுத்துங்கள் ஆனால் எதையும் திணிக்காதீர்கள், வற்புறுத்தாதீர்கள், நிர்பந்தப் படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது அவர்களுக்கிடையே நமக்கு இடைவெளி உண்டாக்கி விடும். நம்மை விட்டு விலகியிருக்கத் தூண்டும். உங்கள் அழைப்பை, ஆறுதலை, ஆலோசனைகளை அவர்கள் ஏற்க மறுத்தால் வற்புறுத்தாதீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இன்னொரு நாள் மிகவும் தன்மையாய் எடுத்துக் கூறுங்கள்.

• நன்றாக சாப்பிட, நன்றாக தூங்க உதவுங்கள்.

• புகை, போதைப் பொருட்களை நாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• மனச்சோர்வு அகற்ற நிறைய மருந்துகள் உண்டு. மருத்துவ உதவி எடுத்துக் கொள்ளத் தூண்டுங்கள். சரியான உளவியல் மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று தக்க ஆலோசனையும் சிகிட்சையும் பெற உதவி செய்யுங்கள்.

• பிரச்சனைகள் ஏதுமற்ற அமைதியான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். வீட்டில் மேலும் மன அழுத்தங்கள் உருவாக்கும் நிலைமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• அவர்களது தினசரி வாழ்க்கையில் ஒரு சிட்டையை, ஒழுங்கை அமைத்துக் கொள்ள உதவுங்கள்.

• கவலைக்குக் காரணத்தை ஞாபகப்படுத்தும் பொருட்கள், இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருப்பது கவலையை விரைவில் மறக்க உதவும். கவலையை மறக்க வருந்தி முயற்சிக்கக் கூடாது. நினைவுகளில் இருந்து தானாக கவலை அழிய வேண்டும்.

• மனச் சோர்வு வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும்.எனவே நம்பிக்கையூட்டுங்கள்.

• எது அவர்கள் மனதை கொஞ்சம் இலேசாக்குகிறதோ அதில் அதிகம் ஈடுபட தூண்டுங்கள். உள்ளத்தை அதிகம் சுறு சுறுப்பாக வைத்திருக்கும் எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுங்கள். கம்யூட்டர், இணையம், புதிய நட்பு, கவலை மறக்கச்செய்யும்.

• உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மனசோர்வு சிதைத்து விடும். காலமும் சரியான சிகிட்ச்சையும் நிச்சயம் அதை மீட்டுத்தரும்.

ஒரு திடீர் மரணமோ, அதிகப்படியான சோகமோ மூளையில் கார்டிகோட்ரோபின் எனும் அமிலத்தை சட்டென சுரக்கவைத்து மூளை முழுவதும் பரப்பி விடுகிறது. இந்த அமிலமே அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொண்ணா துயரத்தையும் தருவிக்கிறது என்று அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். உறவுகளை இழக்கும் போது உண்டாகும் அதிகப்படியான வலியைக் குறைக்கவும், கடும் துயரத்திலிருந்து விரைவில் மீளும் வழியைக் காட்டவும் இந்த கண்டுபிடிப்பு உதவும்.

துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அதுவும் நல்ல செய்தி தான்.

சோர்வை நீக்கும் உணவு வகைகள்:


சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதற்கு சோளம், புரதம் அதிகம் உள்ள உருளைக்கிழங்கு, ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ், சப்பாத்தி, தயாமின் என்ற வைட்டமின் நிறைந்த கொண்டைக்கடலை, இரும்பு சத்து நிறைந்த பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலிய உணவுகள் அடிக்கடி உணவில் இடம் பெறச் செய்வது நல்லது.