
இது ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கைச் சூழல் வெவ்வேறானது என்றாலும் எல்லோரும் தன் சொந்த பந்தங்களாலும் நண்பர்களாலும் அறிந்தவர்கள் அறியாதவர்கள் என அனைவரின் பாசப் பிணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ பிரச்னைகளை சந்தித்தாலும் நமக்கு நம் பிரச்னைகள்தான் கண் முன் தெரியும். இது ஒரு சராசரி மனிதனின் இயல்பு. இதிலிருந்து மாறுபட்டு வாழ்பவன்தான் எல்லோராலும் கொஞ்சம் கவனிக்கப்படுகிறான் அப்படி வாழும் இளைஞன்தான் கதையின் நாயகன் சூர்யா.
மதுரை மாநகரில் நடுத்தரவாசிகள் வசிக்கும் ஓர் பகுதியில் தன் வாழ்க்கையை தொடங்கும் சூர்யா தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும், தன்னைச்சுற்றி இருப்பவர்களுக்காகவும் வாழும் போது உலகம் அவனை கீழ்நிலையில் வைத்து பார்க்கிறது. அவன் யாரைப் பற்றியும் கவலை படுபவனாக தெரியவில்லை.
தேடி வந்த காதலை கூட நீண்ட யோசனைக்குப்பிறகு ஏற்றுக்கொண்டவன் பிறிதொரு சமயத்தில் அந்த காதலியே பிரிந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்படும்போது கூட புன்னகைத்து விடை கொடுக்கிறான். அவள் அவனை முழுமையாக புரிந்து கொண்டதால்தான் வலிகளோடு ஒரு வாழ்க்கை இருப்பதை நினைத்து விடைபெறுகிறான்.
பழிகளைச் சுமந்து இழி வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட சூர்யா தன் குடும்பத்தார் உற்றார் உறவினர் எல்லோராலும் ஒதுக்கி வைக்கப் படுகிறான்.
அன்பு, பாசம், காதல், பிரிவு, வேதனை, இழிவு, பழி, இயலாமை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவன் இவ்வுலகில் வாழவே ஆசைப்படுகிறான். வாழ வைத்ததா இந்த உலகம்?
யாசகன்
இயக்குநர் : துரைவாணன் (அமீர், எம்.சசிக்குமார் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்)
ஒளிப்பதிவாளர் : வே.பாபு
(கே.வி.ஆனந்திடம் பணியாற்றியவர்)
இசை : சதீஷ் சக்ரவர்த்தி
(கனிமொழி, லீலை)
படத்தொகுப்பு : ராஜா முகமது
(தேசிய விருது பெற்றவர்)
பாடல்கள் : கங்கை அமரன், அறிவுமதி, யுகபாரதி
கலை இயக்குநர் : ஆனந்த்
நடன இயக்குநர் : சிவசங்கர்
சண்டை இயக்குநர் : ராஜசேகர்
உடைகள் : நடராஜ்
ஒப்பனையாளர் : சண்முகம்
பி.ஆர்.ஓ : நிகில் முருகன்
விளம்பர வடிவமைப்பு : ஜெ.ஏ.அப்துல்
தயாரிப்பு : அகரம் புரொடக்ஷன்ஸ் கே.கே. சந்தோஷபாண்டியன் மற்றும் ஸ்ரீ தாரினி புரொடக்ஷன்ஸ் சி.இளங்கோ
----------------------
யாசகன்
கதாநாயகன் : மகேஷ்
கதாநாயகி : நிரஞ்சனா (அறிமுகம்)
கதாநாயகன் அப்பா : ஜெயச்சந்திரன்
கதாநாயகன் அம்மா : பவானி
கதாநாயகி அப்பா : பரமசிவம்
கதாநாயகி அம்மா :
கதாநாயகன் சகோதரி : ஜனனி
0 comments:
Post a Comment