Saturday, 9 November 2013

“வைக்கோல் குக்கர்” எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து சாதனை!

 வைக்கோல் மூலம் வீட்டில் சமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்” என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து.”எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பேன். ‘அடிக்கடி பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏத்திடுறாங்க. குடும்பத்தை நடத்துறது பெரிய சவாலா இருக்கு’னு அப்பாவும் அம்மாவும்  பேசிக்குவாங்க. இதுக்கு நாம் ஏதாவது செய்யலாமேனு நினைச்சேன். அப்போ உருவானதுதான் இந்த வைக்கோல்...

Apple iPhone 6. நவீன வசதிகளுடன் வெளியாகவுள்ளது!

ஆப்பிள் கம்ப்யூட்டர்  உலகின் மிகப்பெரிய கணினி மற்றும்    தகவல் தொடர்பு     சாதனங்களைத் தயாரித்து     வெளியிடும்      நிறுவனம்.ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் ஆனாலும் சரி,  அதனுடன் தொடர்புடைய மொபைல்கள் போன்ற தகவல்கள் தொடர்பு சாதனங்கள் ஆனாலும் சரி… அதற்கென தனியான iOS ல் இயங்கு கூடிய இயங்குதளங்களைப் பெற்றிருக்கிறது.ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்களின் பாதுகாப்பும் மிக மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டவை. வேறு யாராலும் அதன் கட்டமைப்பைச் சேதப்படுத்தி எளிதில் வைரஸ் தாக்குதல்களை...

5ஜி வலையமைப்புக்கு 600 மில்லியன் முதலீடு!

அடுத்த தலைமுறை வலையமைப்பான 5 ஜி (5th Generation) தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக ஹுவாயி அறிவித்துள்ளது.தற்போது சில நாடுகளில் மட்டுமே 4ஜி அதாவது 4 ஆம் தலைமுறை வலையமைப்பு பாவனையில் உள்ளது. சில நாடுகளில் பரீட்சாத்தமாக வழங்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் 5ஜி தொழிநுட்ப ஆராய்ச்சிக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 5ஜி வலையமைப்பானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பாவனைக்கு...

நாம் 100 கோடி இரசிகர்களை வைத்திருக்கிறோம் : கமல்!

      ஆறு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று தனது திரைப் பயணத்தை தொடங்கிய கமல், இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளான பிறகும் அதே மாணவ பருவத்தைப்போன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.குறிப்பாக விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்கி நடித்து மாபெரும் பரபரப்பை உண்டு பண்ணினார்.அப்படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை பட்டியலில்...

ஃபேஸ்புக்கில் இணைந்த ஷங்கர்!

 தன் இணைய தளத்தினைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் பேஸ்ஃபுக் தளத்தில் இணைந்திருக்கிறார்.எந்தொரு படத்தினை இயக்கி வந்தாலும், அப்படத்தினைப் பற்றிய செய்தியை தனது இணையத்தில் (http://www.directorshankaronline.com/) அவ்வப்போது செய்தியாகவும், புகைப்படமாகவும் வெளியிட்டு வந்தார் இயக்குநர் ஷங்கர்.தற்போது அந்த இணையத்தினைத் தொடர்ந்து, பேஸ்ஃபுக் தளத்திலும் இணைந்திருக்கிறார். அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/shankarofficialதனது...

மொபைலில் கட்டணத் திருட்டை தடுப்பது எப்படி?

மொபைல் போன்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், டாட்டா டோகோமோ, ரிலையன்ஸ் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் கட்டணத்திருட்டுக்கு முடிவு கிடைத்துள்ளது. இது சாத்தியமா? மேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை!இது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குவியவே, ‘ட்ராய்’ இதற்கு முழுப்பொறுப்பேற்று விடையும் கொண்டுள்ளது. இனிமேல் இந்த அடாவடி திருட்டுகளை நிறுத்த நீங்கள் 155223 என்ற எண்னை பயன்படுத்துங்கள்.இந்த...

அறிவோம் ஆயிரம்!

ஆற்று நீர் வாதம் போக்கும் அருவி நீர் பித்தம் போக்கும் சோத்து நீர் இரண்டையும் போக்கும்.....எம் முன்னோர்களும், தற்காலத்தில் தாயகத்தில் வாழ்வோரும் தங்கள் காலை உணவாக சாப்பிடும் உணவுதான் பழஞ்சோறு. பழஞ்சோற்றுடன் எஞ்சியிருந்த கறிகளையும் சேர்த்து...ப் பிரட்டி சாப்பிடும் போது ஒரு தனி ருசியை உணர்ந்து கொள்ளலாம். கறி இல்லாத விடத்து அதனுடன் வெங்காயம், பச்சமிளகாய், ஊறுகாய், தயிர் என்பனவற்றை சேர்த்து திரணையாகவோ அல்லது நீர் ஆகாரமாகவோ அருந்தி உற்சாகமாகவும், தைரியசாலிகளாகவும், பலகாலம் சுகதேகிகளாக உயிர் வாழ்ந்துள்ளனர்.நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பாக, பன்றிக்...

உலககோப்பை ஹாக்கியை நடத்தும் வாய்ப்பை பெற்றது இந்தியா!

சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது.இதன்படி உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை இந்தியாவில் நடைபெறும என்று தெரிவித்துள்ளது.2018ம் ஆண்டுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்த உரிமம் கேட்டு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. ஆண்கள் உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு ஹாக்கி இந்தியா அனுமதி கோரி இருந்தது.பல்வேறு நாடுகளின்...

உலகின் பிரபல சுற்றுலா தல பட்டியலில் இடம் பெற்ற கேரளா!

குடும்பத்தினரோடு விடுமுறையை கழிக்க உலகின் தலைசிறந்த 10 இடங்களின் பட்டியலை லோன்லி பிளானட்’ என்ற சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த பட்டியலில் நியூ யார்க், டென்மார்க், பராகுவே, ஐஸ்லாந்து, இத்தாலி, ஹவாய் தீவுகளுக்கு அடுத்தபடியாக கேரள மாநிலமும் இடம் பெற்றுள்ளது.பசுமையான இயற்கை சூழலில் அழகிய கடற்கரைகள், நீர் நிலைகள், தேசிய பூங்காக்கள், யானை காப்பகங்கள் போன்றவை இங்கு உள்ளன.மேலும் இந்தியாவின் இதர இடங்களை போல் இல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாகவும் கேரளா இருப்பதால் 2014-ல் விடுமுறையை கழிக்க தலைசிறந்த 10...

அடி இறக்கம் எனப்படும் கருப்பை தளர்வின் அறிகுறி!

தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் என்னவென்று பார்த்தால்...இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மைஅடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்சிலருக்கு இரும்பினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வுஅடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்சிறுநீரை அடக்க...

தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டுமா?

 தாய்ப்பால் அதிகம் சுரக்க எந்த வகையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று குழம்புவது இயல்பு. குழந்தை பிறந்த பின்பு குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் உணவு மற்றும் முக்கிய உணவாக இருப்பது தாய்ப்பால். குறைந்தது 6 மாதக் காலமாவது கண்டிப்பாக தாய்பாலை  கொடுக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி. இதை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை எனலாம்.சிலருக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும். மனஅழுத்தம், தூக்கமின்மை, சத்துள்ள ஆகாரம்...

கர்பிணிகளுக்கு அவசியமாகும் பல் ஆரோக்கியம்!

 கர்ப்ப கால ஆரோக்கியம் என்பது ஒரு தாயின் ஆரோக்கியத்தை மட்டும் அல்லாமல், அவள் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தையும் சார்ந்த விஷயமாக இருப்பதால் அதற்கு அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.முதலில், கர்ப்பமுற்றிருப்பதாக ஒரு பெண்ணுக்குத் தெரிய வந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.மருத்துவர் பரிந்துரைக்கும் சோதனைகளை செய்து கொள்வதும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதும்...

முகம் கழுவுதலில் செய்யும் தவறுகள்!

 பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். எனவே, முகத்தை பராமரிக்க பல விதங்களில் முயற்சிப்பர். ஆனால், சில சின்ன சின்ன கவனக்குறைவுகளால் முக அழகு குறையலாம். தவறான சோப்புகளைப் பயன்படுத்துதல்..பொதுவாக பெண்கள் அவர்களது சருமத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என தெரிந்து அதற்கேற்ற சோப்பு அல்லது முகம் கழுவும் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், வறண்ட சருமம் கொண்டவர்கள், எண்ணெய் பசை சருமத்துக்கு...

எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை!

இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன. ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு துறைகள் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சமூக காரணங்களுக்காக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன.உதாரணமாக வீடியோ காசட் தொழிலை சொல்லலாம். ஆக இந்த மாற்றங்களின் வீச்சு அதிகரிக்கும் போது பல்வேறு வேலை இழப்பு இருந்தாலும், புதிய புதிய துறைகளின் தோற்றமும், ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட தொழில்களில் அசுர வளர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை...

பசங்க, அம்மா பையனா இருந்தா என்ன பிரச்சனை?

இந்த உலகில் அனைவருக்கும் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் தானே இந்த அழகான உலகிற்கு கொண்டு வந்தது. அத்தகைய அம்மாவை ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி மிகவும் பிடிக்கும். இருப்பினும் ஆண்களுக்கு தான் அம்மா என்றால் உயிர். பெண்களுக்கு அப்பா தான் உயிர். வேண்டுமென்றால் அனைத்து வீடுகளிலும் பாருங்கள், பசங்க எல்லோருமே, அவர்களது அம்மாக்களிடமே மிகவும் பாசமாக நடந்து கொள்வார்கள். இவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பசங்களுக்கு திருமணம் ஆனப் பின்பு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைவது...

முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா!

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் இப்போட்டியில், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில், இன்று நடைபெற்ற முதல் சுற்று டிரா ஆனது. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சுற்றில் இரண்டு வீரர்களும்...

முத்தான முப்பது விஷயங்கள்!

* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம் என்கிறார்கள். இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர். அக்கால இலக்கியங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும்...

காமன்வெல்த் மாநாடு : சல்மான் குர்ஷித் பங்கேற்பு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்றும், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போவதாகவும் வெளியுறவுத் துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.தமிழீழ இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபட்சவை காப்பாற்றுவதற்காக இலங்கையில் நடத்தப்படும் இந்தக் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் சார்பில்...

24 கரட் தங்கத்தில் ஆப்பிள் தயாரிப்புக்கள்!

கைப்பேசி மற்றும் டேப்லட் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனம் மற்றுமொரு புது முயற்சியில் இறங்கியுள்ளது.அதாவது 7.9 அங்குல அளவுடைய Retina தொடுதிரையினைக் கொண்ட 24 கரட் தங்கத்தினால் ஆன iPad Mini மற்றும் iPad Air சாதனங்களை தயாரித்து அறிமுகப்படுத்தவுள்ளது.இச்சாதனங்களின் விலையானது ஏறத்தாழ 1500 யூரோக்களாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள...

வேகமாக பரவி வரும் புது வைரஸ்! மக்களுக்கு எச்சரிக்கை...!

இன்றைக்கும் கணனி பயன்படுத்துவோர் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை எது என்றால் அது வைரஸ் தான்.தற்போதைய நிலையில் பீ போன் என்ற புதிய வைரஸ் ஒன்று மிக வேகமாகப் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது ஏறத்தாழ 20 பெயர்களில் கணனி சிஸ்டத்தில் தங்குகிறது.இந்தியாவில் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று மற்ற வைரஸ்களையும் கணனியில் பதிக்கும் தன்மை கொண்டதாக இது உலவுகிறது.டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பைச்...

பிரைன் லாரா இந்தியா வருகை...! கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு...!

            மும்பையில், வரும் 14ம் தேதி தொடங்கும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டல்கர் பங்கேற்கும் 200வது போட்டி, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறுதியாட்டத்தை காண்பதற்காக, வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா இந்தியா வந்துள்ளார்.            கிரிக்கெட்டின் கடவுள் என்று...

