Monday, 30 December 2013

2 கி.மீ மாட்டு வண்டி ஓட்டுகிறார் அஜீத் - Latest News...

விஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும் இப்படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் உள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகும் 'வீரம்' படப்பிடிப்பு நடந்த ஒரு கிராமத்துக்கு அஜித் உணவு பரிமாறினார்.கிராமத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று சாப்பிட்டனர். இது மெகாபந்தியாக இருந்தது என படக்குழுவினர் தெரிவித்தனர். இதன் பெரும் காட்சிகள் ஒடிசாவில் உள்ள...

மும்பைக்கு டாடா விஜய் பட லொகேஷனை மாற்றினாரா முருகதாஸ்..?

துப்பாக்கி படத்தை மும்பையில் படமாக்கிய முருகதாஸ் அடுத்த படத்துக்கு லொகேஷனை மாற்றிவிட்டார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை மும்பையில் நடத்தினார். படம் ஹிட்டானதை தொடர்ந்து விஜய் நடித்த தலைவா பட ஷூட்டிங்கும் மும்பையில் நடந்தது. அதேபோல் அஜீத் நடித்த ஆரம்பம் படமும் மும்பையில் படமாக்கப்பட்டது. இதையடுத்து பல கோலிவுட் படங்களுக்கு மும்பை பிரதான லொகேஷன்களில் ஒன்றாக மாறிவிட்டது. தற்போது ஜில்லா படத்தில்...

எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை...?

எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவைஎண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை" எனதினிய தோழமைகளே எண்ணங்களை கவனமுடன் தேர்வு செய்யுங்கள்.நம் வாழ்வு சிறப்புற வேண்டுமெனில் நமது எண்ணங்களை நாம் சீர்செய்தாக வேண்டும்.எண்ணங்களை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.கோபம், குரோதம், பொறாமை, பிறரை வசை பாடுதல், கவலை, துக்கம், சோகப் பாடல்கள் கேட்பது, பிறரது அனுதாபத்தை எதிர் பார்ப்பது, சோம்பேறித் தனம், மனதை எப்போதும் இறுக்கமாக வைத்திருப்பது, சுத்தமில்லாதிருப்பது. சுருங்கச்...

குளத்தில் சங்கு பிறக்கும் அதிசய கோவில்!

வேதமே, மலையாய் இருப்பதால் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள்.மலைமேல் ஒரு கோயில் உள்ளது.  ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலையில் தினமும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் – வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி – சொக்கநாயகி....

சூர்யாவுடன் கூட்டணி அமைக்கும் சூரி!

சூர்யா நடிக்கும் புதிய படத்தில் சூரி நடிக்கிறாராம்.சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு சூர்யா, லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.சூர்யா-சமந்தா முதன் முறையாக இணையும் படம் இது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்தப் படம் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் காமெடி நடிகர் சூரி, லிங்குசாமி படத்தில் நடிக்கவுள்ளாராம். சூர்யா-சூரி நடிக்கும் காட்சிகள் வருகிற...

முன்னேற்றத் தடைகள் மூன்று...

முன்னேற மூன்றே சொற்கள், மூன்றே பண்புகள் ஆகிய தீர்மானமான முடிவு, இடைவிடாத பெருமுயற்சி, கடின உழைப்பு எனும் இவை எப்படி ஒரு சாதனையாளருக்கு முதன்மையாகத் தேவையோ அப்படித் தேவையில்லாத, விட்டுவிட வேண்டிய, எதிர் மறையான மூன்று பண்புகளும் உள்ளன. அந்த மூன்று பண்புகளை, மூன்று தடைகளை நீக்கிவிட்டால் நம் முன்னேற்றம் உறுதியாகிவிடுகிறது, விளைவு படுத்தப்படுகின்றது. முடிவு நல்லதாக அமைகின்றது.இவை நம்மிடையே உள்ளவைஇந்த மூன்று பண்புகளும் நம்மிடையே உள்ளவைதாம். முன்னர் சொன்ன...

கொண்டாடப்படும் 'என்றென்றும் புன்னகை' : சந்தோஷத்தில் படக்குழு!

டிசம்பர் 20ம் தேதி வெளியான படங்களுள் அஹ்மத் இயக்கத்தில் ஜீவா நடித்த 'என்றென்றும் புன்னகை' மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. ஜீவா, த்ரிஷா, வினய், சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 20ம் தேதி வெளியான படம் 'என்றென்றும் புன்னகை'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, அஹ்மத் இயக்கியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். டிசம்பர் 20ம் தேதி 'பிரியாணி' மற்றும் 'தலைமுறைகள்' படத்துடன் 'என்றென்றும் புன்னகை' வெளியானது. 'பிரியாணி' படத்திற்கு மிகப்பெரியளவில் விளம்பரங்கள்...

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

நினைவாற்றல் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், கூறுகிற கருத்து பின்வருமாறு:“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.நினைவாற்றல்நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;      1. தன்னம்பிக்கை      2. ஆர்வம்      3. செயல் ஊக்கம்     ...

உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் நே‌சி‌க்க வே‌ண்டு‌‌ம்....!

நா‌ன் மக‌த்துவமானவ‌‌‌‌ன், எ‌ன்னை ‌விட ‌சிற‌ந்தவ‌ர் வேறு யாருமே இ‌ல்லை. எ‌ன்னா‌ல் தா‌ன் இ‌ந்த உலகமே ‌சிற‌ப்பு‌ப் பெறு‌கிறது. ‌ந‌ம்மா‌ல் தா‌ன் ந‌ம்மை‌ச் சு‌ற்‌றி உ‌ள்ளவ‌ர்களை ம‌கி‌ழ்‌ச்‌சியாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் முத‌லி‌ல் நே‌சி‌க்க வே‌ண்டு‌ம்.எவ‌ர் ஒருவ‌ர் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் ‌சி‌க்‌கி எ‌ன்னடா வா‌ழ்‌க்கை எ‌ன்று புல‌ம்புவாரோ, அவரா‌ல் அவரை நே‌சி‌க்க இயலாது, நோ‌யி‌னா‌ல் ‌வாடுபவ‌ர்க‌ள், அவ‌ர்களை நொ‌ந்து கொ‌ள்ளவே...

பெண்: நீண்டுசெல்லும் கண்ணீர்ப்பாதை.....??

ஆக்ராவிற்குப் போய் தாஜ்மகாலில் காதலின் முகம் பார்த்துப் பரவசமடைகிறோம். இறந்தகாலத்துள் இழுத்துச் செல்லும் எகிப்திய பிரமிட் கண்டு வியக்கிறோம். கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும் அழகிலிருந்து விழிகளை மீட்க முடியாமல் பிரமிக்கிறோம். இலங்கையின் சிகிரியா ஓவியத்தில் கலையின் வண்ணம் காண்கிறோம். ஆனால், உலகமெங்கும் தீரா வியப்பு ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. அதை நாம் சென்று பார்க்கவேண்டியதில்லை. நமது வாழ்விலிருந்து பிரித்துவிடமுடியாத, எங்களோடு கூடவே இருக்கிற அதிசயம் அது. அதாவது, ஆண்-பெண்ணுக்கு இடையிலான பாரபட்சங்கள். நினைத்துப் பார்க்கும்போது...

சந்தோஷம் ....?

சந்தோஷம்தான் நமது இலக்கு. நாம் செய்யும் செயல்கள் எல்லாம் சந்தோஷத்துக்காகத்தான். வாழ்க்கையை சந்தோஷமாக்கிக் கொள்ள சில விஷயங்களை நாம் கட்டாயம் செய்தாக வேண்டும். தேவையற்ற ஒன்றை சேர்த்திருப்பது அல்லது தேவையான ஒன்று இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி குறைபாட்டுக்கு காரணமாக இருக்கும். எனவே தேவையானதைத் தேட வேண்டும், தேவையற்றதை தள்ளியாக வேண்டும்.***நிம்மதியான உறக்கம் சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கியமான வழி. உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் தருவது தூக்கம். எந்தக்...

பத்துவிதமான சக்திகள்...!!!

தசமஹவித்யாவின்  பத்துவிதமான சக்திகள்தசமஹவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்து விதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹா சக்திகளை முழுமையாக உணர முடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் - அஷ்டமா சித்திகள் என கீழ்த்தரமான...

செல்போன் போதை.....??

  எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது...

தீய பழக்கங்களில் இருந்து விடுபட .....?

மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும்...

கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

உறவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது.தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட...

தனுஷிற்குக் குரல் கொடுக்கவிருக்கும் அமிதாப்...!!

ராஜ்னா படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகி, அறிமுகப்படத்திலேயே வசூலையும், ரசிகர்களையும் கோடிகளில் அள்ளிய தனுஷ் தனது இரண்டாவது ஹிந்திப் படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.சீனி கும் மற்றும் பா ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்தியாவின் நம்பிக்கை இயக்குனராகப் போற்றப்படும் இயக்குனர் பால்கி இயக்கத்தில் தனுஷ் மற்றும் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பார்கள் என்று ஏற்கெனவே...

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம்!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில்  மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியில் சேர  விரும்பும்  மெக்கானிக்கல், கெமிக்கல்  என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளில் சேர தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு ஊதியம் கிடைக்கும்.நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிப்பதற்கு உதவும் தேர்வு கேட் (GATE)....

ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.....??

பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் .பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே...

கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடைய..

கணவரோ மனைவியோ கவலையோடு இருந்தால் அவர்களின் சந்தர்ப்பத்தை புரிந்துகொண்டு தகுந்த முறையில் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலமாக கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடையும்.ஆதரவான வாழ்க்கை துணையே ஆரோக்கியமான திருமண வாழ்வின் சாரம். உங்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு கடினமான சந்தர்ப்பங்களில் உங்களை ஆதரித்து உங்களை உயர்த்தும் வாழ்க்கை துணை அமைந்துவிட்டால் உங்கள் திருமணம் அர்த்தமுள்ளதாக மாறிவிடும். இது ஒரு நல்ல குடும்பத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்.ஒவ்வொருவரின்...

தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முதலிடம் : சாதனை பாடலாசிரியர் நா.முத்துக்குமார்..!

தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முதலிடம் :சாதனை பாடலாசிரியர் நா.முத்துக்குமார்!பத்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.  பத்தாவது ஆண்டாக ‘2013’ம் ஆண்டிலும் அதிக படங்கள், அதிக பாடல்கள் எழுதியிருக்கிறார். 2013 ம் ஆண்டு 34 படங்களில் 106 பாடல்கள் எழுதியுள்ளார். இவற்றில் 10 படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார். 2014 ம் ஆண்டிலும் அவர்தான் முதலிடத்தில் இருப்பார் போலிருக்கிறது.  97  படங்களில் பாடல்கள்...

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?

வெறுமையான கூடுகள் போல் காணப்படுகின்றன, சில வீடுகள்! அங்கு பிள்ளைகளும் இல்லை. பேரக்குழந்தைகளும் இல்லை. விளையாட்டும் இல்லை. சிரிப்பும் இல்லை. ஜாலியும், சந்தோஷமும் நிரம்பி வழிந்த அப்படிப்பட்ட பல வீடுகளில் இப்போது ஒரு சில முதியோர்கள் மட்டும் வசிக்கிறார்கள்.முதியோர்கள் குடும்பத்திற்கு பாரமாக, ஆரோக்கியமும், மன நிம்மதியும் இன்றி, ‘கண்ணும் தெரியவில்லை. காதுகளும் கேட்கவில்லை. யாரும் தன்னை மதிப்பதில்லை’ என்ற விரக்தியோடுதான் மீதி காலத்தை கழிக்கவேண்டுமா? – இல்லை....

வணக்கம் வைப்பது தீண்டாமையா...?

இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது தான் தமிழர்களின் பண்பாடு.  ஆனால் இப்படி வணக்கம் செலுத்துவதில் ஒரு வகையான தீண்டாமை இருக்கிறது என்றும், அதனால் ஐரோப்பிய முறைப்படி கைகுலுக்கி, கொள்வதே சிறந்த மரபு என்றும் சில தமிழ் அறிஞர்கள் பேசுவதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.   ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறா என்ற ஒளி வட்டம் தனித்தனியாக உள்ளது.  இதனை நவீன கேமராக்கள், படம் எடுத்தும் உள்ளன.  விஞ்ஞானமும் அதை ஒத்து கொள்கிறது....

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை...??

நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும்...