Sunday, 10 November 2013

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்...

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது.

1 comments:

  1. சுனாமியின் போதும்,அணுவுலை உடைந்த போதும் அவர்கள் ஒழுங்கையும், பண்பையும், நாட்டுப் பற்றையும் பார்த்து வியந்தேன். வெட்கப்பட்டேன்.
    ஆனால் 8 வதை சமீபத்தில் ஒரு விபரணச் சித்திரத்தில் பார்த்து ஜப்பானியரா ? என ஆச்சரியப்பட
    வைத்தது. அந்த அளவு திகதி பிந்திய உணவுகள் குப்பையில் கொட்டப்பட்டது.

    ReplyDelete