அம்மா என்னும் மரியாதையே.......!

 “எங்களுடைய மகள் முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தாள். சொன்ன பேச்சைக் கேப்பாள், ஒழுங்கா படிப்பாள்… யார் கண் பட்டதோ தெரியவில்லை. இப்போதெல்லாம் யாருடைய பேச்சையும் கேட்பதே இல்லை. எதுக்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுகிறார். அப்பா, அம்மா என்னும்  மரியாதையே சுத்தமா இல்லாமற் போச்சு !என்ன செய்வதென்றே தெரியலை” இப்படி யாராவது பேசினால், உங்கள்   மகளிற்கும் பதின்ம வயதாக இருந்தால் கேளுங்கள். பெரும்பாலும் “ஆமாம்” என்பது தான் பதிலாக இருக்கும். அப்படியானால், இது ஒரு வீட்டின் பிரச்சினையில்லை. உலகில் இருக்கும் பல கோடிக்கணக்கான பதின் வயதுப்...

எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

  எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?பழங்கள்:திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்ஆப்பிள்கள் ஒரு மாதம்சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்அன்னாசி (முழுசாக) 1 வாரம்(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்காய்கறிகள்:புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,ஓம இலை 1-2 வாரங்கள்வெள்ளரிக்காய் ஒரு வாரம்தக்காளி 1-2 நாட்கள்காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்காளான் 1-2 நாட்கள்அசைவ உணவுகள்:வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்சமைத்த மீன் 3-4 நாட்கள்பிரஷ் மீன் 1-2 நாட்...

பிறப்பு, இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா?

சென்னை மாநகராட்சியின் மூலம் பிறப்பு – இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் இணைய தளத்தில் இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுவரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. இனிமேல் தமிழிலும் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய ஏற்பாட்டினை செய்துள்ளது.பிறப்பு – இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் இன்று மேயர்...

விஐபிக்களின் உறவினர்களுக்கு விருது : வெளிவந்திருக்கும் புதிய பூதம் !

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற பரிந்துரைக்கப்பட்டோரின் பட்டியலில், விஐபிக்களின் உறவினர்கள் பலரும் இடம்பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பத்ம விருதுகள் பெற முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்கள் சார்பில் சிலரை விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம். அந்த வகையில், சுமார் 1,300 பேரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதன் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில்,...

மங்கள்யானின் புவி வட்டப் பாதை 3வது சுற்று அதிகரிப்பு!

 செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், புவி வட்டப் பாதையை அதிகரிக்கும் 3வது சுற்றுப் பாதை இன்று காலை துவங்கியது.40,186 கி.மீ. ஆக இருந்த சுற்றுப்பாதை தற்போது 71,363 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல அடுத்தடுத்து 4 மற்றும் 5வது சுற்றுப் பாதைகள் மூலம், புவி வட்டப் பாதையின் தூரம் அதிகரிக்கப்பட உள்ள...

ஜிமெயிலில் விளம்பரங்களை தடுப்பது எப்படி!

ஜிமெயிலை பயன்படுத்தும் போது இன்பாக்சில் தோன்றும் விளம்பரங்களை சகித்து கொள்ள வேண்டும் ,அல்லது கண்டும் காணாமல் இருந்தாக வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லையா? இருக்கிறது!.ஜிமெயிலில் கூகுலால் தோன்றச்செய்யும் விளம்பரங்களை தடுப்பது சாத்தியம் தான் தெரியுமா? இதற்கு மூன்று சுலபமான வழிகள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது டெக்ரிசார்ட்ஸ் இணையதளம்.முதல் வழி மிகவும் சுலபமானது. அதாவது எச்.எடி.எம்.எல் வடிவத்தற்கு மாறிவிடுவது. ஜிமெயிலை எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்கும் வசதி தொடர்பான குறிப்பை நீங்களே கூட அடிக்கடி பார்த்திருக்கலாம். இண்டெர்நெட் இணைப்பின் வேகம் போதுமானதாக...