Sunday, 27 October 2013

இது பேஸ்புக் உலகம:வியக்க வைக்கும் இணையதளம்

faces-of-facebook 

பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பேச‌ஸ் ஆப் பேஸ்புக் இணையதளம் இதை தான் செய்கிறது.பேஸ்புக்கின் 120 கோடியே சொச்சத்து உறுப்பினர்களையும் ஒரே இடத்தில் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த இணையதளம்.அதாவது பேஸ்புக் பயனாளிகள் ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்தியிருக்கிறது.


இந்த தளத்தில் நுழைந்ததும் அந்த கால டிவியில் தடங்களுக்கு வருதுகிறோம் அறிவிப்பின் போது தோன்றும் கருப்பு வெள்ளை புள்ளிகளாக காட்சி அளிக்கும்.ஆனால் தளத்தில் எந்த இடத்தில் கை (மவுஸ்) வைத்தாலும் அங்கு ஒரு எண்ணிக்கை தோன்றும்.அது அந்த புள்ளிக்கான பேஸ்புக் பயனாளியின் எண்ணிக்கை. மேலும் கிளிக் செய்தால் அந்த பேஸ்புக் பயனாளியின் புகைப்பட மற்றும் பேஸ்புக் அறிமுகத்தை பார்க்கலாம்.


இப்படியாக பேஸ்புக்கின் முதல் நண்பர் ( வேறு யார் அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் ) உட்பட இப்போதைய புதிய உறுப்பினர்கள் வரை அனைவரது பேஸ்புக் அறிமுக விவர்த்தையும் இந்த ஒரு பக்கத்தில் காணலாம்.பேஸ்புக்கில் ஒருவர் இனைந்த நாளின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.பேஸ்புக்கில் இனையும் புதிய உறுப்பினர்களுக்கு ஈடு கொடுத்து இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.


இந்த பட்டியலில் உங்களையும் காணலாம். நீங்களும் உங்கள் நண்பர்களும் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என கண்டுபிடிப்பது சுவார்ஸ்யமான விளையாட்டாக இருக்கும்.


பேஸ்புக்கில் வெளிப்படையாக கிடைக்கும் தக்வல்கள் அடிப்படையிலேயே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதால் அந்தரங்க மீறல் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிற‌து.


எது எப்படியோ நீங்கள் பேஸ்புக் போன்ற தளத்தில் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் எவரும் உங்களை பார்க்கலாம் என்பது தானே உண்மை.


இந்த தளத்தை பாராட்ட தோன்றினால் அர்ஜன்டைனாவை சேர்ந்த நத்தாலியா ரோஜஸ் என்பவருக்கு ஒரு சபாஷ் போடலாம். அவர தான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார்.


நத்தாலியா இதே போன்ற சின்ன சின்ன இணைய படைப்புகளை உருவாக்கும் இணைய கலைஞ‌ராக இருக்கிறார். மேலும் விவரங்களுக்கு அவரது இணைய பக்கம்.http://www.nataliarojas.com/ சரி பேஸ்புக்கில் நத்தாலியா இருக்கிறாரா?

1 comments:

  1. தொழில்நுட்பம் கொண்ட தங்கள் தளம் கண்டு வியக்கிறேன். வியக்க வைக்கும் செய்தியும் கண்டேன். பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete