ஹைக்கூ கவிதைகள்...
வரதட்சணை:
அம்மி மிதித்தவளை
திரும்பி மிதித்தார்கள்
கிரைண்டர் வராததால்
கிரைண்டர் வராததால்
தொ(ல்)லைக்காட்சி பெட்டி!:
தொலைக்காட்சி பார்க்கும் நேரம்
விருந்தினர் வருகை - விசாரிக்க
வராமலா போகும் விளம்பரம்
வராமலா போகும் விளம்பரம்
சுமை:
அறிவின் துளிர்
சுமக்க முடியவில்லை
புத்தகச் சுமை
புத்தகச் சுமை
வாழ்க்கைப் பாடம்:
கிளறினால்
கிடைக்கும் வாழ்க்கை
கற்றுக்கொடுக்கும் கோழி
கிடைக்கும் வாழ்க்கை
கற்றுக்கொடுக்கும் கோழி
மதக்கலவரம்:
கருவறையில் பத்திரமாய்
கடவுள்கள் கல்லறையாய்
தெருவெங்கும் அப்பாவிகள்!!
நேரம்:
நேற்று அழிந்த எழுத்து
நாளை கிடைக்காத இனிப்பு
இன்றே சுவைக்கும் கனி
நாளை கிடைக்காத இனிப்பு
இன்றே சுவைக்கும் கனி
எடைக்குறைவு: ரேசன் கடைக்காரருக்குகுழந்தை பிறந்ததுஎடை குறைவாய்! புகை அது பகை:அலறியது காற்றுஒளிய இடமில்லை
வாகனப்புகை
வாகனப்புகை
வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!
ReplyDeleteஅழகான ஹைகூக்கள் ...!!! குட்டி குட்டி கதைகளாய் ...!!!
தொடர வாழ்த்துக்கள் ...!!!