Friday, 13 September 2013

லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை : மத்திய அரசு யோசனை!



அண்மையில் லஞ்ச தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தார்.அதன்படி அந்த சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த சட்ட திருத்தம் கடந்த மாதம் பாராளுமன்ற மேல் சபையில் அறிமுகம் செய்யப்பட்டது.புதிய சட்டத்திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



sep 13 - zero-rupees
 


அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது சட்ட விரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. லஞ்சம் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் அதிகபட்சம் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.லஞ்சத்தை அடியோடு வேரறுக்க ஏராளமான சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து லஞ்ச தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தார்.




அதன்படி அந்த சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த சட்ட திருத்தம் கடந்த மாதம் பாராளுமன்ற மேல் சபையில் அறிமுகம் செய்யப்பட்டது.புதிய சட்டத்திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க முன் வருபவர்கள் தங்கள் சுய நலத்துக்காகவே பணம் கொடுக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.



மேலும் லஞ்சம் கொடுப்பவர்களும், வாங்குபவர்களுக்கான குறைந்த பட்ச தண்டனையை 6 மாதத்தில் இருந்து 3 ஆண்டுகளாக உயர்த்த பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. அது போல அதிகபட்ச தண்டனை காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரையிலான ஜெயில் தண்டனையாக மாற்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த சட்டத் திருத்தத்துக்கு பாராளுமன்றமும், மத்திய மந்திரிசபையும் ஒப்புதல் கொடுத்தால், இனி லஞ்சம் கொடுப்பவர்களும் சிக்கி சிறை கம்பியை எண்ண வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Soon, you may land in prison for offering a bribe.

****************************************



 Giving a bribe will soon be as much an offence as accepting it under changes planned to the country’s anti-corruption law. The government also proposes to hold corporate leaders accountable for such acts of their employees.

In an overhaul of the law, the government for the first time proposes to criminalise bribing — in line with the UN convention.- 

0 comments:

Post a Comment