Saturday, 14 December 2013

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்!



பொதுவாக பிறந்த புதிதில் குழந்தை கள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.

அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும்.

ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.

பாடசாலைக்குச் செல்லும் குழந் தைகளானால் மாலையில் பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்கள் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.

வளர்ந்து பெரியவர்களாகி விட் டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது.

35 வயதைக் கடந்த வர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.

மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மருந்து தூக்கம் தான்.

போதிய அளவு தூக்கம் இல்லா ததே பல நேரங்களில் மனோரீதியா கப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும். மனோநிலை பாதிக்கப்பட் டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புபவர்களு க்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும்.

எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதுமானதல்ல. சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும் அதுபோன்ற வர்கள் காலையில் அதிக நேரம் தூக்குவார்கள். பின்னர் அவசரமாக எழுந்து, அலுவ லகத்திற்குத் தாமத மாகச் செல்வர். முதலில் இரவில் வெகு நேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத் தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரண மாகிறது.

தினமும் பத்து மணி நேரம் நன்றாக தூங்கினால், நூற்றாண்டு காலம் வாழ முடியும் என ஆய்வு கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 638 முதியவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட் டுமே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். 90 முதல் 99 வயது உடைய 3927 பேரும், நூறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,794 பேரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நூறு வயதில் வாழ்ந்து வரும் முதியவர்களிடம் கேட்டதில் அவர்கள் தூக்கத்துக்கு குறையே வைப்பதில்லை என, தெரிந்தது. தினமும் 10 மணி நேரம் நன்றாக தூங்குவதாக இவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஆண்கள் தான், கவலையில்லாமல் தூங்கி அதிக அளவில் சதம் அடித்துள்ளதும், இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நன்றாக தூங்குவதால் உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment