
ஜீவார்மித கரைசல்... அக்னி அஸ்திரம்... என இயற்கை உரமிருக்க... செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார், திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். காந்திகிராமம் செட்டியபட்டியில் மலையடிவாரத்தை ஒட்டி செழித்திருக்கிறது, இவரது தோட்டம். மதுரையில் ஜவுளி பிசினஸ் செய்தாலும், தினமும் தோட்டத்தைப் பார்க்க தவறுவதில்லை. 21 ஏக்கர் பரந்து விரிந்த பூமியில் பப்பாளி, திராட்சை, சப்போட்டா, மா, கொய்யா ரகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தோட்டத்திலேயே...