Monday, 14 October 2013

பொருளாதாரத்துக்கான நோபல்பரிசு : 3 பேர் அறிவிப்பு!



2013-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் கூட்டாக பெறுகின்றனர். யூஜின் பாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென், மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூன்று பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். சொத்துமதிப்பை நிர்ணயிக்கும் கொள்கையை கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நோபல் பரிசு ஸ்விடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இருந்து அறிவிக்கப்பட்டது.

வெற்றித்திருநகர் ஹம்பி - சுற்றுலாத்தலங்கள்!

    வெற்றித்திருநகர் ஹம்பி
ர்நாடக மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமம் ஹம்பி. விஜயநகரப்பேரரசின் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் ஓர் அங்கம். பிரசித்தி பெற்ற சிவாலயமான விரூபாக்ஷா கோவில், ஹம்பியின் இன்னொரு அடையாளம். இன்னும் பல அடையாளச் சின்னங்கள் ஹம்பியில் உண்டு.
ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள குரங்குகளின் ராஜ்ஜியமான கிஷ்கிந்தாவுக்கும் ஹம்பிக்கும் தொடர்பு உண்டாம். ஹம்பியில் மக்கள் குடியேற்றம் கி.பி.முதலாம் ஆண்டில் தொடங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. விஜயநகர ஆட்சியில் ஹம்பியில் பெரிய கட்டிடங்கள், பிரம்மாண்டமான விக்ரகங்கள் எழுப்பப்பட்டன. தொலைதூரத்தில் இருந்து பார்த்தாலும் அவற்றைக் காணமுடியும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இப்போது இல்லை.
 
ஹம்பியின் தெய்வீக அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் விரூபாக்ஷா கோவில் மிகவும் பழமையானது. மூன்று கோபுரங்களைக் கொண்டது. கோவிலை சீரமைத்து மண்டபம் கட்டியவர் கிருஷ்ணதேவராயர். விஜயநகர மன்னர்களின் குலதெய்வம் விரூபாக்ஷர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹம்பியில் உள்ள விட்டல் கோவிலும் கிருஷ்ணதேவராயர் கட்டியதே. கலைநுணுக்கத்துடன் கூடிய சிற்பங்கள் இங்குள்ளன. இதே போல கோதண்டராமர் கோவில், தாமரை கோவில் போன்றவையும் சிறப்பு வாய்ந்தது. ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோ சார்பில் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
 
எப்போது போகலாம்? எப்படிப் போகலாம்?
 
ஹம்பியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கர்நாடக அரசு சார்பில் விஜயநகர விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அக்டோபர் - மார்ச் மாதங்கள் வரை சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் ஹம்பி அமைந்துள்ளது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவின் முக்கிய நகரங்களான ஹாசன்,  மைசூர் போன்ற இடங்களில் இருந்தும் ஹம்பிக்கு நல்ல சாலைவசதி இருக்கிறது. ஹம்பியில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவில் உள்ள ஹோஸ்பேட் வரை ரயில்வசதி உண்டு. பெங்களூருவில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.

இறந்த குழந்தையை 2 நாட்கள் வயிற்றில் சுமந்த இந்தியப் பெண்- இங்கிலாந்து சோகம்!

சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் குமரேசன் என்ற பொறியியல் வல்லுநர் பணிநிமித்தம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி நிரஞ்சனாவுடன் இங்கிலாந்திற்கு சென்றார். அவர்களுக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் உண்டு. 33 வயதான நிரஞ்சனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தபோது அவருக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பிரசவத்துக்கான நாள் குறிக்கப்பட்டது.

13 - womb

 


குறிப்பிட்ட தேதியைத் தாண்டி மூன்று நாட்கள் சென்றபின்னரும் அவருக்கு பிரசவத்திற்கான அறிகுறி எதுவும் தோன்றவில்லை. மேலும், குழந்தையின் அசைவும் அவருக்குப் புலப்படவில்லை. இதனால் சந்தேகப்பட்ட அந்தத் தம்பதியர் உடனடியாக வடக்கு லண்டனில் உள்ள பார்னெட் அண்ட் சேஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள். 


அங்கிருந்த இடைநிலை மருத்துவப் பணியாளர் அவரைப் பரிசோதித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டார். 12 மணி நேரம் சென்றபின் மீண்டும் குழந்தையின் நிலை குறித்த சந்தேகத்தைத் தெரிவித்தபோதும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. 


முதல்நாள் நிரஞ்சனாவிற்கு ஏற்பட்டிருந்த காய்ச்சலால்தான் குழந்தையின் இதயத்துடிப்பு கேட்கவில்லை என்றும், பின்னர் மருத்துவமனையில் இருந்த இதயத்துடிப்பு அறியும் கருவி சரிவர வேலை செய்யவில்லை என்றும் ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டு அவர் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். 


இரண்டு நாட்களுக்கு மேல் இறந்த குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு மிக்க வலியுடனும், வேதனையுடனும் எந்தவிதமான மருத்துவ கவனிப்பும் இல்லாமல் அதனை அவர் பிரசவித்துள்ளார். இறந்த குழந்தையின் தலை நசுங்கியிருந்ததற்கும் மருத்துவமனை சரியான விளக்கம் அளிக்கவில்லை.
அதைவிட வேதனை தரும் விஷயமாக அந்தக் குழந்தையின் பிரேதப் பரிசோதனையை நடத்தக்கூடிய பொறுப்பாளரை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று கூறிய நிர்வாகம் நான்கு நாட்கள் கழித்துதான் அதனையும் செய்துள்ளது. 


இதன்பின்னர் சென்ற மாதம் 24 ஆம் தேதி மருத்துவமனையின் அலட்சியப் போக்கு குறித்த புகார் மனு ஒன்றினை இந்தத் தம்பதியினர் அந்நாட்டு தேசிய சுகாதார மையத்தில் அளித்துள்ளனர். 


மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், தேசிய சுகாதார மையத்தின் விசாரணைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Indian woman in UK forced to carry dead fetus in womb for two days

***************************************


An Indian woman in the UK was forced to carry a dead fetus in her womb for two days after doctors at the hospital ignored signs of its death and sent her back home.