மனித உறவுகளில் நாம் ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டேயிருக்கிறோம்.அப்படி இல்லையென்றால் உறவில் விரிசல் வரும்.இப்படி நாம் கொடுக்கும் பரிசுகள் நமது சகதிக்குள் இருக்கிறவரை பிரச்சினை இல்லை.நம்மால் கொடுக்க இயலாத பரிசினைக் கொடுக்க்ம்போதுதான் பிரச்சினை வருகிறது.நண்பர் ஒருவர் உங்கள் ஸ்கூட்டரை ஒருநாள் உபயோகத்துக்குக் கேட்கிறார்.உங்களுக்கோ கொடுக்க மனதில்லை.மனம் பதைபதைக்கிறது.தரமாட்டேன் என்று சொன்னால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும் என அஞ்சி வேண்டா வெறுப்பாகக் கொடுக்கிறீர்கள்.அவர் ஸ்கூட்டரைத் திரும்பக் கொடுக்கும் வரை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறீர்கள்.அடுத்து...