உத்தரகாண்டில் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 11 கிராமங்களை எல்லைப் பாதுகாப்பு படை தத்தெடுத்தது.உத்தரகாண்ட் மாநிலம் காளி நதிக் கரையில் அமைந்துள்ள காளிமத், கவில்தா, கோட்மா, சியான்சு, சிலோண்ட், குல்ஜெத்தி, கென்னி, ஜல்டலா, செüமசி, புயுன்கி உள்பட 11 கிராமங்கள் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டன. இக்கிராமங்களை எல்லைப் பாதுகாப்பு படை தத்தெடுக்க முடிவு செய்துள்ளது.அங்கு சாலைகள்,பாலங்கள் அமைப்பது மட்டுமின்றி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க எல்லைப் பாதுகாப்பு படை முன்வந்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில்...