Wednesday, 1 January 2014

தழும்புகளை மறைக்க வேண்டுமா..? இந்த ஜூஸ்களை கொண்டு மாஸ்க் போடுங்க...






தழும்புகளை மறைக்க வேண்டுமா? இந்த ஜூஸ்களை கொண்டு மாஸ்க் போடுங்க...

நம் உடலில் உள்ள மிகவும் மோசமான மற்றும் தேவையற்ற பகுதிகளாகவே தழும்புகள் உள்ளன. உடலில் காயம் அல்லது வெட்டு ஏற்பட்ட இடமம் என எங்கு வேண்டுமானாலும் தழும்புகள் ஏற்படும். விபத்து, தொற்று அல்லது அரிப்பினால் பாதிக்கப்பட்டு காயம் உருவாகி தோல் புதிதாக உருவாகி இருக்கும் இடம் தான் தழும்பு என்று அழைக்கப்படுகிறது. புதிதாக தோல் வளர்ந்த இடத்தில் புரோட்டினின் அமைப்பு மாறுபட்டு இருப்பதால், அந்த இடம் மட்டும் வித்தியாசமாகவும், சொரசொரப்பாகவும் தோன்றும்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தழும்புகள் சற்றே சாதாரணமாக காட்சியளிக்கத் துவங்குகின்றன. ஆனால், காலம் செல்லச் செல்ல இவை வளருவதில்லை. இங்கு தான் நீங்கள் சில சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். தழும்புகளை நீக்குவதற்காகவே பல இரசாயன மருந்துகள் கிடைத்து வருகின்றன. ஆனால் அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே பலனளிக்கும் மற்றும் பக்க விளைவுகளும் தோலில் ஏற்படும். எனவே, இயற்கையான வழிமுறைகளை கையாண்டு இந்த தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

பல்வேறு மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு தழும்புகளுக்கு சிகிச்சை செய்யலாம். இன்று, நாம் பழ ஜூஸ்களைக் கொண்டு எப்படி தழும்புகளை நீக்கலாம் என்று படிக்கப் போகிறோம். தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகவும், தோலுக்கு மிகவும் உகந்ததாகவும் பழங்கள் உள்ளன. அதே போல, பழ இரசங்களும் மிகவும் நன்மை தருபவையாகவும் மற்றும் தழும்புகளை நீக்குவதற்கு உதவுபவையாகவும் உள்ளன. அது போன்ற சில ஜூஸ்களைப் பற்றி இங்கே காண்போம்.

தக்காளி ஜூஸ்

சிவந்த, சாறும், சுவையும் மிகுந்த தக்காளி ஜூஸ் தழும்புகளை திறனுடன் நீக்கவல்லது. தக்காளி சாற்றினை பிழிந்து தழும்புகள் உள்ள இடத்தில் பூசவும். 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அந்த இடத்தை கழுவவும். தோலை சமநிலைக்கு கொண்டு வரும் குணம் இயற்கையாகவே தக்காளிக்கு உண்டு. தோலில் தொடர்ந்து இந்த சிகிச்சையை செய்து வருவது தழும்புகளை விரட்டி விடும். மேலும், தக்காளியை பயன்படுத்துவதால் தழும்புகள் மறைவது மட்டுமல்லாமல், தோல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.

எலுமிச்சை

பல்வேறு உடல் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு எலுமிச்சையில் தீர்வு உண்டும். இந்த பழத்தால் தழும்புகளையும் நீக்க முடியும். எலுமிச்சையில் உள்ள இயற்கையான பளிச்சிடச் செய்யும் ப்ளீச்சிங் தன்மை தோலை மிருதுவாக்கி, தழும்புகளை மறையச் செய்யவும், தோலை பளபளக்கச் செய்யவும் செய்கிறது. எலுமிச்சை சாற்றை நேரடியாகவும் மற்றும் முகத்தில் ஃபேஸ் ஃபேக் அல்லது பேஸ்மாஸ்க்-உடனும் சேர்த்து பயன்படுத்தலாம். எலுமிச்சை சாற்றில் இயற்கையாகவே அமிலத்தன்மை உள்ளது. எனவே இதனை உங்கள் கைகளில் எடுத்து தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து தழும்புகளை நீக்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ்

தோலுக்கு நன்மை பயக்கும் குணத்தை கொண்டதாக ஆரஞ்சு உள்ளது. ஆரஞ்சு சாற்றை தழும்புகளில் தடவும் போது அது தோலை அந்த பகுதியில் சரி செய்து மீண்டும் அழகு பெறச் செய்கிறது. உங்கள் உடலில் ஆரஞ்சு சாற்றைத் தடவி 10-15 நிமிடங்களுக்குப் பின்னர், அதனை மிதவெப்பமான தண்ணீரில் கழுவவும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி சாற்றை சமநிலையற்ற தோல் பகுதிகளை சரி செய்வதற்கான தீர்வாக பயன்படுத்த முடியும். பிற பழச் சாறுகளை விட இது சற்றே பலன் குறைந்த முறையாக இருக்கும். எனினும், தழும்புகளை நீக்குவதில் ஸ்ட்ராபெர்ரியும் சிறந்த பலனளிக்கும் என்பதில் ஐயமில்லை. ஸ்ட்ராபெர்ரி சாற்றை தோலில் தேய்க்கும் போது அது தழும்புகளில் செயல்பட்டு, தோலை மென்மையாகவும், சுத்தமானதாகவும் மாற்றுகிறது.

தர்பூசணி

தர்பூசணி கோடைக்கு குளுமை தரும் பழம் மட்டுமல்ல, தழும்புகள் தொடர்பான தோல் பிரச்னைகளையும் தீர்க்கும் பழமாகும். நிறைய தண்ணீர் உண்ண சுவையான தர்பூசணியை தோலில் சில நிமிடங்களுக்கு நேரடியாக தடவவும். இந்த பழம் தோலில் உள்ள தழும்புகளை நீக்குவதில் சிறந்த பங்காற்றுகிறது

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராகிறாரா விஷால்?



ஆம் ஆத்மி என்ற கட்சி, தொடங்கிய ஒரே ஆண்டில் வியத்தகு வெற்றி பெற்று தலைநகர் டில்லியில் ஆட்சி அமைத்து டோட்டல் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து விட்டது. அதோடு, 40 ஆண்டுகால அரசியல் கட்சிகளுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில், சமந்தா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் அக்கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில், நடிகர் விஷால், அந்த கட்சியின் தமிழக தலைவராகப்போவதாக ஒரு செய்தி பரபரப்பை கூட்டியது. அதிலும் இதுவரை அரசியல் பற்றி ஒரு கருத்துகூட சொல்லாத விஷாலுக்குள்ளும் ஒரு அரசியல்வாதி இருந்து கொண்டிருந்தாரா? என்று பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்றனர்.

ஆனால், இநத செய்தி விஷாலின் காதுக்கு சென்றபோது, அவருக்கு ஒன்றுமே புரியவில்லையாம். அது என்ன ஆம் அத்மி? எனக்கு ஒன்னுமே புரியலையே என்றாராம். அப்போதுதான் நீங்க பேப்பரே படிக்கிறது இல்லையா என்று சொல்ல ஆரமபித்தவர்கள் அக்கட்சியின் டில்லி வரலாறை சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள்.

அதன்பிறகுதான், அப்படியா சங்கதி. நானே இப்பத்தான் அந்த கட்சியை பத்தி கேள்விப்படுறேன். அதற்குள் நான் அக்கட்சியின் தமிழக தலைவராகப்போறதா யாரு பரப்பி விட்டாங்க? ஒன்னுமே புரியலையே சாமி. என்று மண்டையை சொறிந்தாராம் விஷால்.

சரி எப்படியோ செய்தி பரவிப்போச்சு. கட்சிப்பணி வா வா என்கிறது. உங்க அபிப்ராயம் என்ன? என்று கேட்டபோது, என் படத்துல அரசியல் இருந்தாகூட எனக்கு அது பிடிக்காது. அந்த அளவுக்கு அரசியல்ல ஈடுபாடே இல்லாதவன் நான். நானாவது அரசியலுக்கு வர்றதாவது. அட போங்கண்ணே ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்க என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாராம் விஷால்.

கமலுடன் மீண்டும் இணைகிறார் மீனா..?



விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் கமல், அடுத்து லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிப்பதாகத்தான் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில், மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தில் தமிழ் ரீமேக்கில் கமலே நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.

மலையாளத்தில் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அப்படத்தின் ரீமேக் உரிமையை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதுவரை இந்த தொகைக்கு எந்த மலையாள படமும் விலைபோனதில்லையாம். அதனால் கமல் மாதிரி முன்னணி நடிகர்கள் நடித்தால் படத்தை பிரமாண்டமாக்கி பெரிய தொகையை எடுத்து விடலாம் என்று அவரை அணுகியுள்ளார்களாம். ஆனால் கமல்தரப்பு இன்னும் உரிய பதிலை சொல்லவில்லையாம். விஸ்வரூபம்-2 வந்த பிறகுதான் எதையுமே சொல்ல முடியும் என்று கூறி விட்டாராம்.

இந்தநிலையில், இந்த படம் கமலிடம் சென்று விட்ட தகவலை அறிந்த மீனா, மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த தான் தமிழில், கமலுக்கும் ஜோடியாக நடித்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவ்வை சண்முகி படத்தில் கமலுடன் நடித்தவர் என்பதால், தான் அவருடன் நடிக்க தகுதி உள்ள நடிகைதான் என்பதால் சம்பந்தப்பட்டவர்களை அணுகி, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளாராம மீனா.

ஒருவேளை, கமல் மறுத்தால் பசுபதியை வைத்து படத்த இயக்குவோம் என்று மீனாவிடம் சொன்னபோது, அதனாலென்ன அவருடனும் குசேலன் படத்தில் நடித்திருக்கிறேனே. தமிழில் எந்தநடிகரை வைத்து இயக்கினாலும் ஹீரோயினி வாய்ப்பு எனக்குத்தான் தர வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு வைத்திருக்கிறாராம் மீனா.