பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம், ‘16 வயதினிலே‘. எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்த இப்படம், டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் ரஜினி பேசியதாவது: அந்த காலத்தில் ‘16 வயதினிலே‘ படத்தை 5 லட்ச ரூபாயில் தயாரித்தார் ராஜ்கண்ணு. அது சாதாரண விஷயம் இல்லை. படத்தை வாங்க அப்போது யாரும் வரவில்லை. துணிச்சலுடன் அவரே ரிலீஸ் செய்தார். பெரிய வெற்றி...