Sunday, 1 December 2013

அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்?

பட்டங்கள் கொடுப்பது பற்றி அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?

அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 1, பிரிவு 9:8


“அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது…”


அமெரிக்க தேச தந்தையர் அன்றைய காலகட்ட ஐரோப்பாவில் “பிரபு, மை லார்ட், ஹிஸ் எக்சலன்சி” என அழைக்கும் மரபை கடுமையாக வெறுத்தார்கள்.


 தாமஸ் பெயின் அது குறித்து கூறுகிறார்:


“பட்டங்களும், அடைமொழிகளும், மைலார்ட் என்பதுபோன்ற விளிப்புகளும் அப்படி அழைக்கபடுபவரை பீடத்தில் வைத்து, அந்த ஆபாச விளிப்புகளில் மயங்கிய மக்கள் அவரை எந்த கேள்வியும் கேட்கமுடியாமல், விமர்சிக்க இயலாமல் செய்துவிடுகிறது”


அமெரிக்க ஜனாதிபதியை எப்படி விளிப்பது என்றும் ஒரு விவாதம் எழுந்தது. “ஹிஸ் ஹைனஸ், பிரசிடெண்ட் ஆஃப் தெ யுனைடெட் ஸ்டேட்ஸ்” என அழைக்கவேண்டும் என ஒரு சாரார் கூறினர். “ஹிஸ் எக்சலன்ஸி” என அழைக்கவெண்டும் என்றனர் சிலர். அரசியல் சாசன தந்தை ஜேம்ஸ் மேடிசன் அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.


அமெரிக்க ஜனாதிபதி “மிஸ்டர் பிரசிடெண்ட்” என மட்டுமே அழைக்கபடுவார்!!!!!!

0 comments:

Post a Comment