Saturday, 28 December 2013

கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்? - ஜாலி கற்பனை!




யார் கண் பட்டுச்சோ, தொடர்ந்து மொக்கைப் படங்களாக் கொடுத்திட்டு இருக்கிற கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்?


ஸ்கூலுக்கு டவுசர் பாக்கெட்டுக்குள் ரெண்டு கையையும் விட்டுக்கொண்டு ஸ்டைலாகத் தலையை ஆட்டியபடிதான் நடந்து போயிருப்பார்.

அப்பாவை விட சித்தப்பா ரொம்ப பெஸ்ட் ஃப்ரெண்டு. 'வா சித்தப்பு, ஸ்கூலுக்குப் போகலாம்’ என இழுத்துட்டுப் போயிருப்பார். 

வகுப்பறை பெஞ்ச்சில் அடிக்கடி 'ஜிந்தாக்கு ஜிந்தா ஜிந்தா ஜிந்தாக்குத் தா’ சவுண்டைக் கொடுத்து பட்டையைக் கிளப்பியதால் ஒருநாள் முச்சூடும் முட்டிக்கால் போட்டிருந்தார்.

அப்பாவின் டார்ச்சரால் அநியாயத்துக்கு அவதிப்பட்டிருப்பார். கம்பராமாயணத்தை அப்பாவிடம் ஒப்பிக்கும் அசைன்மென்ட்டில் அண்ணன் சூர்யா தப்பித்தாலும் பொறுப்புத் தம்பியாய் மனப்பாடம் செய்து ஒப்பித்திருப்பார்.

கொஞ்சம் பூசினாற்போல இருந்ததற்காக, ஸ்கூல் ஃபேன்சி டிரெஸ் காம்பெடீஷனில் அண்ணன் சூர்யாவுக்கு முருகர் வேடத்தைக் கொடுத்தவர்கள் இவருக்கு எப்போதும் உல்ட்டாவாய் பிள்ளையார் வேடம்தான் கொடுப்பார்களாம். இதனாலேயே ஏகக் கடுப்பில் இருந்திருப்பார். 

மழை அலர்ஜி. ஆனால் ஸ்கூல் கேர்ள்ஸை அட்ராக்ட் பண்ண, நனைந்து ஆட்டம் போட்டிருப்பார்.

அப்பா நல்ல பிராண்டட் சட்டை, பேன்ட் எடுத்துக் கொடுத்தாலும் அழுக்குச் சட்டையையும் அப்பாவின் கைலியும்தான் சாருக்கு ஃபேவரைட் டிரெஸ். அதைப் போட்டுக்கொண்டு நடந்து செல்வதைப் பெருமையாக நினைப்பார்.

அப்பா ஸ்டைலில் அடிக்கடி விரதம் இருப்பார். 'பிரியாணி’ சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்.

பிரபு ரசிகராக இருந்திருப்பார். 'வெள்ளைரோஜா’ படத்தின் 'ஓ மானே மானே...’ பாட்டுதான் கார்த்தியின் ஆல் டைம் ஃபேவரைட்.

காலை எழுந்ததும் வீட்டில் களேபரம்தான். அண்ணன் சூர்யா, 'சன்ரைஸ் வேணும்’ என அடம்பிடிக்க... தம்பி கார்த்தியோ, 'எனக்கு ப்ரூதான் வேணும்’ என அடம் பிடித்திருப்பார். பொறுத்துப்பார்த்த அப்பா சிவக்குமார், 'கண்ணுகளா....நிலவேம்புக் கஷாயம் குடிங்க. ரொம்ப நல்லதுப்பா’ எனச் சொல்லி வாயில் ஊற்றிவிட்டதால், டரியலோ டரியல் ஆகி இருப்பார்கள்!

0 comments:

Post a Comment