Sunday, 24 November 2013

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்!

பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன.

1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank ) வந்தது போல இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில் சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக் செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில் அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். பின் பக்கம் பக்கமாகச் சிறுகச் சிறுக தகவல்கள் வாங்கப்படும். உங்கள் பெயர், ஊர், முகவரி, வங்கி அக்கவுண்ட் எண் , இன்டர்நெட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட்,ஆகியவை பெறப்படும். இவற்றைப் பெற்றவுடன் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் வழியாக நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும். இது போல ட்ரான்ஸ்பர் செய்யப்படும் அக்கவுண்ட் உடனே அந்த வங்கியில் மூடப்படும். பெரும்பாலும் இவை பாதுகாப்பற்ற வங்கி அக்கவுண்ட் அல்லது வெளிநாட்டு வங்கி கிளை அக்கவுண்ட்டாக இருக்கும்.

2. மேலே சொன்னது போன்ற வங்கிகளில் இருந்து, கீழ்க்கண்ட தகவல்களை உறுதிப்படுத்த நீங்கள் பலமுறை கடிதம் அனுப்பியும் முன்வரவில்லை. இதுவே இறுதி கடிதம். இன்னும் 48 மணி நேரத்தில் சரியான தகவல்களைத் தந்து அப்டேட் செய்யா விட்டால் உங்கள் அக்கவுண்ட் சேவை நிறுத்தப்படும் என நம் கழுத்தின் மீது அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற தோரணையில் கடிதம் வரும். நாம் நம் அவசர வேலைகளில் இது உண்மை என நம்பி தகவல்களை அளித்துவிடுவோம். எந்த வங்கியும் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. எனவே இது போல எந்த வங்கியின் பெயரில் மெயில் வந்தாலும் திறக்க வேண்டாம். ஆர்வத்தில் கூட இது என்னதான் பார்த்துவிடுவோமே என்று காரியத்தில் இறங்க வேண்டாம். பின் நம் பணத்திற்கு காரியம் செய்தவர்களாகிவிடுவோம்.

3. இதே போல Security Alert / Net Bank Alert என சப்ஜெக்ட் தலைப்பிட்டு, வங்கியின் சர்வர் கிராஷ் ஆகி தற்போது சரிப்படுத்தப்பட்டதாகவும், உங்கள் அக்கவுண்ட் தகவல்களைச் சரி பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்திடுமாறு கடிதங்கள் வரும். இவையும் ஏமாற்றுபவையே.

4. வங்கி முகவரியிட்டு எச்சரிக்கைக் கடிதம் போல தந்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வங்கியிலிருந்து வந்தது போல மெயில்கள் வரும்; நம்ப வேண்டாம். உண்மையான லிங்க் இதுதான். நீங்கள் கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெயில் வரும். கிளிக் செய்தால் மீண்டும் அதே கதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உங்கள் பெர்சனல் தகவல்களை இழப்பீர்கள்.

5. இமெயில் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பேர்களில், உங்களையும் சேர்த்து பல நாடுகளில் ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வெளிநாட்டுக் கார் ஒன்று பரிசாகத் தரப்போவதாக உங்களுக்கு மெயில் வரும். இதில் என்ன அக்கவுண்ட் நம்பரா தரப்போகிறோம் என்று அந்த மெயில் கூறும் இமெயில் முகவரிக்குக் கடிதம் எழுதினால், உங்களைப் போல அதிர்ஷ்டசாலி உலகிலேயே இல்லை என்ற ரேஞ்சுக்கு பல மெயில் கடிதங்கள் தொடர்ந்து வரும். அந்தக் கடிதங்களில் சின்ன சின்ன தகவல்கள் (சொந்த வீடு, மாத வருமானம், முகவரி, கார், இரு சக்கர வாகனம், கடன், பேங்க் அக்கவுண்ட் போன்றவை) சேகரிக்கப்படும். இவற்றை வைத்து நீங்கள் எவ்வளவு பணம் வரை இழக்க இருப்பீர்கள் என முடிவு செய்திடுவார்கள். பின் ஒரு நாளில், பரிசுக் காரின் மதிப்பு ரூ.89 லட்சம் என்றும் அதனை அனுப்புவதற்கான பணம் நீங்கள் முதலில் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு தொகையை நெட் பேங்கிங் மூலம் செலுத்த கேட்டுக் கொள்வார்கள்.

8. நிறுவனத்தின் பெயர், லோகோ போட்டு மெயில் வரும். எங்கள் நிறுவனத்திற்கு உங்கள் நாட்டின் அருகே உள்ள நாடுகளிலிருந்து பணம் தொடர்ந்து வரும். அதனை உங்கள் அக்கவுண்ட்டிற்கு அனுப்பச் சொல்கிறோம். நீங்கள் மொத்தமாக எங்கள் அக்கவுண்ட்டிற்கு மாற்ற வேண்டும். இந்த வேலைக்கு மாதச் சம்பளமும் மாற்றும் பணத்திற்கேற்ப கமிஷனும், அலுவலகச் செலவிற்குப் பணமும், எங்களின் ரீஜனல் மேனேஜர் என்ற பதவியும் தருவதாக மெயில் வரும். உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைக் கொடுத்தால் எந்த நாட்டு வங்கிக்கோ உங்கள் பணம் நீங்கள் அறியாமலேயே மாற்றப்பட்டுவிடும்.


         இது போன்ற ஏமாற்று வேலைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அத்தனையும் தெரிந்து பின் விழிப்பாய் இருப்பதைவிட, உழைப்பின்றி வரும் பணத்தை எதிர்பார்க்காமல், அடுத்தவர் பணத்திற்கு முறையின்றி ஆசைப்படாமல் “இருப்பது போதும்' என்று இருப்பது பாதுகாப்பல்லவா!

2 comments:

  1. அவ்வளவும் வந்திச்சு இன்று கூட, coco-cola, jobs,car எதுவும் பாக்கி இல்லை.

    ReplyDelete
  2. என்ன கொடுமை சார் இது........ பாதுகாப்பாக இருக்கவும் தோழரே!

    ReplyDelete