Tuesday, 10 September 2013

செய்யும் தொழிலே சிறந்தது.........குட்டிக்கதை

பரந்தாமன் கல் உடைப்பவன்.கல் உடைப்பதைவிட நல்ல வேலை கிடைக்கக் கடவுளை வேண்டினான்.ஒரு நாள் அவன் முன்னால் கடவுள் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்றார்'.'சூரியன் உலகம் முழுக்கத் தெரியும்..நானும் அவ்வாறு தெரிய ஆசைப்படுகிறேன் எனவே'சூரியனாக வேண்டும் ' என்றான்.கடவுள் சம்மதம் தெரிவிப்பதற்குள் சூரியனை மேகம் மறைத்தது . உடனே 'மேகம் ஆக வேண்டும்' என்றான்.மேகத்தை மழை மேகங்கள் மறைக்க ..தான்' மழை மேகமாக' ஆக வேண்டும் என்றான்.மேகம் மழையாகப் பெய்தபின் 'மழையாக' வேண்டும்...

நாயும் ... எலும்புத்துண்டும்.........குட்டிக்கதை

டாமி என்ற நாய்க்கு....ஒரு நாள் எலும்புத் துண்டு ஒன்று கிடைத்ததுஎலும்பைக் கடித்து அதிக நாட்கள் ஆகிவிட்டபடியால் ..அது மிகவும் சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டு ஓடியது.வழியில்...ஒரு ஆற்றின் பாலத்தை அது கடக்க நேரிட்டது...அப்போது ஆற்றின் நிழலில்.. இதன் நிழல் தெரிந்தது.ஆனால் டாமியோ..'வேறு ஒரு நாய் ஒன்று..தன்னை விட பெரிய எலும்புத் துண்டோடு..நிற்கிறது என எண்ணியது.தன்னிடமிருப்பதைவிட ..அந்த எலும்புத் துண்டு சற்று பெரிதாக இருப்பதாக எண்ணியது.தண்ணீரில்...

கனடாவில் "சூப்பர்மேன்' நாணயம் வெளியீடு!

 சூப்பர்மேன் 75-வது பிறந்த நாளையொட்டி கனடா அரசு தங்க நாணயம் உள்ளிட்ட 7 வகை நாணயங்களை வெளியிடுகிறது.உலகம் முழுவதும் காமிக்ஸ் புத்தக வாசகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பது சூப்பர்மேன் கதாபாத்திரம்.1938 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஜோ சஸ்டர் என்பவர் உருவாக்கினார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெர்ரி சீகல்."சூப்பர்மேனின்' 75-வது பிறந்தநாளையொட்டி கனடா அரசு தங்கம், வெள்ளி, நிக்கல் உலோகம் உள்பட 7 வகை நாணயங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. 14 காரட் தங்க நாணயங்களில் சூப்பர் மேனின் உருவத்தை பொறிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது....

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க இந்தியர்கள் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்!

செவ்வாய் கிரகத்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த, 20 ஆயிரம் பேர், விண்ணப்பித்து உள்ளனர்.செவ்வாய் கிரகத்துக்கு, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி, பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றன."செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால், அந்தக் கிரகத்தில் உயிர் வாழ முடியும்' என, சில விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். றஇதற்கிடையே சில நிறுவனங்கள், செவ்வாய் கிரகத்திற்குச் சுற்றுலா அழைத்துச் செல்லவும், அங்கே குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிட்டு...

கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள்!

 கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்...

சுகப்பிரசவத்திற்கு தேவை சரியான எடையும், உடல் உழைப்பும்!

சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே...

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு!

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையாக உருவெடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங்களாக இரு‌ந்தாலு‌ம், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌‌த்துவ‌ம். குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு பெ‌‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன....

நன்றி மறப்பது நன்றன்று.........குட்டிக்கதை

கண்ணனும் ...முருகனும் நல்ல நண்பர்கள்.ஒரு நாள் கடற்கரைக்குச் சென்ற இவர்கள்..மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..அப்போது நடைபெற்ற விவாதத்தில் முருகனின் பேச்சு கண்ணனுக்கு கோபத்தை உண்டாக்க..அவனது கன்னத்தில் பளாரென அறைந்தான் கண்ணன்.அடியை வாங்கிக்கொண்ட முருகன்..சற்று நேரம் திகைத்துவிட்டான்.பின் கடற்கரை மணலில் 'கண்ணன் என்னை அடித்தான்' என எழுதினான்.பின் இருவரும் மௌனமாக வீடு திரும்பினர்..அப்போது வேகமாக வந்த கார் ஒன்று முருகனை இடிக்குமாறு வர..உடனே...

