Sunday, 3 November 2013

வடதுருவம் போறீங்களா?

வாழ்க்கையில் வாய்ப்பு கிடைத்தால்... ஒரு முறை அண்டார்டிகாவையும், ஆர்க்டிக் கடல் பிரதேசத்தையும் கண்டுகளித்து விட வேண்டும். அப்போதுதான் இயற்கையின் வித்தியாசமான பரிமாணத்தை நம்மால் உணர இயலும்.

 அதிலும் ஆர்க்டிக் கடல் தனியாக செல்ல இயலாத பூமி...

 நார்வே நாட்டிற்கு சென்று அங்குள்ள பெர்ஜின் பகுதியை அடைந்து அங்கிருந்து கப்பலில் 12 நாள் பயணம் செய்ய வேண்டும். பயணத்தின்போது 5 நாட்களுக்கு மொபைல்... இன்டர்நெட் என எதுவும் வேலை செய்யாது. அதனால் தொடர்பு நோசான்ஸ்!

 கம்பூட்... கைகிளவுஸ், மாத்திரை மருந்துகள்.. குளிர் புகாத அளவில் உள்ள ஆடைகள்... குளிர்ந்த பகுதியை அடையும்போது விறைத்துப் போகாமல் இருக்க 5 ஆடைகளை ஒன்றின் மீது ஒன்று அணியும் நிலையும் வரலாம். வடதுருவத்தில் எத்தனை தூரம் செல்ல அனுமதி உண்டோ அத்தனை தூரம் வரை இந்த கப்பல் அழைத்துச்
 செல்லும்!

 பிரும்மாண்ட பனிப்பாறைகளை நாம் கேள்விப்பட்டிருக்கலாம்! அதேபோன்று கடல் மட்டத்திற்காக ஈடாக மிதந்து செல்லும் ஐஸ் தகடுகள் ஆச்சரியமானவை.. காட்டிற்குச் சென்றால் மிருகங்களை எப்படி நம் கண்கள் தேடுமோ, அதேபோன்று இங்கு கடல் சிங்கம் மற்றும் பனிக் கரடிகளைத் தேடுவோம். இந்த ஐந்து நாட்களும் தூக்கம் கிடையாது. இதற்கு முதற் காரணம். இருட்டே வராது. அடுத்து எந்த நிமிடமும் நாம் ஏதாவது அதிசயத்தை காண வேண்டி வரலாம் என்ற ஆர்வமே முக்கிய காரணமாம்.

 மொத்த பயணம் 12 நாட்கள்! 40 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தை உணரும் இடங்களில் உடம்பு நடுங்கும். சில இடங்களில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் குளிர் காற்று வீசும்... இங்கு நீள திமிங்கலத்தை காணும் வாய்ப்பு கிட்டலாம். ஸ்குவாஸ் என்ற அபூர்வ புத்திசாலிப் பறவையைக் காணலாம். நடுவில் நடைபாதைப் பயணமும் உண்டு. ரெயின்டீரில் பயணமும் உண்டு. மார்ஸ் கிரகம் இருக்கட்டும். முதலில் ஆர்க்டிக் சென்று வித்தியாசத்தை அனுபவியுங்க.

 நார்வே ஆஸ்லோ நகரில் உள்ள நேஷனல் ஜியோகிராபிக் சுற்றுலா கப்பல் மூலமும் ஆர்க்டிக் கடலுக்கு சென்று வரலாம்.

 சூரியனை அறவே மறைக்கும் மற்றும் பொதுவான கூலிங் கிளாஸ்கள் கட்டாயம் தேவை. இல்லாவிடில் வெள்ளை வெளேர் பூமி. நம் கண்களைச் சில நிமிடங்களிலேயே எரிய வைத்து விடும்...

 கேமிராவுடன் எடுத்துச் செல்லப்படும் பேட்டரி, கடும் பனியினால், வேலை செய்யாமல் போகலாம். ஆக இவற்றுடன் பேக் அப் பேட்டரியும் எடுத்துச் செல்ல வேண்டும்.
 மொத்த 12 நாட்களில் குறைந்தது 5 நாட்கள் முழுமையாகத் தொலைதொடர்பு வசதிகள் கிடையாது. ஆக தொடர்பு கொள்ள மாட்டேன் என்று வீட்டிலுள்ளவர்களிடம் கூறிவிடவும்.

 சீதோஷ்ண நிலை, எதிர்பார்த்துச் செல்வதை விட, சில நேரங்களில் மேலும் கடுமையாக மாறலாம்.. கடும் குளிர் வீசலாம். கடல் பிராணிகளினால் எதிர்பாராத தாக்குதல்கள் நடக்கலாம். ஆனால் இவற்றை எதிர்கொண்டு, அதேசமயம் வித்தியாசமான அனுபவத்தை பெற உடனே புறப்படுங்க.

1 comments: