ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலும், விற்பனைச் சந்தையிலும், இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப வசதிகளுக்கு நம் நாட்டவர் எப்போதும் தீராப் பசியோடுதான் இருப்பார்கள் என்பதனை, வெளிநாட்டு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனாலேயே, மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து முடிவெடுக்கையில், இந்தியர்களின் எண்ணங்களுக்கு அதிக மதிப்பு கொடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது ஒரு சின்ன பிரச்னை இதில் எழுந்துள்ளது. இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள், பட்ஜெட்...