Monday, 28 October 2013

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க – நீக்க -இன்னும் மூன்றே தினங்கள் அவகாசம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட மாற்றங்களை செய்வதற்கு அக்டோபர் 31-ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் http://www.elections.tn.gov.in/eregistration/என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.



28 - voter list




செப்.15- 1-1-2013 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெயர் நீக்க, திருத்தம் செய்ய விரும்புபவர்களும் மனு செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.


இது குறித்து தகவல் தெரிவித்த பிரவீண்குமார்,”வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகள் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்கான மூன்றாவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான திருத்தங்களுக்காக விண்ணப்பித்தனர்.


ஏற்கெனவே அக்டோபர் 7, 14 தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சிறப்பு தொலைபேசி எண்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது தொடர்பான விவரங்களைப் பெற கால் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காலை 10 முதல் மாலை 6 மணி வரை தகவல்களைப் பெறலாம்.15 லட்சம் பேர் விண்ணப்பம்:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக இதுவரை மொத்தம் 12 லட்சத்து 68 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்காக 49,190 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


பல்வேறு திருத்தங்கள் கோரி 1 லட்சத்து 59 ஆயிரத்து 524 பேரும், முகவரி மாற்றம் கோரி 60 ஆயிரத்து 687 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.இணையதளம் மூலமாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தத்துக்காக 1 லட்சத்து 27 ஆயிரத்து 969 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்..” என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment