
நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்திருக்கிறார்.
போராளி வெற்றிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கி வரும் திரைப்படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதாவது 24 வயது இளைஞன் மற்றும் 48 வயது நடுத்தர வயது மனிதன் என இரண்டு கேரக்டர்கள்.
அவருக்கு ஜோடிதான் அமலாபால். சரத்குமார் சிபிஐ அதிகாரியாக வருகிறார். இவர்களுடன் சூரி, தம்பி ராமையா, பஞ்சு சுப்பு, கோபிநாத் உட்பட பலர் நடிக்கின்றனர். வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கிறார்.
இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தெலுங்கில் ‘ஜண்டாபாய் கப்பிராஜூ’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் நானி ஹீரோ. கிட்டதட்ட 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இது குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது: உன்னை சரிசெய்துகொள். உலகம் தானாக சரியாகிவிடும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். 48 வயது கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்க்காததாக இருக்கும். இதற்காக ரவி நிறைய உழைத்திருக்கிறார். இளம் வயது ரவியும் வில்லன் ரவியும் மோதும் சண்டைக் காட்சி அதிகப் பொருட்செலவில் சமீபத்தில் படமாக்கப்பட்டது என்றார்.
0 comments:
Post a Comment