'நன்மைக்கு நன்மையே நடக்கும்;.........குட்டிக்கதை

ஒரு நாள் கந்தன் தந்தையுடன் மலைகள் இருந்த பகுதி ஒன்றில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்.அப்போது கால் தடுக்கி விழ நேரிட்டது...வலியால் 'ஆ'எனக் குரல் கொடுத்தான்..'ஆ' என எதிரொலியும் கேட்டது...கந்தனுக்கு ஒரே ஆச்சரியம்..'யார் நீ 'என்றான்.பதிலுக்கு 'யார் நீ' என்று கேட்டது...'உன்னை பாராட்டுகிறேன்; என்றான்.அதுவும் அப்படியே கூறிற்று.அப்பாவிடம் கந்தன்..'அப்பா..என்னது இது;என்றான்.அவன் அப்பா சொன்னார்..'கந்தா..இதன் பெயர் எதிரொலி' ஆகும். உண்மையில் நாம் என்ன...

பால்காரனும் ...பேராசையும்.........குட்டிக்கதை

பால்காரன்...தன் மாட்டிலிருந்து கறந்த பாலை ஒரு குடத்தில் இட்டு....அதை தலையில் சுமந்தபடியே அடுத்த ஊருக்கு ..விற்க புறப்பட்டான். பாலை விற்றதும் என்ன செய்யலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.இப்பாலை விற்று வரும் பணத்தில் நூறு கோழிகள் வாங்குவேன்...அவற்றை வளர்த்து சந்தையில் அதிக பணத்திற்கு விற்பேன்.விற்று வந்த பணத்தில் மூன்று அல்லது நான்கு ஆட்டுக் குட்டிகளை வாங்குவேன்.வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் அவை மேயும்..அவை வளர்ந்தவுடன் அவற்றை விற்று...

'எல்லோரும் நல்லவரே'.........குட்டிக்கதை

ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது...'நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..அசையாமல்..என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி' என்றது புறா.'என் மனதிற்குள் ...நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது'என்றது புழு.'என்...

புத்திசாலித்தனம்...........குட்டிக்கதை

படிக்காத ஒருவன்...மெத்தப் படித்த ஒருவனும் அடுத்த ஊருக்குச் செல்ல புறப்பட்டனர்.படிக்காதவன் ஒரு பை நிறைய பணம் எடுத்துக்கொண்டான்.படித்தவனோ கையில் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.சிறிது தூரம் அவர்கள் நடந்ததும் இருண்ட காடு வந்தது,காட்டினுள் நடந்தனர்..பசிக்கு.. அங்கு மரங்களில் பழுத்திருந்த பழங்களை உண்டனர்.திடீரென ..திருடர்கள் கூட்டம் ஒன்று அவர்களை வழிமறித்தது.படிக்காதவனிடம் இருந்த பணமூட்டையைக் கேட்க படிக்காதவன் கொடுக்க மறுக்க..அவனை நைய்யப் புடைத்து...

'கிணற்றுத் தவளையும்...கடல் தவளையும்'.........குட்டிக்கதை

ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது..அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது...இரு தவளைகளும் பின் நட்புடன் பழக ஆரம்பித்தன...ஒரு நாள் புது தவளை 'இந்தக் கிணறு சிறியதாக இருக்கிறது..நான் வாழும் இடம் பெரிது' என்றது.'நீ எங்கே வாழ்கிறாய்?' என் கிணற்றுத்தவளை கேட்டது.புதிய தவளை சிரித்தவாறே ....'நான் கடலிலிருந்து வந்தேன் ..கடல் மிகப்பெரியதாக இருக்கும்' என்றது.'உன் கடல்..என்...

பள்ளி மாணவர்களுக்கு கூகுள் நடத்தும் போட்டி!

கூகுள் நிறுவனம் நடத்தும் படைப்பாக்கத் திறன் போட்டியில் ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும், இப்போட்டியில் பங்கேற்பது எளிது. ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும்.மாணவர்கள் ஏதேனும் ஒரு கதை, விளையாட்டு, இசைப் போட்டி, கார்ட்டூன் அல்லது ஏதேனும் ஒரு வித்தியாசமான படைப்பை பற்றி சிந்தித்து, MIT Media Lab உருவாக்கியுள்ள...

அட!

இந்திய ரயில்வே சமீபத்தில் ரயில் ராடார் (railradar.trainenquiry.com) என்கிற புது இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தத் தளத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தியா முழுவதும் செயல்பாட்டில் உள்ள ரயில்களின் நிலையை அதாவது இந்த நிமிடத்தில் எந்தெந்த ரயில்கள் எங்கெங்கு சென்றுகொண்டிருக்கின்றன என்கிற தகவலை கூகுள் வரைபடத்தின் மூலம் மிகவும் எளிமையான முறையில் அறிந்துகொள்ளலாம்.இத்தளத்திற்குச் சென்றால் நீலம் மற்றும் சிவப்பு அம்புக்குறிகள் நிறைந்த இந்திய வரைபடம் தோன்றும். நீல நிற அம்புக்குறிகள் சரியான நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களையும், சிவப்பு நிற...

