Wednesday, 11 December 2013

குறட்டையை தடுக்க வழிகள்:-

 நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம்காரணங்கள்:நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை...

பொண்ணு பார்க்கப் போறீங்களா?

உனது மனைவி எப்படி இருக்க வேண்டும்? என்று இன்றைய இளைஞர்களிடம் கேட்டால், அழகாக, அம்சமாக, அறிவாக... என்று ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு கேட்பார்கள்.அப்படியெல்லாம் பெண் பார்க்கக் கூடாது. இந்த பொறுப்பை இளைஞர்கள் தங்களது பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும் என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஏன் அவர் அப்படி சொல்கிறார்? அவர் சொல்வதை கேட்போமா...?"மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.ஒரு பெண்ணின் மீது...

பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள்!

சங்க காலத் தமிழகத்திலும் அதற்குப் பின்னரும் விநோதமான தண்டனைகள் வழக்கத்தில் இருந்தன. அரசன், போரில் வெற்றி பெற்றால் தோல்வியுற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவது, அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பது, தோல்வியடைந்த மன்னரின் திருமுடிகளை அல்லது மகுடங்களை உருக்கிக் காலடியில் பலகையாகப் போடுவது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவது, யவனர் போன்ற வெளிநாட்டினர் பிடிபட்டால் அவர்கள் தலையை மொட்டையடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிச்...

கண்ணீர்!

இன்றைய தொலைகாட்சிகள் அநேகம் பெண்களை அழ வைக்கின்றன.அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.அழுதால் துயரங்களின் சுமை குறையும்.ஆண்கள் அழுவதில்லை.ஆண்கள் தான் பெண்களை விட அதிகம் மாரடைப்பால் இறந்து போகிறார்கள்ஆண்கள் தான் பெண்களை விட அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.ஆண்கள் தான் பெண்களை விட அதிகம் மனநோயாளி ஆகிறார்கள்.காரணம் என்ன தெரியுமா?அவர்கள் அழுவதில்லைஆண்கள் தங்கள் துயரங்களை மனதுக்குள் அடக்கிக் கொள்கிறார்கள்.விளைவு விபத்துபிரஷர் குக்கரை பார்த்து இருப்பிர்கள். அதற்குள் திரளும் நீராவி அளவுக்கு அதிகமானால் அது வெடித்து விடும். எனவே அதிகம் திரளும் நீராவியை...

தெரிந்து கொள்வோம்!

 மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.உலக அளவில் தாம்பத்ய உறவிற்கு ஆணும் பெண்ணும் எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் இரண்டு நிமிடங்கள்.நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும்...

வீட்டுக் குறிப்புகள்!

வீட்டுக் குறிப்புகள்:1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.5. துணிகளில்...

தமிழின் சிறப்பை பாருங்கள்!

 வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானைஎன்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்!யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள் :இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள்...

வளர்பிறையில் ஏன் விழாக்கள் கொண்டாடுகின்றனர் ஆராய்வோமா?

பண்டைய காலத்தில் மக்கள் திருமணம், திருவிழா போன்ற பல விழாக்களை கொண்டாடினார்கள். அவ்விழாக்களை கொண்டாடுவதற்கான போதிய வசதிகள் கிடைக்கவில்லை. மக்கள் ஒன்று கூட தொலை தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது, வாகன வசதிகள் பெருமளவில்லை. மாட்டு வண்டிகள் தான் இருந்திருக்கிறது, அதில் எப்படி தொலைதூரம் வேக பயணம் செய்ய முடியும்? ஓர் இடத்திற்கு சென்றடைய மூன்று நான்கு நாட்கள் ஆகிவிடும். அப்படியாயின் இரவு பகல் பயணம் செய்ய வேண்டி இருக்கிறதல்லவா. ஆம் அன்றைய காலத்தில் எங்கிருந்து...

செவ்வாயில் நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்த க்யூரியாசிட்டி!

 செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய அளவிலான நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை நாசா (NASA)-வின் க்யூரியாசிட்டி (CURIOSITY) உலவு வாகனம் கண்டறிந்துள்ளது.இந்த ஏரி சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர் நிறைந்ததாக இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. க்யூரியாசிட்டி (CURIOSITY) தரையிறங்கிய இடத்தில் உள்ள இந்த ஏரி சுமார் 150 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் சில ஆயிரம் ஆண்டுகளில் இந்த ஏரி வற்றிப் போயிருக்கக்கூடும்...

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில்...

மைல்கல் கலரிலும் விஷயமிருக்கு, தெரிந்து கொள்வோம்..

சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல...இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்.மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க... * மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை* நீலம் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் மாவட்ட சாலை* பிங்க் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சா...

உங்கள் பெண் பிள்ளைகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில வழிமுறைகள்…

உங்களுடைய மகள் உங்களுக்கு மிகவும் அரிய சொத்தாக இருப்பவள். அவள் இனிமையானவள், அழகானவள் மற்றும் வளமாக வாழ்வதற்கு மிகவும் தகுதியானவள். இவையனைத்தும் உண்மை என்னும் போது, அவளுடைய பெற்றோர்ககளாகிய உங்களுக்கு அவளை சுய மதிப்புடையவளாக வளர்க்கும் பொறுப்பு பெரிதும் உள்ளது.இது மிகவும் எளிமையானது மற்றும் தினசரி அவளை சில செயல்களைச் செய்யச் சொல்லி கற்றுக் கொடுக்கக் கூடியது. ஒரு பெற்றோராக நீங்கள் குழந்தையின் மனதில் உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையையும் மற்றும்...

மகாகவி பாரதியார் - பிறந்தநாள் -11 டிசம்பர்!

 காக்கைச் சிறகினிலே நந்தலாலா  நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ நெருங்கின பொருள் கைபட வேண்டும் மனதில் உறுதி வேண்டும் வட்ட கரிய விழியில் கண்ணம்மா வானக் கருனைக் கொள் இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு. அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். வைரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக...

கோயிலில் ஷூட்டிங் நடத்த திடீர் அனுமதி!

புதுமுகங்கள் மகி, சரவணன், திவ்யா, ஜான்விகா நடிக்கும் படம் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா கதை எழுதி தயாரிக்கிறார் ஜெயபால். தேவா இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் சந்திர கண்ணையன் கூறியது: பக்தி படம் என்பது இப்போது அரிதாகிவிட்டது. மேற்கு முகப்பேர் கனக துர்கை அம்மன் கோயிலில் நடந்த 2 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஜாதகப்படி ஒரு பக்தர் விபத்தில் இறக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்தி செய்வதாக வேண்டிக்...

வாழ்க்கையில் வெற்றி!

புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவதுகுழந்தைகளின் பாசத்தைப் பெறுவதுநேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவதுநண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வதுஇயற்கையை ரசிப்பதுமற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவதுஓர் ஆரோக்யமான குழந்தைஒரு தோட்ட வெளியை உருவாக்கியதுசமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியதுஉங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வதுஇவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்...