கடினமாக உழைப்பதற்குரிய முயற்சியை ஒருவர் எப்போது உத்வேகப்படுத்துகிறார்? ஒரே ஒரு வார்த்தையில் இதற்கு பதிலைச் சொல்லிவிடலாம் – “ஆசை”.நாயை பற்றிய ஒரு கதை. ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும் என்று எப்போது பார்த்தாலும் பெருமை பேசிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முயலை துரத்திக் கொண்டு ஓடிய அந்த நாயால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைப்பார்த்து கேலி செய்தன. ஆனால் அந்த நாய் இவ்வாறு சொல்லியது…..“ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். முயல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. ஆனால் நான் வேடிக்கைக்காகத்தான் அதை விரட்டிக் கொண்டு...