Tuesday, 10 December 2013

நான்காவது முறையாக தள்ளிப் போகிறது கோச்சடையான் ரிலீஸ்!

இந்த மாதம் வெளியாகவிருந்த கோச்சடையான் திரைப்படத்தின் பாடல்கள், மீண்டும் தள்ளிப் போகிறது. இதனால், படத்தின் வெளியீடும் தள்ளிப் போகிறது. ஏற்கனவே ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட கோச்சடையான் படத்தின் பாடல்கள், கிறிஸ்துமஸ் வாரத்தில் வெளியாகலாம் என செய்தி வந்தது. இப்போது, மீண்டும் ஆடியோ ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டிருந்தது, ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள்...

மூக்குத்தி அணிவது ஏன்..?!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும்....

வாழ்க்கை எனும் அரிய பிரசாதம் ...

உன் சகோதரனின் கண்களில் இருக்கும் தூசியை பெரிது படுத்தும் நீ, உன் கண்களில் இருக்கும் பெரிய மரக்கட்டையை கவனிக்க ஏன் தவறுகிறாய்? என்று நம்மை  பார்த்து ஏசு கிறிஸ்து கேட்கிறார்.பிறரை மதிப்பிடு செய்யும் போது மற்றவரை  நேசிப்பதற்கும் அவர்களால் நேசிக்கபடுவதர்க்குமான தகுதியை நாம் இழக்கிறோம் என்கிறார் அன்னை திரேசா.பிறரை மதிப்பிடு செய்து குறை கண்டு கொண்டே இருக்கும் குணத்தால் நாம் இழப்பது, அரிதான மனிதா நேயத்தையும் அழகான உறவுகளையும் தான்.குறை காண்பதால் நம்மை அறியாமலேயே நாம் சுய பச்சாதாபத்தின் பிடியில் அகப்பட்டு விடுகின்றோம்.ஐயோ எனக்குதான் எவ்வளவு கஸ்ரம்!...

கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி..!

  கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி - ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.அந்த எண் 1800-425-247-247.தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன.475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது...

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை இதோ...* பிசிஜி - பிறப்பின் போது* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்* டிபிடி (3) ஒபிவி...

கவலை என்பது எதுவரை? உயிரெழுத்தில் துவங்கும் தமிழ் பழமொழிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.!

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.அகல உழுகிறதை விட ஆழ உழு.அகல் வட்டம் பகல் மழை.அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?அடக்கமே பெண்ணுக்கு அழகு.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.அடாது செய்தவன் படாது படுவான்.அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.அத்திப் பழத்தைப்...

வாரியாரின் வார்த்தை விருந்து!

கல்வியின் பயன்கற்பதும் கேட்பதும் இறைவனை அடைவதற்கே. கல்வியின் பயனும் அதுவே. பட்டம் பெறுவதற்கென்றும், சிறந்த அறிவாளி என்று பிறர் மெச்சுவதற்கென்றும், கூட்டத்தில் மொழிக்கு மொழி தித்திக்க இனிமையாகவும் சதுரப்பாடாகவும் பேசுவதற்கென்றும் படிக்காதே. கல்வியின் பயன் கடவுளை அறிதலே என்பதை உணர்ந்து படிக்க வேண்டும்உண்பதன் நோக்கம்உண்பது பசியை நீக்குவதற்கு மட்டுமன்று, பசியாறுவதுடன் அந்த உணவினால் உடம்புக்கு வலிமையும், உள்ளத்திற்கு நற்பண்பும், நற்குணமும் உண்டாக வேண்டும். உணவினால்தான் நற்குணங்கள் உருவாகின்றன. ஆகார நியமம் மிக அவசியமானது. அறிவையும், அன்பையும் கெடுக்கக்...

உயர்ந்த பெண்ணின் உன்னதமான கடமைகள்!

உயர்ந்த பெண்ணின் உன்னதமான  கடமைகள்பெண்கள் சிருஷ்டியில் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்கள் அனைவருமே சக்தியின் வடிவங்கள். உலக இயக்கம் பெண்களாலேயே நடைபெற்று நிலை பெறுகிறது. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் வாழ்க்கையின் அடித்தளம் பெண்மையே ஆகும். பெண் ஆணுக்குத் தாயாய், சகோதரியாய், மனைவியாய், மகளாய் இன்னும் பல வகைகளில் உறவு உடையவளாகி நலம் செய்கிறாள்.சிறந்த பெண்ணொருத்தி தான் வாழும் இல்லத்தையே கோவிலாகச் செய்கிறாள். குடும்பம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது குடும்பத் தலைவியின் கையில்தான் இருக்கிறது. கணவனையும், கணவன் வீட்டாரையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப...

போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ?

நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம்.இப்போதெல்லாம், இது போன்ற ஸ்கேம் மெயில்களை வடிகட்டி, ஸ்கேம் மெயில்...

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா - அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டினுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான...

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…

* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை...

இயேசுவின் மொழிகள்!

மனிதனை மாசுபடுத்துபவைமனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தி விடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை, விபசாரம், சுயநலம், தீயச் செயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை.வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்ஆவியில்...

இசை எனும் இன்பம் - கட்டுரை!

 "கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம், பழி பாவங்களும் நிறைந்த இந்த உலகை விட்டு அழைத்துச் செல்கிறது" என்கிறார் கவிஞர் தாகூர்.இசை மனதில் தோன்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இசை முத்தமிழ்க்கு முன்னும், இயலுக்குப் பின்னும், நாடகத்திற்கு இடையில் நின்று இரண்டோடும் இணைந்து இயங்குவது. ஒசையும் நயமும் இசைந்து மனதுக்கு இன்பம் அளிப்பது இசை. இசை மன இறுக்கத்தைத் தளர்த்துகிறது - கோபதாபங்களைத் தடுகிறது. உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தை...

வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு...

 நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள். வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம். வாயில் வயிற்றில் புண் இருந்தால்...

குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்!"

 மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல்லில்...

உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்!

உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள் 10). மெக்ஸிக்கோ:பத்தாவது பணக்கார நாடு GNI தொகை $ 550.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI சதவீதத்தில் தொகை விகிதம் 1.8% ஆக $ 839.181.900.000 ஆகும். 9). ஸ்பெயின் இந்த நாட்டின் GNI தொகை $ 558.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 1.223.988.000.000 மற்றும் GNI அளவு சதவீதம் 2% ஆகும். 8). கனடா:கனடாவின் GNI தொகை $ 628.000.000.000 உள்ளது மற்றும் GNI தொகை $ 1.251.463.000.000...

உங்கள் சமையல் அறையில் இருக்கிறது ஆண்மையே அதிகரிக்கும் பொருள்கள் !!

வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.உணவே மருந்து பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும்...

உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு...

பெண்களின் மூளை பல்திறனுடன் செயற்படுவதாக கண்டுபிடிப்பு

 ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை விரைவாகவும் பல்திறனுடன் செயற்படக்கூடியது எனவும் பென்சில்வேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது.பென்சில்வேனியாவைச் சேர்ந்த 949 பேரிடம் இது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு நுணுக்கமாக ஆராயப்பட்டது. ஒவ்வொருவரும் தொழிலில் ஈடுபடும்போது, பயணம் செய்யும்போது, நித்திரையின்போது என பல சந்தர்ப்பங்களில் எவ்வாறு இயங்குகிறார்கள், எதைச் சிந்திக்கிறார்கள் என்பவை...

அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...! கவிதை!

காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை...காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை...கையை அறுத்துக்குங்க அதுவும் தப்பு இல்லை....ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட தப்பில்லை....ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க தகுதியானவங்களா இருக்கணும்...!தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக நீங்க உங்களை வருத்திக்கிறதும் காத்திருக்கிறதும் முட்டாள் தனம்..அந்த முட்டாள் தனத்த ஒரு போதும் பண்ணாதிங்க...ஒருத்தர்கொருத்தர் அனுசரிச்சு போகலன்னா அந்த காதலே அர்த்தமற்றதாகி விடும்.அது ஒரு தலை காதலா கூட மாறிடும்.பரஸ்பரம் ரெண்டுபேருக்கும் பிடிச்சிருந்தா தான் காதல்...ஒருத்தங்களுக்குபிடிச்சிருந்தா...

இஞ்சிப் பால்..!

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில்...

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது!

