Sunday, 22 September 2013

கற்பனையும் கைத்திறனும்: வீட்டுக்குள் மரம்!




Imagine Craft: tree house!

என்னென்ன தேவை?

பிவிசி பைப் - 1 (விருப்பமான சைஸில் கட் செய்து வாங்கிக் கொள்ளவும்)
கயிறு - தேவையான அளவு
பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பவுடர் - 1 கிலோ (செராமிக் பவுடரும் பயன்படுத்தலாம்)
ஃபெவிகால் - 1 பாட்டில்
அக்ரிலிக் பெயின்ட் - (பிடித்த வண்ணங்களைத்
தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளவும்)
பிளாஸ்டிக் இலைகள் - தேவையான அளவு (கடைகளில் கிடைக்கும்)
மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி - 1
பிளாஸ்டிக் பூக்கள் - ஒரு கொத்து
கூழாங்கற்கள் - தேவைக்கேற்ப
பிரஷ் - 1.

“மிரட்டும் அலங்காரங்கள் வேண்டாம்... ஆடம்பரமான பொருள்களை அறைக்குள் திணித்து அடைக்க வேண்டாம்... கலைநயம் மிளி ரும் சின்னச்  சின்னப் பொருள்கள் போதும்... கலையழகு வீட்டில் தாண்டவமாடும். அதற்கு நிச்சயம் உதவும் சிறிய செயற்கை மரம்!  எளிய பொருள்களைக் கொண்டு  இதை நீங்களே செய்யலாம்” என்று உற்சாகம் தருகிறார் சென்னையில் வசிக்கும் லதா அருண்கு மார். கூடவே, செயற்கை மரம் தயாரிக்கும்  வழிமுறையை எளிமையாக விவரிக்கிறார் இங்கே... 

எப்படிச் செய்வது?

பிவிசி பைப்பில் ஃபெவிகாலை முழுமையாக தடவிக் கொள்ளவும். அதில் கயிறை வட்டவடிவமாக சுற்றவும். பைப்பின் முக்கால் பாகம் வரை சுற்றினால் போதும்.

ஒரு பாத்திரத்தில் அல்லது பக்கெட்டில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பவுடரை கொட்டி அதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து  பிசையவும். கரைசல்  தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும்.

இந்தக் கரைசலை கயிறு சுற்றிய பைப்பில் முழுவதும் தடவவும். கயிறு வெளியே தெரியாத அளவுக்கு அடர்த்தியாக பூச வேண்டும்.  சிறிது நேரம்  உலர வைத்தால் கலவை பைப்புடன் இறுக ஒட்டிக் கொள்ளும்.

பிளாஸ்டிக் தொட்டி யிலும் கரைசலை தேவையான அளவு போட்டு, அதில் பைப்பை நடுவில் வைக்கவும். பைப்பை குச்சியால் கீற வும். இப்படிக்  கீறுவது மரம் போன்ற தோற்றத்தைத் தரும்.

கலவை நன்கு உலர்ந்ததும் உங்களுக்குப் பிடித்த வண்ணங்களைக் கொண்டு பெயின்ட் அடிக்கவும்.

பெயின்ட் உலர்ந்ததும் பைப்பின் மேல் பகுதி யில் செயற்கை மலர் களால் அலங்கரிக்கலாம்.

விரும்பினால் பிளாஸ்டிக் இலைகளை பைப்பின் மீது சுற்றலாம். அவ்வளவுதான்... அழகான செயற்கை மரம் ரெடி! அழகுக்கு அழகு  சேர்க்க  பூத்தொட்டியில் கூழாங்கற்களை போடலாம். இம்மரத்தை வீட்டு வரவேற்பறையில் வைத்தால் பார்ப்பவர்களை சுண்டி இ ழுக்கும். தண்ணீர் படாமல்  பார்த்துக் கொண்டால் போதும். நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் பூக்களுக்கு பதி லாக ரோஜா போன்ற நிஜப்பூக்களை வைத்தால்  அழகு அள்ளும்!

0 comments:

Post a Comment