Tuesday, 12 November 2013

யூடியூப்பை சிறப்பாக பயன்படுத்த சில வழிகள்!

வீடியோ பகிர்வு சேவையான யுடியூப் தளத்திற்கு அறிமுகமே தேவையில்லை.யூடியூப்பை பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கவும்,நகைச்சுவை வீடடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் நீங்கள் பயன்படுத்தி வரலாம்.பிரப்லமான செய்தி கிளிப்களை பார்க்க, திரைப்பட டிரைலர்களை காண என மேலும் பலவழிகளில் யூடியூப்பை பயன்படுத்தலாம்.

யூடியூப் சார்ந்த பல்வேறு சேவைகளும் இருக்கின்றன. யூடியுப்பிலே கூட பலவேறு வசதிகள் இருக்கின்றன.யூடியூப்பில் உள்ள எல்லா வசதிகளையும் எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இப்படி பரவலாக அறியப்படாத ஆனால் பயனுள்ள யூடியூப் வசதிகள் சிலவற்றை பார்க்கலாம்.

யூடியூப்பில் பாட்டு கேட்பது சுலபமானது. பிடித்த பாடலை வீடியோவோடு பார்த்து ரசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.ஆனால் யூடியூப்பில் பாடல கேட்பதில் உள்ள ஒரே சங்கடம் ஒவ்வொரு பாடல் முடிந்த பிறகும் அடுத்த பாடலை தேர்வு செய்து கொன்டிருக்க வேண்டும். இசைவானில் மிதக்க விரும்பும் போது இப்படி ஒவ்வொரு பாடலாக தேர்வு செய்ய வேண்டியிருப்பது அந்த அனுபவத்தையே பாழாக்கி விடும்.

இதற்கு மாறாக விருப்பமான பாடல்கள் அடுத்தடுத்து ஒலிபரப்பாக கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.சுகமாக தான இருக்கும் இல்லையா? இப்படி யூடியூப்பிலேயே பாடல்களை வரிசையாக கேட்டு மகிழலாம்.இதற்கான பிலேலிஸ்டை உருவாக்கி கொள்ளும் வசதியை யூடியூப் டிஸ்கோ  http://www.youtube.com/disco  தருகிறது.இந்த சேவையில் உங்களுக்கு பிடித்தமான பாடகர் அல்லது பாடலை சமர்பித்தால அதனடிப்படையில் பிலேலிஸ்ட்டை உருவாக்கி தருகிறது. அதில் உள்ள பாடல்களை ஆனந்தமாக கேட்டு ரசிக்கலாம். பாப் பிரியர்கள் என்றால் இந்த சேவை பரிந்துரைக்கும் பிரப்லமான பாடல்கள் அல்லது பிரபலமான பாடகர்கள் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

இதே போல யூடியூப்பில் உள்ள மற்றொரு பயனுள்ள வசதி யூடியூப் லைவ்.http://www.youtube.com/live இது நேரடி ஒளிபரப்புக்கான சேவை. இதன் மூலம் தற்போது இணையத்தில் காணகிடைக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தேடாமலே தேடி பார்த்து ரசிக்கலாம். அமெரிக்க அதிபர் மாளிகை ஒளிபர‌ப்பு, விளையாடு நிகழ்ச்சிகள் என் பலவற்றை பார்க்க முடியும்.குறிப்பிட்ட நேரத்தில் நேரடி ஒளிபர்ப்பு நிகழ்ச்சிகள் எவை என்பதை இதன் முகப்பு பக்கத்திலேயே பார்த்து தெரிந்து கொள்லலாம்.அவற்றில் உங்களை கவரும் சேவைக்கு உறுப்பினாராகும் வசதியும் இருக்கிற‌து.இந்திய நிழச்சிகளில் துவங்கி பிரபலமான அல்ஜசிரா டிவி  உட்பட உலக‌ம் ம்ழுவதும் உள்ள பல நிகழ்ச்சிகளை பார்கலாம். இத்த்னை நேரடி ஒளிபரப்புகளா என வியந்டு போவீர்கள்.

அது மட்டுமா இந்த வசதியை வீடியோ உரையாடலுக்கான கூகுல் ஹாங்க் அவுட வசதியுடன் இணைத்து கொள்ளலாம். அப்போது ஹாங்க் அவுட்டில் பங்கேற்காதவர்கள் கூட இதை நேரடி ஒளிபர‌ப்பாக பார்க்க முடியும்.

நீங்கள் எடுக்கும் வீடியோக்களையும் யூடியூப்பில் பதிவேற்றலாம். அந்த வீடியோ நேரத்தியாக இருக்க வேண்டும் என்றால் அது அழகாக எடிட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.இதற்கான வசதியும் யூடியூப்பில் இருக்கிறது. யூடியூப் வீடியோ எடிட்டர் http://www.youtube.com/editor   மூலம் உங்கள் வீடியோக்களை அழகாக எடிட் செய்து பலரும் பார்த்து ரசிக்க செய்யலாம்.பல காட்சிகளை சேர்ப்ப‌து,பின்னணி இசை சேர்ப்பது, எடிட் செய்வது, உப‌ தலைப்புகள் கொடுப்பது என பல‌விதங்களில் வீடியோக்களை மெருகேற்ற‌லாம்.எதையும் தரவிறக்கம் செய்யாமல் உங்கள் பிரவுசரிலேயே இவற்றை மேற்கொள்ளலாம்.

யூடியுப் வழங்கும் மற்றொரு பயனுள்ள சேவை வீடியோக்களின் தரவிறக்க வேகத்தை அறிந்து கொள்வது. சில நேரங்களில் வீடியோ கோப்புகள் கிளிக் செய்தவுடன் தரவிறக்கம் ஆகாமல் தாமதாமாகலாம். இது போன்ற நேரங்களில் என்ன யூடியூப் மை ஸ்பீடு   http://www.youtube.com/my_speed    பக்கத்திற்கு சென்றால் என்ன பிரச்ச்னை என்று தெரிந்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் வீடியோ தரவிறக்கம் ஆகும் வேகம் தொடர்பான விவரங்கள் இதன் மூல தெரிந்து கொண்டு செயல்படலாம்.உங்கள் இணைய வேகம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள இணைய வேகம் ஆகிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment