
சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தான் ராஜ்பவன் என்று பெயர். ஆனால், ஊட்டியிலும் ஒரு ராஜ்பவன் இருப்பது பலர் அறிந்திராத விஷயம். சென்னை கவர்னர் மாளிகையில் என்ன வசதி உண்டோ, அத்தனையும் இங்கேயும் உண்டு. இந்த ராஜ்பவன் உருவாக்கப்பட்டதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உண்டு. தற்போது, ஊட்டியில் உள்ள ராஜ்பவன் 1876ம் ஆண்டு லாரன் ஆசிலம் டிரஸ்ட் அரசு இல்லம் கட்ட முடிவு செய்தது.
அக்கால கட்டத்தில் சென்னை மகாண வைசிராயாக இருப்பவர்கள் கோடை காலத்தில் ஊட்டிக்கு வந்து தங்கி ஒய்வு எடுப்பதற்காகவும், அரசு பணிகளை கவனிக்க இந்த மாளிகை கட்டப்பட்டது. 1888ம் ஆண்டு ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 633 மதிப்பில் இம்மாளிகை கட்டி முடிக்கப்பட்டது. 1899ம் ஆண்டு கூடுதல் அறை கட்டப்பட்டது. 1904ம் ஆண்டு இந்த மாளிகை முழுவதும் மின்சார இணைப்பு வசதி செய்யப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் இதற்கு ராஜ்பவன் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இம்மாளிகை தமிழக ஆளுநர் மாளிகையாக அறிவிக்கப்பட்டது.
தமிழக கவர்னர் அல்லது இந்திய குடியரசு தலைவர் ஆகியோர் ஊட்டி வந்தால் இங்கு தான் தங்குகின்றனர்.முன்பு தமிழகத்திற்கு ஆளுநராக வருபவர்கள் பலர் கோடை காலங்களில் அதிக நாள் இங்கிருந்தே நிர்வாகத்தை கவனித்துள்ளனர். மற்ற அரசியல் தலைவர்கள் அல்லது அரசு உயர்பதவிகளில் உள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த மாளிகையில் 17 அறை உள்ளது. வரவேற்பு அறையில் பல்வேறு வகையான ஒவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மாளிகையை சாதாரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கவோ, புகைப்படமோ எடுக்க அனுமதிப்பது இல்லை.
0 comments:
Post a Comment