Sunday, 29 December 2013

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் காலீஸ்




இந்தியா–தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென்ஆப்பிரிக்க அணி 2–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்திருந்தது.  இதைதொடர்ந்து  3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் , தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. அதைத் தொடர்ந்து போதிய வெளிச்சமும் இல்லாததால் ஆட்டம் 2 மணி நேரத்திற்கு   முன்பாக நேற்று முடித்துக் கொள்ளப்பட்டது. காலிஸ் 78 ரன்களுடன் (224 பந்து, 10 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.இதில் டுமினி 28 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.தொடர்ந்து வந்த ஸ்டைனுடன் கைகோர்த்து ஆடிய காலீஸ்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது 45 வது சதத்தை பூர்த்தி செய்தார்.தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் அவர் 245 பந்துகளில் 100 ரன்களை கடந்தார்.கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடிக்கும் 4 வது தென் ஆப்ரிக்கா  வீரர் காலீஸ் ஆவர்.

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. இந்திய அணியை விட தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment