Sunday, 6 October 2013

விதவைகள் அர்ச்சகர்களாக நியமனம்: கர்நாடகாவில் அதிரடி!

மங்களூரு மாவட்டம் குத்ரோலி கோகர்நாதேஸ்வரா கோவிலில் தசரா விழாவை முன்னிட்டு கணவனை இழந்த பெண்கள் இந்திரா சாந்தி, லட்சுமி சாந்தி ஆகிய இருவர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


7 _LADY WIDOW PRIESTS

 


கோவிலுக்குள் நுழைந்த பின் அன்னபூர்ணேஸ்வரி, ஹனுமான், நவக்கிரகங்கள், கிருஷ்ணர், சாரதா விக்ரகங்களுக்கு அவர்கள் பூஜை செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினர். இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களாக பூஜை செய்யும் முறைகள் அனைத்தும் கற்றுக் கொடுக்கப்பட்டன.


இதற்கு காரணமான முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன் பூஜாரி கூறுகையில், “மாறி வரும் காலத்திற்கேற்ப நாமும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்களை பூமா தேவியாக மதிக்கும் நம் நாட்டில் அவர்கள் கணவனை இழந்து விட்டால் எந்த நல்ல காரியத்திலும் பங்கு கொள்ள அழைக்காமல் புறக்கணிப்பது மூட நம்பிக்கையின் அடையாளம். இந்த வழக்கம் நாட்டிலிருந்து ஒழிய வேண்டும்,” என்றார்.மேலும் இந்த நியமனத்தை கர்நாடகாவிலுள்ள பல பெண்கள் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.



Two widow priests perform pooja at Kudroli Temple

****************************************


For the first time in the history of any temple of the region, Sri Gokarnanatha Temple at Kudroli has appointed two widows as priests. They performed pooja to the Lord at the temple on October 6, Sunday on the auspicious occasion of Navaratri.


0 comments:

Post a Comment