முன்னுரை:சமூக அமைப்பில் பொழுதுபோக்கிற்காகவும் பிறரை மகிழ்விப்பதற்காகவும் தோற்றம் பெற்ற கலைகள் பலவாகும். அவற்றுள் சில உடல்உரத்தையும் வீரத்தையும் வளர்க்கும் வீரக் கலைகளாக வளர்ந்துள்ளன. இவ்வாறு வளர்ந்த வீரக் கலைகள் ”தற்காப்புக் கலைகள்” என்று வழங்கப்படுகின்றன. பண்டைக் காலங்களில் கோயில் திருவிழாக்களில் பிறரை மகிழ்விப்பதற்காகவும் போர்க்காலங்களில் எதிரியைச் சமாளிப்பதற்காகவும் இக்கலைகள் பயன்பட்டன. (க. இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவை). தற்காப்புக் கலைகளாக குத்து, சுருள், கட்டாரி, களரிப்பயிற்று, சிலம்பம், வர்மம் போன்றவைகள் இடம் பெறுகின்றன. இதில்...