உலகில் முதன் முதலாக வரையப்பட்ட வரைபடத்திலிருந்து நவீன காலம் வரை உள்ள வரைபடங்களை ஒரு பதிவாக இடலாம் என்று இந்த பதிவை ஆரம்பித்துள்ளேன்.
உலக வரைபடங்கள் பண்டைய காலங்களில் வரையப்பட்டதில் பல்வேறு நிலைபாடுகள் காணப்பட்டன. மனித நாகரிகம் தோன்றிய பொழுது உலகம் ஆப்ரிகா, பாரசீகம், பாபிலோனியா சுற்றிய பகுதி தான் உலகம் என நினைத்துக்கொண்டிருந்தனர் உலகின் முதல் வரைபடமும் அப்படி தான் வரையப்பட்டுள்ளது
பின்பு உலகம் தட்டையானது என்ற நினைத்தனர். பின்பு உலகம் உருண்டை என பின்னால் வந்த அறிவியலாளர்கள் கூறினார். இருப்பினும் ஆதி காலத்திலேயே பூமி உருண்டையானது போன்ற வரைபடம் துல்லியமாக வரையப்பட்டுள்ளது. எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் பூமிக்கு உயர சென்று பார்க்காமல் எப்படி வரைந்திருக்கமுடியும்? மேலே இருந்து வந்த வேற்று கிரக வாசிகள் தான் உதவியிருக்கவேண்டும் மேலும் பிரமிட்களை கட்டியிருக்கவேண்டும் என்பதற்கு பலமான சான்றுகள் உள்ளன எனினும் நிரூபிக்க முடியவில்லை. இனி உலகின் முதல் வரைபடம் பற்றி பார்ப்போம்.
உலகின் முதன்மையான மிகவும் பழமையான நாகரிகமாக கருதப்படும் பாபிலோனியர்களால் வரையப்பட்டது. மேலும் உலகின் முதல் map ஆகவும் இது கருதப்படுகிறது.வரையப்பட்ட ஆண்டு தெளிவாக தெரியவில்லை.
இரண்டாம் நூற்றாண்டு வரைபடம்:

எகிப்து நாட்டை சேர்ந்த Claudius Ptolemaeus (Ptolemy) என்ற கணிதவியல் அறிஞரால் கி.பி 150 இல் வரையப்பட்டது.
நான்காம் நூற்றாண்டு வரைபடம்:

நான்காம் நூற்றாண்டில் வரையப்பட்ட ரோம் நாட்டு map. மேலும் இது ஐரோப்பா, ஆசியாவின் ஒரு பகுதி(இந்திய), வட ஆப்ரிக்கா கவர் செய்கிறது.
ஆறாம் நூற்றாண்டு வரைபடம்:

அலெக்சாண்ட்ரியா நாட்டை சார்ந்த cosmas Indicopleustes என்ற கிரேக்க துறவியால் கி.பி 550 ஆண்டு வரையப்பட்ட வரைபடம். மேலும் இந்தியாவுடன் வாணிப தொடர்பு வைத்திருந்த இவர் பல முறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். இவரின் கருத்துப்படி உலகம் தட்டையானது
ஏழாம் நூற்றாண்டு வரைபடம்:

ஸ்பெயின் நாட்டு அறிவியலாளரால் வரையப்பட்ட வரைபடம் இது வரைந்தவர் பெயர் மற்றும் ஆண்டு தெரியவில்லை..
எட்டாம் நூற்றாண்டு வரைபடத்திலிருந்து அடுத்த பதிவில் பார்ப்போமா....
0 comments:
Post a Comment