
சலசலத்து ஓடும் ஆறு. பசுமை போர்த்திய மரங்கள், பரபரப்பின்றி நடமாடும் ஆவினங்கள், புள்ளினங்களின் சங்கீதம், பேரனின் கையைப் பிடித்தபடி நடந்து செல்லும் கிழவர்... இயற்கையின் அழகு, மண் வாசனை, பரபரப்பற்ற வாழ்க்கை ஆகியவற்றின் கவித்துவமான சித்தரிப்பாகத் திரையில் விரிகிறது பாலுமகேந்திராவின் தலைமுறைகள். நகர வாழ்க்கையிலும் ஆங்கிலத்திலும் ஊறிப்போன ஒரு குடும்பம் இங்கே வந்தால் எப்படி இருக்கும்? அவர்களை இங்கே வரவழைத்த பாசம் இங்கே அவர்களை வாழவைக்குமா? பழமையிலும் சாதி...