
15 வார கர்ப்பிணியாக இருந்த 31 வயது பெண், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச் சாவடைந்தார். ஆனால், பரிசோதனையில் அவரது வயிற்றில் இருந்த கரு ஆரோக்கியமாக இருந்தது. அந்த கரு 27 வாரங்கள் வரை தாயின் கருவறையில் இருக்க வேண்டும் என்பதை அறிந்த மருத்துவர்கள், சுமார் 3 மாதங்கள் மருத்துவமனையில் உபகரணங்களின் உதவியோடு தாயை உயிரோடு வைத்திருந்தனர்.
பிறகு, கருவுக்கு 27 வாரங்கள் ஆன நிலையில், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
பிறக்கும் போது 1.42 கிலோ எடை இருந்த அந்த ஆண் குழந்தை தற்போது ஆரோக்கியமாக அவர்களது உறவினர்களிடம் வளர்ந்து வருவாதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மரணம் அடைந்த தாயின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்ததாகவும், இதுபோல மருத்துவ உபகரணங்களின் உதவியோடு வாழ்ந்தவர்களின் உடல் உறுப்புகளை பொதுவாக பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கும், ஆனால், இந்த தாயின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்ததாகவும் மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment