Sunday, 15 September 2013

‘தமிழ் கலைஞ்ர்களுக்கென தனி அமைப்பு!’ – பாரதிராஜா பரபரப்பு பேச்சு!



“ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நடந்து கொண்டிருப்பதால், ஆந்திர கலைஞர்கள், விழாவில் ஆட முடியாது என்று சொல்லி விட்டார்கள். தமிழ் கலைஞர்களால் அப்படி சொல்ல முடியவில்லை. நமக்கு பிரச்னைகள் இல்லையா? ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். காவிரிப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவே இல்லை. கச்சத்தீவு பிரச்னை இருக்கிறது. மீனவர்கள் கூட்டம், கூட்டமாக சுடப்படுகிறார்கள். இதெல்லாம் பிரச்னை இல்லையா? தமிழர்களான நாங்களும் பிரச்னையில்தான் இருக்கிறோம். எனவே, சினிமா நூற்றாண்டு விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை. “என்று பாரதிராஜா வேதனையுடன் குறிப்பிடடத்தை பற்றி கோலிவுட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

sep 17 JK Enum Nanbanin  MINI
 


டிரீம் தியேட்டர் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சேரன் எழுதி, இயக்கியுள்ள “ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா முன்னிலையில் நடிகர் சூர்யா ஒலிப்பேழையை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
அந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும் போது,”டைரக்டர் சேரன் உணர்ச்சிகரமானவர். அற்புதமான கலைஞன். யதார்த்தமாகவும், மண்வாசனையோடும் படம் எடுக்க கூடியவர். அவரது ‘தவமாய் தவமிருந்து’ படத்தை பார்த்தபோது என்னால் இதுபோன்ற ஒரு படம் எடுக்க முடியவில்லையே என்று நினைத்து இருக்கிறேன். வாழ்க்கையை பிழிந்து படம் எடுத்து இருந்தார். 


சினிமாவில் யதார்த்தங்கள் வரவேற்கதக்கதுதான். ஆனால் பாதையை மாற்றக்கூடாது. என் தாத்தா போட்ட ஒத்தையடிப்பாதையை என் தந்தை வண்டிச் சாலையாக்கினார். நான் தார்ச்சாலை போட்டேன். என் பிள்ளை சிமெண்ட் சாலை போடுவான். அது ரப்பர் சாலை ஆகலாம். இப்படித்தான் சினிமாவில் மாற்றம் இருக்க வேண்டும்.


தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை விட்டு விட்டு படம் எடுக்க கூடாது. அவற்றை சார்ந்தே படங்கள் இருக்க வேண்டும்.ஆனாலும் தமிழ்த் திரையுலகில் இன்று, இளம் இயக்குனர்கள் வித்தியாசமான சிந்தனைகளுடன் படங்கள் இயக்குகிறார்கள். நாம் எந்தக் கதையை வேண்டுமானாலும் இயக்கலாம். 

ஆனால், தமிழ் மண்ணையும், கலாசாரத்தையும், நாகரீகத்தையும், பண்பாட்டையும் மறக்ககூடாது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழக அரசும் இணைந்து நடத்த இருப்பதை அறிந்தேன். நம் உணர்வுகளை சொல்ல, நமக்கென்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை இல்லையே என்று நினைக்க தோன்றுகிறது.
ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நடந்து கொண்டிருப்பதால், ஆந்திர கலைஞர்கள், விழாவில் ஆட முடியாது என்று சொல்லி விட்டார்கள். தமிழ் கலைஞர்களால் அப்படி சொல்ல முடியவில்லை. நமக்கு பிரச்னைகள் இல்லையா? ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 


காவிரிப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவே இல்லை. கச்சத்தீவு பிரச்னை இருக்கிறது. மீனவர்கள் கூட்டம், கூட்டமாக சுடப்படுகிறார்கள். இதெல்லாம் பிரச்னை இல்லையா? தமிழர்களான நாங்களும் பிரச்னையில்தான் இருக்கிறோம். எனவே, சினிமா நூற்றாண்டு விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை. 


தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. ஆனால், தமிழ் நடிகர்களுக்கு என்று சங்கம் இல்லை. தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இல்லை. தமிழ் திரைப்பட வர்த்தக சபை இல்லை. எனவே, இதுபோன்ற அமைப்புகள் தொடங்க வேண்டும்” என்று பாரதிராஜா பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார.

0 comments:

Post a Comment