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ்மொழி பரவிட வகைசெய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், ஏற்கனவே அறிவித்திருந்தார்.இவ்விருது தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும். விருது பெறுபவருக்கு விருதுத் தொகை ரூ.1 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம்...

தோல்விகளையும் ரொம்ப நேசிக்கிறவர்…நகைச்சுவை!

-“நாணயமா  நடந்து கொள்ளணும்னு ஆசிரியர் சொன்னா  கோபப்படுறியே   ஏன்?”-அவர் சொன்ன மாதிரி நடந்தா  சில்லரை  பையன்னு கேலி பண்ணுவாங்கடா…!!--“தோல்விகளை  ரொம்பவும் நேசிக்கிறவரா“யாரு   இவர்?”-டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்…!!--நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் ஏன் வரையாம விட்டு வெச்சிருக்கே?”-“சார்! அது வாயில்லா பிராணி சார்!.”--“நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விக்கு ‘டான் டான்’ னு பதில் சொன்னியாமே…!     அப்படி என்ன கேள்வி கேட்டாங்க?”-“ஆராய்ச்சி மணி எப்படி அடிக்கும்னு…!!”...

முஸ்லிம் இளவரசியாக அனுஷ்கா!

அனுஷ்கா தற்போது 'ருத்ரம்மாதேவி', 'பாகுபாலி' படங்களில் நடித்து வருகிறார்.இந்தப் படங்களுக்காக பழங்கால சண்டைப் பயிற்சிகளை பயிற்சி எடுத்து வருடக்கணக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மேலும் சில தெலுங்குப்பட இயக்குனர்களும் சரித்திரக் கதைகளை தயார் செய்து கொண்டு அனுஷ்காவை நடிக்கவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி சில கதைகளை கேட்டு வைத்திருக்கும் அனுஷ்கா, ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வரும 'பாகுபாலி'யை முடித்ததும், 16ம் நூற்றாண்டு...

அஜித் படத்துக்கு 1800 தியேட்டர்களா? குமுறும் தயாரிப்பாளர்கள்!

அஜித்தின் 'வீரம்' படத்திற்கு 1800 ஸ்கிரீன்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் குமுற ஆரம்பித்திருக்கிறார்கள் சின்ன படங்களின்  தயாரிப்பாளர்கள்.எல்லா தியேட்டர்களையும் அஜித் படத்திற்கே ஒதுக்கினால் மற்றவர்கள் என்னாவது? இதுதான் அவர்கள் கேட்கிற கேள்வி.படத்தை வெளியிடுவதும், எத்தனை தியேட்டர்களில் வெளியிடுகிறோம் என்பதும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயம். இதில் நமக்கென்ன பிரச்சனை என்று...

ஆலு வெந்தயக்கீரை தோசை - சமையல்!

தேவையானவை: தோசைக்கான மாவுக்கு: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 1 கப், உளுத்தம்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. உருளைக்கிழங்கு மசாலுக்கு: சின்ன உருளைக்கிழங்கு - கால் கிலோ, தக்காளி - 1,வெங்காயத் தாள் - 1 செடி, பெரிய வெங்காயம் - 1, வெந்தயக்கீரை - 1 கட்டு, மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், தூள் உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 6 டீஸ்பூன், வெண்ணெய் - 1 பாக்கெட்.செய்முறை: இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும்...

வெல்ல தோசை - சமையல்!

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், வெல்லம் (பொடித்தது) - 1 கப், பச்சரிசி - கால் கப் (அல்லது பச்சரிசி மாவு - கால் கப்), தேங்காய் (துருவியது) - கால் மூடி, ஏலக்காய் - 4, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: ஊறிய பச்சரிசியை ஆட்டி, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால்...

“மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?” - நகைச்சுவை!

1. நோயாளி: தலை சுத்துது டாக்டர்…-டாக்டர்: என்னோட கண்ணுக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே!--2. ”சுப்பிரமணிக்கும் மாசிலாமணிக்கும் என்ன தகராறு?”-“”ரெண்டு பேர்லயும் இருக்கறது… ரெண்டு பேர்கிட்டயும் இல்ல… அதுதான் தகராறு..!--3. ராமு: உங்க மானேஜர் எதுக்கு, எப்பவும் கையில பிளேடு வெச்சுருக்கார்?-சேது: யாராவது சரியா வேலை செய்யலைன்னா அவங்க சீட்டைக் கிழிச்சுடுவாராம்!-4. “”மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?”-“”ஒரு மலை வேணும் சார்!”-5. அப்பா: உனக்கு ஸ்கூல்ல யாரை ரொம்பப் பிடிக்கும்?-மகன்: மணியடிக்கிற பியூனை ரொம்பப் பிடிக்கும்பா..!-6. “”பக்கத்து...

சிந்தனை சிதறல்கள்!

மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..!-மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்-மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!-மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.-மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?-வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்-வாழ்ந்தவன் வறியவன் ஆனால், தாழ்ந்தவனும் ஏசுவான்-அவன் வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு-மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது-முதலையும் மூர்க்கனும் கொண்டது வி...

கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை! அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன?

கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.அதென்ன ‘கம்ப்யூட்டர்...

பெண்களின் காதல் அழகு தான்!

ஆண் பேசிக்கொண்டிருக்க அமைதியாய் ரசிப்பது தனக்கு பிடிக்காததை பேசினாலும்...ஆடவன் தோள் சாய அக்கம் பக்கம் பார்த்தபடியே திரு திரு என முழிப்பது...தனக்கு பிடித்தவைகளை பற்றி காதலன் தானாய் அறிந்து வாங்கி கொடுக்க வேண்டுமென எண்ணுவது ...வீட்டில் கைபேசியில் தோழியோடு பேசுவது போல் காதலனோடு பேசுவது அக்கம் பக்கம் பார்த்தபடியே ...இரவுகளில் அவன் உடையை உடுத்தி ரசிப்பது ...ஆடவன் தலை கோதிபடியே செல்லமாய் பேசுவது ...அவனோடு வேறொரு பெண் பேசினால் அதை நினைத்து தனிமையில் தானாய் பேசிக்கொள்வது பேசாமல் இருந்தவள்...பேசியே கொல்வது ...அவனை தூங்காமல் செய்துவிட்டு...தான்...

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக...

தோல்வியே வெற்றி!

கலகமில்லா உலகமில்லை ரத்தமில்லா யுத்தமில்லை தோல்வியில்லா வெற்றியில்லைநண்பனே!உனக்குத் தோல்வியே வந்தாலும் தொடர்ந்து நீ போராடு நீயும் ஒரு நாள் வெற்றி பெறுவாய்உனது வெற்றியின் வாசல் கதவுகள் உனக்கென கண்டிப்பாக திறக்கும்.தொடர்ந்து நீ போராடு உனது வெற்றி தொடர போர...

வெற்றி பெற்றவர்களின் தனித் தன்மைகள்!

    வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சிலத் தனித் தன்மைகள் வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு.அமெரிக்காவிலுள்ள ” காலிப் ” என்ற நிறுவனம் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களில் 1500 சாதனையாளர்களைத் தேர்வு செய்து வெற்றிக்கு அடிப்படையான அவர்களது பண்புகள் பற்றிய ஆராய்ச்சியை மேற் கொண்டது.இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அந்தச் சாதனையாளர்களிடம் உள்ள சிறப்பான குணங்களை துல்லியமாக முறைப்படுத்திக் காட்டியுள்ளது. அவை :1.) நடைமுறை அறிவுசாதனையாளர்களில் 79 விழுக்காடு இந்த நடைமுறை...

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை!

உறுதியான நம்பிக்கை, நம்பிக்கை, எதிர்பார்ப்புடன் நம்பிக்கைஇந்த மூன்று வார்த்தைகளையும் அவதானித்தால் மூன்றிலையுமேகூறப்படுவது ஒன்றை தான் அது நம்பிக்கை. ஆங்கிலத்தில் இந்தமூன்றையும் வெவ்வேறு வார்த்தைகளினால் விவரிக்கபடுகிறது.Confidence, Trust and Hope.ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் வறட்சியால்வாடினார்கள் அவர்கள் மழைக்காக பிரார்த்திப்பதாக முடிவுசெய்தார்கள். அப்போது அங்கு ஒரு சிறு பையன் குடையோடுவந்தான். இது அவனது உறுதியான நம்பிக்கை (Confidence).சிலர் சிறு குழந்தையை கொஞ்சும் போது தூக்கி போட்டு பிடித்துவிளையாடுவார்கள். அப்போதும்...