விஜய்யின் ஜில்லா படத்திற்காக ஒரு பாடல் எழுதியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. | ||||||||||
முருகா படத்திற்கு பிறகு இயக்குனர் ஆர்.டி.நேசன், விஜய்யை வைத்து இயக்கும் படம் ஜில்லா. ![]() டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி, ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர். தற்போது இவர்களோடு தனது வைர வரிகளைப் பதிக்க களமிறங்கியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. சமீபத்தில் இந்த படத்திற்காக, கவிப்பேரரசு செதுக்கிய 'சானு நிகம்' எனும் மெலோடிப் பாடலை பதிவு செய்த இமான் தனது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது. |
0 comments:
Post a Comment