என்னுடைய கடந்த பதிவான பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை பதிவு எழுதிகொண்டிருக்கும் போது பழங்கால இந்திய வரைபடங்கள் பற்றி நான் தேடிய ஒரு தொகுப்பை இந்தியாவின் வரலாற்றுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இப்பதிவை ஆரம்பிக்கிறேன். இனி பயணத்தை தொடர்வோம்.

இந்தியாவின் வரலாற்றை பார்ப்பதற்கு முன்பு உலகில் இந்தியாவின் அமைவிடம் மற்றும் இந்தியாவில் முதல் மனிதனின் தோற்றம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பின்னர் இந்திய வரலாற்றுக்கு வருவோம்

பிரபஞ்ச வெளியின் வரலாற்றில் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனோ, நாம் வாழும் பூமி என்ற சிறிய கோளோ கிடையாது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முன்பு அகண்ட வெளியில் சுற்றி திரிந்த தூசுகளும், கொதித்து கொண்டிருந்த கற்களும் ஒன்று சேர்ந்து ஒரு நெருப்புகோலமாக ஒன்று திரண்டது பின்னர் பல லட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல குளிர்ந்து ஒரு திடமான உருண்டையாக உருப்பெற்றது.


உலகில் உயிரனங்கள் வளர வழிவகுத்தது இந்த செடி கொடிகளே. ஆக்சிஜன் இல்லையேல் பூமியில் உயிரினங்கள் இல்லை.
உலகில் முதன்முதலில் தோண்றிய உருப்படியான உயிரினம் மீன் வகைகளே. இவை தோன்றியது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.



ஆரம்பத்தில் பல விதமான மனித வகையினர் உலகில் நடமாடினர் காலப்போக்கில் அவை அழிந்து மிச்சம் இருந்தது இரண்டு வகையினரே..
1. நாம் (kuromeknan)
2. நியாண்டர்தால்(neandertal) மனிதன்

சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனம் அழிந்தது இதற்கான உண்மை காரணம் தெளிவாக அறிவியலாளர்களால் கூறஇயலவில்லை. நியாண்டர்தால் மனிதனும் நம்மை போலவே உருவ ஒற்றுமையும் சற்று குறைவான புத்தி கூர்மையும் படைத்திருந்தனர்.

africa காடுகளில் விலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொண்டு ஒரு பயத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து வந்த மனிதன் கும்பல் கும்பலாக வாழ்வதற்கு ஏற்ற இடத்தை தேடி பயணிக்க ஆரம்பித்தனர் இப்பயணத்தில் நியாண்டர்தால் இனமக்களும் இருந்தனர். வழியில் பல புதிய பழங்கள் இல்லை தலைகளை சாப்பிட வேண்டியிருந்தது. சிலவற்றை சாபிட்டு இறந்தவர்களை பார்த்து மற்றவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வை பெற்றனர். வழியில் வசதியான இடம் வந்தவுடன் ஒரு சிலர் அங்கேயே தங்கினர் மற்றவர்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

மனிதன் செல்லும் இடம் எங்கும் அவனை கடல் வலி மறிக்கவில்லை. இது சற்று விசித்தரமாக தோணலாம். இதை பற்றி முழுமையாக அறிய நாம் ஆதி காலத்தில் உலகம் எப்படி இருந்தது என்பதை பற்றி முதலில் அறியவேண்டும். ஆதி காலத்தில் இருந்த உலகத்திற்கு அறிவியலாளர்கள் இட்ட பெயர் கொண்டவான லேன்ட்(gondwana land). இந்த கொண்டவான லேன்ட் என்பது என்ன? மனிதனின் அடுத்தக்கட்ட பயணம் எங்கே? என்பதை பற்றி அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம்.
0 comments:
Post a Comment