Friday, 6 September 2013

எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பதவிநீக்கம்: உடனடியாக அமலுக்கு வருகிறது சுப்ரீம் கோர்ட் உத்தரவு!



  குறைந்தபட்சம் 2 வருடம் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்களின் பதவிகள் உடனடியாக பறிக்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வர உள்ளது. இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் நேற்று பிறப்பித்தது. தண்டனை பெற்ற உறுப்பினர்களை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தால் பாதுகாக்கப்பட முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு :


தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் பதவிகள் பறிக்கப்படும் எனவும், சிறையில் இருக்கும் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் ஜூலை 10ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு குரல் எழுப்பின. இதனால் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதற்கும் சுப்ரீம் கோர்ட் மறுத்ததால், தீர்ப்பிற்கு விலக்கு அளிக்கும் மசோதா நேற்று பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த மசோதா சட்டமாக மாற, ஜனாதிபதி ஒப்புதல் உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிரான மசோதா சட்டமாகும் வரை, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே நடைமுறையில் இருக்கும்.

பார்லி., சட்ட மசோதா :


பார்லி.,யில் நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி குற்றம்சாட்டப்பட்ட உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட முடியும். உறுப்பினர்கள், 2 அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால் மட்டுமே அவர்களிடம் இருந்து பதவி பறிக்கப்படும் எனவும், 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்படும் உறுப்பினர்களுக்கு, மீதமுள்ள பதவி காலத்திற்கான இழப்பீடு ஏதும் வழங்கப்படாத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகள் குழப்பம் :


நேற்று மசோதா நிறைவேற்றப்பட்ட போது கடைசி நிமிடத்தி‌லேயே பா.ஜ., ஆதரவு அளித்தது. மசோதா குறித்த விவாதம் நடைபெற்ற போது பா.ஜ., தலைவர் அருண் ஜெட்லி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது சரியானது அல்ல என தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு தீவிர காட்டி வருவது ஏன் என பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சந்தேகத்தை கிளப்பின. காமன்வெல்த், 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட ஊழல் விவரகாங்களில் இருந்து கட்சியையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிரான ஊழல்களை மறைப்பதற்காகவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. 

0 comments:

Post a Comment