Monday, 25 November 2013

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா..குட்டிக்கதைகள்!

 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி...

திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க......

திருமண ஷாப்பிங், பியூட்டி பார்லர் என்று குஷியாக இருக்கும் புதுப்பெண்கள், அடுத்த மாதம் முதலே ஒரு குடும்பத்தைக் கட்டி ஆளும் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். குறிப்பாக முன்பின் அறிமுகமில்லாத வீட்டின் நிதி நிர்வாகம் அவர்கள் கைக்கு வரும். கணவரின் சம்பளம், இன்ஷூரன்ஸ், லோன், வரி என்று அவற்றை ஆரம்பம் முதலே திறம்பட திட்டமிட்டு, புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க இங்கே அணிவகுக்கின்றன அத்தியாவசியமான நிதி ஆலோசனைகள்... தனிக்குடித்தன தயாரிப்புகள்!திருமணம் முடித்த கையோடு, ஃபர்னிச்சர் முதல் பாத்திரங்கள் வரை வாங்க வேண்டியிருக்கும். தனிக்குடித்தனம் என்றால்,...

அம்மா ஒரு பென் ட்ரைவ்!

  சொல்லுங்க... சொல்லுங்க... உங்கம்மாவுக்கு என்ன தெரியும்!நான்கு வயதுக் குழந்தை: அம்மாவுக்கு எல்லாம் தெரியும்... அம்மாதான் கடவுள்!...எட்டு வயது மடி புள்ள: அம்மாவுக்கு நிறையத் தெரியும்... அம்மாதான் குரு!12 வயது கைப்புள்ள: அம்மாவுக்கு ஓரளவுக்குத் தெரியும்... அம்மா ஒரு நபர்!16 வயது பருவ புள்ள: அம்மாவுக்கு ஒண்ணும் தெரியாது... அம்மா ஒரு எதிரி!20 வயது வாலிபப் புள்ள: அம்மா பழம் பஞ்சாங்கம்... அம்மா ஒரு அசடு!24 வயது கல்யாணப் புள்ள: அம்மாவுக்கு கொஞ்சம்...

பெற்றோர்களுக்கு சிறந்த மகனாக இருப்பதற்கான 10 சிறந்த வழிகள்!!!

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்' என்பது வள்ளுவர் வாய்மொழி. தன்னுடைய மகன் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதே ஒவ்வொரு பெற்றோர்களின் கனவாகவும் இருக்கும் என்பது தான் இதன் வெளிப்படையான பொருள். அன்னையின் வயிற்றில் சிறு துளியாக உதித்த பொழுதிலிருந்தே, உங்கள் மேல் அவர்கள் பொழிந்த அளவற்ற அன்பையும், பாசத்தையும் அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டியது மகனாகப் பிறந்த ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். கருவாக உருவான நாளிலிருந்தே பெற்றோர்கள் உங்களை கவனிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உங்களுக்காக அவர்களுடைய ஓய்வு நேரங்கள், தூக்கம்...

எப்படி? எப்படி? எப்படி?

அறிவது எப்படி; புரிவது எப்படி; உணர்வது எப்படி; தெளிவது எப்படி; பார்ப்பது எப்படி; கேட்பது எப்படி; கவனிப்பது எப்படி; தேர்ந்தெடுப்பது எப்படி இருப்பது “இலக்கைக் குறிப்பது எப்படி?” – என்று!“வாழ்க்கை” – என்கிற பயணத்தில் நாம் அடைய வேண்டிய இடம் எது? அதனைக் குறித்த பிறகு – அதனை அடைவதற்கான வழித்தடம் எது? அந்த வழியில் நாம் கடக்க வேண்டிய மைல் கற்கள் எவை? என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கண்டுபிடித்து – அமைத்துக் கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.இலக்கைக் குறிப்பதன் அவசியமென்ன என்கிறீர்களா? “இதுதான் நான் அடைய விரும்பும் இடம்” என்று குறித்தால்தான் நமது கவனம் அந்த...

எலுமிச்சை -பெயர் காரணம்!

 எலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்கள்.எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தான், இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்பது மருவி,என்ற பெயர் வந்ததெனக் கூறுவ...

மொபைல் நம்பர் தெரியாமல் மறைக்க!

 ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.உங்களுடை...

மாணவர்களும் மன ஆற்றலும்!

இயற்கை சமுதாயம், மனம் என்ற முக்கோணத்துக்குள் வாழ்ந்து வரும் மனித வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்.பொதுவாகவே குழந்தைகள் மனதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) சிறுவயது முதலே ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. அதனால், பள்ளி இறுதி மற்றும் கல்லூரி செல்லும் பருவத்தில் இலக்குகளை நிர்ணயிக்க, அவற்றை அடைய மிகவும் சிரமப்படுகின்றனர்.‘Critical Mass Theory’ யின்படி கைதவறி ஓடை நீரில் விழுந்த கிழங்கை, எடுத்துத் தின்ற குரங்கு பெற்ற சுவை மண்ணில்லாமல் இருந்ததால், மகிழ்ச்சி தர, அந்த எண்ணம் பல நூறு மைல்களுக்கு அப்பால்...

நாகரீக கோமாளிகள்!

 ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்அம்மாவை மாற்ற தேவையில்லைஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.காலை வணக்கம் வார்த்தை எல்லாம்கடல் கடந்து சென்றதுGood Morning என்ற வார்த்தையில் தான்பல குடும்பம் விழிக்குது .அந்நிய உணவில் தனி ருசிதான்அதில் ஒன்றும் தவறில்லைஆயின் வறண்ட ரொட்டியைதிண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?பத்து வரியை படிக்க சொன்னால்பல்லை இளித்து காட்டுவார்ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கிவைத்து அறிவாளி வேடம் போடுவார்.முறுக்கும்...

பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?

பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைலஇருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்ககொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம்அப்படீனு எல்லாம் நினைப்போம். எங்க பாட்டிசொன்னாங்க, 'அது அப்படி இல்லடா பேராண்டினு'.கிழவி ரொம்ப விவரமாவே சொல்லுச்சு. சரி, விசயத்தமேல பாப்போம்.அதாவது வந்துங்க, இந்த தீய சக்திகள் காத்து கருப்பு,இதுக்கெல்லாம் குழந்தை பிறப்பு, குழந்தைக பிறந்த நாள்இப்படி ஒரு சில விசயங்கள சுத்தமா பிடிக்காதாம். அந்தமாதிரி நேரங்கள்ல சம்பந்தபட்டவங்கள எப்படியாவதுதொந்தரவு பண்ணனும், தீத்து கட்டனும்னு வெறியாஅலையுமாம். நீங்களும் பாத்து இருப்பீங்க,...

பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகள்!

1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர்கள்.2. சேமிப்பில் அக்கறை உடையவர்கள்ஆனால்விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள்.3. விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவார்கள் ஆனால் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள்.4. அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள், ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள்.5. எப்போதும் அழகாக உடை அணிவார்கள், ஆனால் திருப்தி அடையமாட்டார்கள்.6. திருப்தி அடையமாட்டார்கள், ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.7. ஆண்கள் அவர்களை புகழ...

தமிழர் கல்யாணத்தில் தாலிக்கொடி!

தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ”பண்பாட்டு அசைவுகள்” என்ற புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்:    *      1. தாலி – என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.    *      2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச்...

பலனுள்ள பன்னிரண்டு!

நாம் மற்றவர்களிடம் பழகும் போது எப்படி நடந்து கொள்கிறோம், நமது உடல் பாஷைகள், பேசும் விதம் ஆகியவற்றைக்கொண்டே அவர்கள் நம்மை மதிப்பீடு செய்கிறார்கள். குறிப்பாக நாம் ஒரு வேலைக்குச் செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நமது நடை உடை பாவனைகள் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியும் தோல்வியும் அமையும். இது நாம் நடைபயில முயற்சிப்பது போலத்தான். உங்களைப் பின்பக்கமாக நடந்து போகச் சொன்னால் எவ்வளவு கடினமாக இருக்கும்? அது போலத்தான் மற்றவர்களுடன் பழகும்போது எப்படி அவர்களுடன் உறவாட வேண்டும் என்பதான பயிற்சியும். எப்படி நடந்துகொள்ள வேண்டும்...

நெய் மைசூர் பாக் - சமையல்!

தேவையான பொருட்கள்:========================கடலை மாவு - ஒரு கப்சர்க்கரை - இரண்டு கப்நெய் - ஒண்ணேகால் கப்முந்திரி பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்அரை கப் - நீர்செய்முறை:===========* கடலை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து  வறுத்து வைக்கவும்.*  சர்க்கரையை நீர் சேர்த்து கலந்து பாகு தயாரிக்கவும்.* பாகின் பதம் பார்க்க சிறிது  பாகை எடுத்து அதை குட்டி பந்து போல் உருட்ட முடிந்தால் அதுவே சரியான பதம்.* மெது மெதுவாக மாவை சேர்த்து கட்டி உருவாகாமல்...

சிறுபட்ஜெட்டில் படம் எடுக்கப்பபோவதாக இயக்குநர் செல்வராகவன் அறிவிப்பு!

  பெரிய படங்களை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்த இயக்குநர்கள் பிரம்மாண்ட இயக்குனர்கள் என முத்திரையுடன் தொடர்ந்து பெரும் பொருட்செலவிலேயே படங்களை எடுப்பார்கள் ஆனால் செல்வராகவனோ இதில் மாறுபட்டு குறைந்த செலவில் படம் எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்  இதுவரை செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்களில் மிக அதிக  பொருட் செலவில் உருவான படம்  தற்போது வெளியாகியுள்ள ‘இரண்டாம் உலகம்’.  அகும். இதற்கு முன்னதாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும்...

பாலிவுட் செல்கிறாரா அஜித்?

 'பில்லா'வைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்' சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தீபாவளிக்கு ரிலீஸான இப்படம் 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அஜித் நடிக்கும் 'வீரம்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்போதே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 'ஆரம்பம்' படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து நடிக்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். 'துப்பாக்கி'. 'ரமணா' படங்களின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய்குமாருக்கு 'ஆரம்பம்'...

கோச்சடையான் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்!

 ரஜினியின் 'கோச்சடையான்' ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக அமையும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதற்கு முன்னால் 'கோச்சடையான்' பற்றிய எக்ச்க்ளூசிவ் தகவல்கள் . * 'கோச்சடையான்' தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரம்மிக்க படைத்தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து.* படத்தின் முதல் பகுதியில் 'கோச்சடையான்' ஆதிக்கம் இருக்கும். ஆர்வ மிகுதியில் மகன் ராணா சில வீரதீர...

காதலுக்கு அழகு!

பெண்களில் இரண்டு ரகம் உண்டுபெண்களை அலங்காரப் பிரியர்கள் என்று சொல்வதுண்டு. அலங்காரம் செய்து கொள்வதில் பெண்கள் அதிக நேரம் ஒதுக்குவார்கள் என்பதும் உண்மைதான்.தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களிடமும் இருக்கவே செய்கிறது.இதில் இரண்டு வகையான பெண்கள் இருக்கிறார்கள். தான் போட்டிருக்கும் அலங்காரம் வெளியே தெரியவேக் கூடாது என்று அழகு செய்து கொள்பவர்கள் ஒரு ரகம்.பளிச்சென அழகு தர வேண்டுமென்பதற்காக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம்.இதில் பளிச் ரகத்தினர் மிக எளிதாக ஆண்களுடன் பழகுபவர்களாக இருப்பார்கள்.மிகவும் மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவர்கள்...

உழைக்காமல் இருப் பவர்களால் உயர முடியாது - குட்டிக்கதைகள்!

மகிழ்ச்சி என்பது விளைவு என நினைப்பதால்தான், நாம் திரும்பிப் பார்க்கும்போது அதிக நாட்கள் இன்பமாக இருந் ததுபோலத் தோன்றுவதில்லை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நிகழ்விலும் அடங்கியிருக்கிறது!அதிக மதிப்பெண்ணுக்காக இல்லாமல், படிப்பதே மகிழ்ச்சி தருவதாக ஆக வேண்டும்; சம்பளம் மட்டுமின்றி, பணிபுரிவதே ஆனந்தம் தருவதாக அமைய வேண்டும்! இரவு என்பது இல்லையெனில், விடியலில் பறவைகளின் இசை காதுகளில் விழ வாய்ப்பில்லை. நுணுக்கமான பணியைச் செய்து முடித்து, காலாற நடந்து, குளிர்ந்த காற்றைச் சுவாசித்து மகிழ... அதில் கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.இப்படிச் சின்னச்...

கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்! மாணவர் சாதனை!

நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய தேவையை மனதில் வைத்து எழுதியதுபோல, இளமை ததும்பும் திருக்குறளை, சாதனை முயற்சியாகப் பலரும், பலவிதங்களில் சோதித்துப் பார்த்து விட்டனர். 3 வயது சிறுவன் அனைத்து திருக்குறளையும் மனப்பாடமாகக் கூறுகிறான். அரிசியில் ஒரு திருக்குறளை எழுதுகிறார் என அடிக்கடி திருக்குறளை வைத்து சாதனை செய்யும் திறமைசாலிகள் ஆங்காங்கே உருவெடுத்த வண்ணமே உள்ளனர்.இதே திருக்குறளை, கோவை கற்பகம் மேலாண்மைக் கல்லூரி மாணவர் எம்.மணி, சற்று வித்தியாசமாகப்...

மயிர் முளைச்சான்' தெரியுமா?

இதைப் படித்தவுடனே சிலருக்கு ''என்ன தீயச்சொல் எல்லாம் பேசுகிறீர்கள்?'' எனக் கேட்க தோன்றும். இல்லை, இது தீயச்சொல் அல்ல. 'மயிர் முளைச்சான்' என்பது ஒருவகை பழமாகும். இப்பழம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவைத் தாயிடமாகக் கொண்டுள்ள பழமாகும்.தென்கிழக்கு ஆசியாவில், இப்பழம் மிகவும் பெயர்ப்போனது. காய் பருவத்தில் பச்சை நிறத் தோலைக் கொண்டிருக்கும். பழுத்தப் பழத்தின் வெளிப்புறம் சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களிலான தோலைக் கொண்டு அமைந்திருக்கும். இப்பழத்தின் தோல்...

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது உண்மையான காரணம் இதுதான்!

 இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன?இதோ தெரிந்துகொள்ளுங்கள்.ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில்...

வள்ளுவர் வாக்கு!

யானென தன்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது' எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன் வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.விளக்கம்: வாழ்வியல் சுகங்கள் மீதும் இந்த உடல் மற்றும் உயிர் மீதும் அதீத ஆசைகளைக் கொண்டிருந்தால் அவற்றை விட்டு மீள முடியாது. இறப்பிற்கு பின்னும் ஆத்மா இந்த பூலோக ஆசைகள் மீதே சஞ்சரித்துக் கிடக்கும். பிறகு நிம்மதியான பிரபஞ்சத்தோடு கலக்க முடியாமல் மீண்டும் விட்டுப் போன இடத்தைத் தேடி ஆத்மா வந்தடையும். இது ஆத்மா சாந்தியடையும் நிலையினைக் கெடுத்துவிடும்.அவ்வாறு உடல், பொருள்கள்...

டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாய்ப்பு!

தமிழகத்தின் தலைமையிடமான சென்னையில் செய்ல்பட்டு வரும் சென்னை ஹைகோர்ட்டில்ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.பணிவாரியான காலியிடங்கள் விவரம்:மொத்த காலியிடங்கள் 26801. Personal Assistant to the Hon’ble Judge – 5702. Personal Assistant – 0703. Assistant – 3704. Computer Operator – 2805. Typist – 139வயதுவரம்பு: 22.11.2013...

நீரில் மூழ்கினால் பறந்து போய் காப்பாற்றும் ரோபோ! வீடியோ!

 முன்னெல்லாம் நாளுக்கு நாள் என்பது இப்போது மணிக்கு மணி மனிதனின் செய்யும் வேலைகள் அனைத்திலும் ரோபோட்டின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது அந்த வகையில் : நீரில் மூழ்கி, உயிருக்கு போராடும் நபர்களை பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது. ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்.,...

இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் மனிதர் 1945க்கு பிறகு வெறும் மர்ம்மாகி போனார் – இதற்கிடையில் அவரை பற்றி இந்திய அரசு வைத்திருக்கும் 20 கோப்புகளை மறைக்கும் ரகசியம் – உண்மையில் நடந்தது என்ன?இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இருபது கோப்புகளை இந்தியா வைத்திருக்கிறது. இதனை பொதுமக்களுக்கு ஏன் கூறவில்லை? இதன் கோப்புகளை பற்றி அரசு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் மவுனம் சாதிப்பது ஏன்? இதனை பற்றி ஜனாதிபதி...

இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்!

ஐ ஆர் சி டி சி – இந்தியன் ரயில்வேயில் டிக்கட் புக் பண்ணி சக்ஸசாய் வெளி வருவதென்பது எட்டாவது அதிசயம் என எல்லோரும் சொல்ல கேட்போம். இத்தனைக்கும் பல கோடி மெம்பர் உள்ள ஃபேஸ்புக் வேலை செய்யுது ஆனா சில கோடி பேர் மட்டுமே வந்து போற இந்தியன் ரயில்வே சைட் மட்டும் அடிக்கடி சங்கு சக்கரம் மாதிரி சுத்தி கடைசில பனால் ஆயி டைமும் வேஸ்ட் டிக்கட்டும் கிடைக்கலனு குறைபட்டதை அவங்க ஆராய்ந்த போது தான் தெரிந்தது அவர்களின் தவறு!அதாவது டிக்கட் அலாகேட் பண்ணின பிறகு பேமென்ட்டுக்கு...

ஸ்போர்ட்ஸை பார்த்தாலே போதும்-’பிட்னஸ்’ ஆகி விடலாம்! – ஆய்வு முடிவு!

பொதுவாக ‘பிட்னஸ்’ என்பதை முழு நலம் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய முழு நலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப் படுகிறது.இது போன்ற ‘பிட்னஸ்’ஆக வேண்டுமெனில் ஓட்டப்பந்தயம், நீசசல் போட்டி அல்லது பழுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டுமென்ற சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு விளையாட்டுப்...