நம் தினமும் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்தை அளிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும்.நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள்.சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ்வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது.ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, நாம் எல்லா வகையான உணவுகளையும் குறிப்பிட வேண்டும்.உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு...