Thursday, 19 September 2013

சூர்யாவின் புதுப்படம் வேலைகள் தொடங்கின!

சூர்யாவின் புதுப்படம் வேலைகள் தொடங்கின


ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்த்தில் வெளிவந்த படம் 'சிங்கம் II'. இந்தப் படம் 50 நாட்களையும் தாண்டி ஓடி வருகிறது. அதன்பின் சூர்யா சினிமா சூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இரணடு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப்பட வேலைகள் துவங்கியுள்ளன. இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஆக்சன் கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்துக்கு 'ரவுடி' என பெயர் வைத்துள்ளதாக செய்தி பரவி உள்ளது.

இன்னொரு புறம் சூர்யாவை வைத்து கவுதம்மேனன் இயக்கும் படவேலைகளும் ஆரம்பித்துள்ளன. இதில் ஜோடியாக நடிக்க திரிஷாவை பரிசீலிக்கின்றனர். இரண்டிலும் மாறிமாறி நடிக்க உள்ளார்.

சூர்யா ஏற்கனவே கவும்மேனன் இயக்கிய 'காக்க காக்க' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத. 


சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது? ஹன்சிகாவின் தாய் பதில்




ஹன்சிகாவுக்கு இப்போதைக்கு திருமணம் கிடையாது என்று அவருடைய தாய் மோனா மோத்வானி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். 


சிம்பு-ஹன்சிகா காதல் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், இருவரும் தங்களது காதலை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டனர். அடுத்தது இப்போதைக்கு கேள்வி இவர்களது திருமணத்தை பற்றியதுதான். ஆனால் இந்த கேள்விக்கும் அவ்வளவு சீக்கிரம் விடை கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 


சமீபத்தில் நடைபெற்ற சிமா திரைப்பட விழாவிற்கு ஹன்சிகா அவருடைய தாய் மோன மோத்வானியுடன் வந்திருந்தார். அப்போது சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது என ஹன்சிகாவின் தாயிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். 


அதற்கு ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி பின்வருமாறு பதிலளித்திருக்கிறார்... கல்யாணம் என்ற யோசித்து பார்க்ககூட நேரமில்லாமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதால் இப்போதைக்கு திருமணம் எனும் பேச்சுக்கே இடம் இல்லை, ஆனால் கல்யாண வேலைகள் திட்டமிட்டபடி எப்பொழுது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும் இப்போதைக்கு சாரி என அவர் தெரிவித்தார்.

எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு. (நீதிக்கதை)





அசோக் என்பவன் தான் இருக்கும் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது.


நான்கு மைல் நடந்துதான் அவ்வூருக்கு செல்ல முடியும்,


அவன் காலை கிளம்பினான்.


செல்லும் வழியில் வயலில் பூசணிக்கொடிகள் பரவியிருந்தன.ஒவ்வொன்றிலும் அவற்றில் பல பூசணிக்காய்கள் காய்த்திருந்தன..அதைப் பார்த்தவாறு நடந்தான்.


சிறிது நேரத்தில்..வெயிலின் கொடுமை அதிகமாயிற்று.அசோக்கிற்கு வேர்வை வழிந்தோடியது..அவன் களைப்பானான்.சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு செல்ல தீர்மானித்தான்.



அப்போது..சற்றுத் தொலைவில் அரசமரம் ஒன்றிருப்பதைக் கண்டான்.அம்மரத்தின் அடியில் சென்று அமர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.


மரத்தில் சிறு சிறு காய்கள் நிறைய இருந்தன.

உடனே ..'கடவுள் ஏன் அறியாமல் சிறிய பூசணிக்கொடிக்கு பெரிய காயையும்..பெரிய இந்த மரத்திற்கு சிறிய காய்களையும் படைத்துள்ளார் ' என்று நினைத்தான்.



அப்போது மரத்திலிருந்து சிறிய காய் ஒன்று உதிர்ந்து அவன் தலையில் விழுந்து..அவனுக்கு சற்று வலியை ஏற்படுத்தியது.

உடனே..'கடவுள் காரணமில்லாமல் இப்படி படைக்கவில்லை.இந்த மரத்தில் பூசணி அளவு காய்கள் இருந்திருந்தால்..இவ்வளவு நேரம் என் தலை போயிருக்குமே' என உணர்ந்தான்.


தனது அறிவீனத்திற்கு வெட்கமடைந்தான்.


இறைவன் காரணமில்லாமல் எந்த ஒன்றையும்   செய்வதில்லை..படைப்பதில்லை!