Friday, 6 September 2013

ஐடிஐ-யில் வயர்மேன்/ எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்க மின்சார வாரியத்தில்பணி!

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் என அழைக்கப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4000 களப்பணி உதவியாளர்கள்(பயிற்சி) நேரடி ஆள் சேர்ப்பு வழியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிரிமான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தற்போது நடைபெற உள்ள ஐடிஐ கள உதவியாளர் பணி நியமனத்திற்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஐடிஐ-யில் வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்று மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரிமானக் கழகத்தில்(தமிழ்நாடு மின்சார வாரியம்) 1 வருடம் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள், 18 வயது முதல் 57 வயது வரை உள்ள நபர்கள் தகுதி உடையவர்களாவர்.

அவர்கள் தலைமை அலுவலகம், தமிழ்நாடு மின்சார வாரிய வளாகம் 114, அண்ணாசாலை, சென்னை-600002 அலுவலகத்தில் 02.09.2013 முதல் 13.09.2013 வரையிலான காலத்திற்குள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை தொழில் பழகுநர் அசல் சான்றிதழ்களுடன் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேற்கூறியவாறு இவ்வலுவலகத்தில் பெயரை பதிவு செய்தவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக பெயர் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்து நேர்காணல் கடிதம் அனுப்பப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய

 www.tangedco.gov.in,          www.tantransco.gov.in,                   www.tenders.tn.gov.in 

இந்தியாவை உலுக்கப் போகும் இன்னொரு ஊழல் :தோரியம் கடத்தலில் ரூ.60 லட்சம் கோடி:

இந்திய கடல் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக தோரியம் கடத்தப்படும் விவகாரத்தில் ரூ.60 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. மேலும் பொதுத்துறை ஒன்றையும், அணுசக்தி துறை நிறுவனங்களையும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

sep 6 - indian money bundle

 

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற இருப்பதை அறியும் முடியும் என்றும் கூறப்படுகிறது. தோரியம் கடத்தலில் மத்திய மண்டல தாது பொருட்கள் கட்டுப்பாடு அதிகாரியாக உள்ள ரஞ்சன் சகாய் என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
தோரியம் கடத்தல் குறித்தும் ரஞ்சன் சகாய் முறைகேடு குறித்தும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட பல்வேறு புகார்கள் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தோரியம் கடத்தலால் நாட்டிற்கு மிகப்பெரிய பெருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி கதிர்வீச்சு தன்மையுள்ள இந்த பொருட்கள் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால் பெரும் நாச வேலைகளுக்கு காரணமாகிவிடும் என்ற நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது கவலை அளிப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தோரியம் கடத்தப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.சென்னை விமான நிலையத்தி்ல் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, கடல் பகுதியில் தோரியம் கடத்தல் உறுதி செய்யப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Biggest Ever: Thorium Mono-Cyanide Scam: 60 Lakh Crore Worth

*******************************************


 G scam, Coal scam was hearing all around India. Now comes an new shocking scam news much larger than earlier ones. 2G, coal corruption all became smaller on looking this new scam case in India.Currently a new sensational scandal news released. That is Rs.60 lakh crore worth ‘Thorium scam’. This hot scam news says that from the region of Indian Ocean Rs.60 lakh crore worth of Thorium has been exploited.The country’s natural resources are been exploited in a very bad manner. This new Thorium scam is the great example for that.

மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறதா கமலின் ‘விஸ்வரூபம் – 2′…!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலமுகங்களை கொண்ட கமல்ஹாசனின் சமீப கால படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.கடந்த ஆண்டு விஸ்வரூபம் என்ற பெயரில் அவர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இஸ்லாமியர்களை அந்த படத்தில் தவறாக சித்தரித்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்தே படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு தமிழக அரசு தலையிட்டு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு விஸ்வரூபம் படம் வெளியானது.அந்த படம் வெளியான சில நாட்களிலேயே ‘விஸ்வரூபம் -2′ படம் விரைவில் வெளியாகும் என்ற தகவல் பரவியது. காரணம், விஸ்வரூபம் படத்திற்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட எதிர்ப்பும்… பின்னர் படம் வெளியானதும் கிடைத்த வரவேற்பும் விஸ்வரூபம்&2 படம் உருவாக காரணமாக அமைந்தது என்கிறார்கள்.

sep 6 = viswaroop 1

 

இந்த சூழலில், ‘விஸ்வரூபம் -2′ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நடித்திருந்த பூஜாகுமார் முதல் படம்போல இதில் எந்த சர்ச்சையான காட்சிகளையும் குறிப்பிடமுடியாது. மிகவும் யதார்த்தமாக படம் வந்திருக்கிறது என பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.

கமல்ஹாசனும் தன் பங்குக்கு ‘விஸ்வரூபம்&2′ படம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும்விதமாக அமையும் என கூறியிருந்தார். இதன் மூலம் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு திடீரென இஸ்லாமியர் அமைப்பு ஒன்றின் அறிக்கை மூலம் மீண்டும் கமல் படம் சர்ச்சையில் சிக்குமா என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்”கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்-2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.

யார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை படைப்பாளி புரிந்து கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘விஸ்வரூபம்2′ திரைப் படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’ என கூறியிருக்கிறார்.

இந்த அறிக்கை வெளியானதால் கமல் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இதையடுத்து ஜவஹர் அலியின் அறிக்கைக் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது,”விஸ்வரூபம்&2 படம் அனைத்து தரப்பு மக்களுக்குமான கதையாக இருக்கிறது. அதில் எந்த இடத்திலும் இஸ்லாமியர்களின் மனது புண்படும்விதமான காட்சிகளோ, வசனங்களோ இல்லை. அதிலும் முந்தைய படத்தில் ஏற்பட்ட காயங்களை திரையுலக்மே இன்னும் மறக்காத நிலையில் மீண்டும் சர்ச்சை காட்சி அல்ல்து வசனங்களை யாராவத்கு வைப்பார்களா?இவ்வளவிற்கும் இந்த பார்ட் 2 படத்தில் அனைத்து மத மக்களும் சகோதரர்களே என குறிப்பிடும் விதமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. படத்தை பார்த்தால் அவர்களுக்கே புரியம். மற்றபடி சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை.. இல்லை.. இலலவே இல்லை” என்கிறார்.

சும்மா இருந்தாலே சினிமாவில் கிசுகிசுவும், பரபரப்பும், வதந்தியும் பரவுவதை தடுக்க முடியாது… போததற்கு இதுபோன்ற செய்திகள் வெளியானால் படம் குறித்த விஷயங்களும்… செய்திகளும் றெக்கை கட்டி பறப்பதை யாரும் தடுக்க முடியாது…