நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. உதாரணமாக, பள்ளி மாணவனுக்கு ஆசிரியரைக் கண்டால் பயம். பலகோடி ரூபாய் மூதலீட்டில் தொழில் செய்பவருக்கு வருங்காலத்தில் தொழிலின் முன்னேற்றம் குறித்து பயம். ஆக, பயம் உருவாகின்ற விதம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனைவரின் மனதிலும் பயம் என்ற ஒன்று ஆழமாக குடிகொண்டு உள்ளது.உதாரணமாக, இங்கு இராமசாமி என்ற இளைஞனை எடுத்துக் கொள்ளலாம். இவனது வயது 18. பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். எங்கெல்லாம் உறவினர்கள், பெற்றோர்கள் தேடுவார்கள் என்று அறிந்து வேறொரு திசையில்...