பாஸ்வேர்டு தொடர்பான பரிசோதனை முயற்சிகளில் ஒன்றாக அறிமுகமான டைனாஹான்டு முறை புழக்கத்திற்கு வராமலே காணாமல் போய்விட்டது. இருந்தாலும் இந்த பாஸ்வேர்டு முறையை அறிந்து கொள்வது தப்பில்லை.டைனாஹான்டு பாஸ்வேர்டு முறை வித்தியாசமானது ,சுவாரஸ்யமானது என்பது மட்டும் இதற்கு காரணமல்ல. சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான தேடல் எத்தனை தீவிரமானதாக இருக்கிறது,எந்த எந்த திசைகளில் எல்லாம் நடந்து வருகிறது இவை எல்லாவற்றையும் மீறி இது எத்தனை சவாலானதாக இருக்கிறது என்பதை...