Tuesday, 26 November 2013

ஆண்களுக்கும் வந்துருச்சுப்பா 'பிரா'...!!



பெண்களுக்கே உரிய பிரா ... இனிமேல் ஆண்களுக்கும் கிடைக்கப் போகிறது..
அதுவும் எப்படி.. புஷ் அப் பிரா... ஆம், ஆண்களுக்காகவே பிரத்யேகமான பிராவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பேஷன் துறையினர்தான் இந்த லந்துக்...கார வேலையில் இறங்கியுள்ளனர்.
ஆண்கள் மத்தியில் இது வித்தியாசமான ஆச்சரியத்தையும், சிலரது எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றுள்ளதாம்.

பெண்களுக்கு மட்டும்தானா...

பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடைதான் பிரேசியர் எனப்படும் பிரா. பெண்களின் தனிச் சிறப்பான உள்ளாடையாகவும் காலம் காலமாக திகழ்கிறது.

ஆண்களுக்கு முண்டா பனியன்.. கை வச்ச பனியன்
ஆண்களைப் பொறுத்தவரை முண்டா பனியன், கை வச்ச பனியன் என்று வரிசைப்படுத்தியுள்ளனர்.

ஆண்களுக்கும் வந்தாச்சுப்பா பிரா

ஆனால் இப்போது ஆண்களுக்கும் பிராவை கொண்டு வந்து விட்டனர். அதுவும் புஷ் அப் பிரா...


நெஞ்சை நிமிர்த்திக் காட்டுமாம்


ஆண்களுக்கு அழகே அந்த கட்டுமஸ்தான நெஞ்சுதான். ஆனால் எல்லோரும் சல்மான் பாடியோடு இருக்க முடியாதே... அப்படி இல்லாதவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். அவர்களுக்காகத்தான் இந்த புஷ் அப் பிராவை கொண்டு வந்துள்ளனராம்.


நெஞ்சுரம் மிக்கவர்களாக தோற்றமளிக்கலாம்
இந்த புஷ் அப் பிராவை அணியும் ஆண்களுக்கு கட்டுமஸ்தான நெஞ்சு இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுமாம்.


டி சர்ட் பிரா

இந்த பிராவை டி சர்ட் பிரா என்று அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான பிரா போல இது இருக்காது. மாறாக டி சர்ட்டுடன் கூடிய பிரா... இதை அணிந்தால் பைசெப்ஸ், டிரைசெப்ஸ், நெஞ்சுப் பகுதி என ஒட்டுக்காக எல்லாமே எடுப்பாக தெரியுமாம்.

படத்தில் விவேக் போல...

பிரபாகரன் படத்தில் விவேக் ஒரு குண்டாங்குறையாக டியூப்களை உடலில் சொருகி 8 பேக் காட்டுவாரே.. கிட்டத்தட்ட அது போலத்தான் இதுவும். ஆனால் இது காமெடிக்காக அல்ல, ஆண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இருக்குமாம்.


இல்லாதவங்களுக்கு நல்லதுதானே...

இதுகுறித்து பாலிவுட் நடிகரான இஜாஸ் கான் கூறுகையில், எடுப்பான மார்பு இல்லாத ஆண்களுக்கு இது வரப் பிரசாதம்தான். காமெடியாக இருந்தாலும் இதைப் போட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதே எனது கருத்து... என்றார்.

என்ன கருமம்டா சாமி இது...

ஆனால் சிலர் இதற்கு முகம் சுளிக்கின்றனர். கெளதம் ரோட் என்ற இன்னொரு நடிகர் கூறுகையில், ஆண்களுக்குப் பிராவா.. என்ன கருமம் இது.. ஆண் என்றாலே ஆண்மைதானே.. பிறகு எதற்கு பெண்களைப் போல பிரா.. எனக்கு உடன்பாடில்லை என்கிறார்.

0 comments:

Post a Comment