இனி பார்வையற்றவர்களாலும் காட்சிகளைக் காண முடியும் ! விசேஷக் கருவிக் கண்டுபிடிப்பு!

பார்வையற்றோர்  காட்சிகளைக் காண வழி செய்யும் ஒருவித விசேஷக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல வருடங்களாக கண்கள், பார்வை குறித்த ஆராய்ச்சியில்  ஈடுபட்டு வந்த ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.இதன் மூலம் காட்சிப் பதிவுகளிலிருந்து வரும் ஒளி அலைகள் (Light waves) பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்தக் கருவியில் ஒலி அலைகளாகப் (Sound waves)  பதிவு செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒலி அலைகளை  ஒளி அலைகளாக மாற்றி (காட்சி) அதனை மூளைக்கு அனுப்புகிறது. எனவே மனித...

அச்சச்சோ!

300 வருடங்கள் பழைமையான பேலஸ், 200 ஏக்கர் நிலங்கள், விமான நிலையம், 3 விமானங்கள், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 18 கார்கள், 1,000 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள், வங்கி இருப்புப் பணம் என மொத்த சொத்தின் இன்றைய மதிப்பு 20,000 கோடி.ஆம். பிரிட்டீஷ் இந்தியாவின் செல்வச் செழிப்பான சீக்கிய மஹாராஜா ஹரிந்தர் சிங் பிரார். இவருக்குச் சொந்தமான சொத்துக்களின் பட்டியல்தான் மேலே உள்ளவை. பஞ்சாபிலுள்ள ஃபரித்கோட்டை ஆட்சி செய்தவர் இவர். ஹரிந்தர் சிங்கிற்கு மொத்தம் 3 மகள்கள், ஒரு மகன்.1981-இல் ஹரிந்தர்சிங் பிரார் தன் ஒரே மகனை சாலை விபத்தில் பறிகொடுத்தார். இதனால் மிகுந்த மன...

தமிழக மாணவர்களின் கண்டுபிடிப்புகள்!

தெரு விளக்குகளில் பயன்படுத்தப்படும் சோடியம் விளக்குகள் அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்பவை. வெப்பத்தையும் அதிகமாக உமிழும்.மேலும் தெரு விளக்குகளை தினசரி நேரத்திற்கேற்ப on, off செய்ய வேண்டிய வேலையும் உள்ளது. சில நேரங்களில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் பகல் முழுவதும் தெரு விளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. ஆனால் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் தெரு விளக்கு, சூரிய வெளிச்சம் வந்தவுடன் அணைந்து விடும். சூரிய வெளிச்சம் குறைந்தவுடன் தானாக எரியத் தொடங்கிவிடும்.மேலும் மனிதர்கள் மற்றும் வாகனங்கள் தெரு விளக்கை நெருங்கும்போது தானாகவே வெளிச்சத்தை அதிகப்படுத்திக்...

சைவ சிக்கன் / மட்டன் தயார்! – லண்டன் விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

சைவ மட்டன், சிக்கன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்ன வியப்பா? உண்மை தான். சோயா எண்ணெயில் இருந்து சிக்கன், கேரட், உருளைக்கிழங்கில் இருந்து மாட்டிறைச்சி தயாரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இறைச்சி தயாரிப்பில் கடந்த மாதம் தான் முதன்முதலில் புரட்சி ஏற்படுத்தப்பட்டது. லண்டனில் உள்ள சில விஞ்ஞானிகள், சோதனைக்குழாயில் குழந்தையை மட்டும் தான் உருவாக்க முடியுமா? இறைச்சியை செயற்கையாக உருவாக்க முடியாதா என்று சவால் விட்டு, ஆராய்ச்சியில் இறங்கினர்....

இந்திய அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரின் வெளிநாடு சிகிச்சை செலவை இனி அரசே ஏற்கும்!

இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, வெளிநாடுகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான செலவை, இனி அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.இந்த ஆட்சிப் பணி அதிகாரிகள் இது போன்று வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சைப் பெற்றால், அதற்கான செலவுத் தொகையை திரும்பப் பெறும் வசதி, இது வரை கிடையாது என்பது நினைவு கூறத்தக்கது.. இந்தியாவில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அவர்கள்...

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’

 மனுஸ்ரீ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மனுக்கண்ணன், பானுமதி யுவராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அங்குசம்’. இதில் நாயகனாக கந்தா, நாயகியாக ஜெயந்தி நடிக்கின்றனர். வாகை சந்திரசேகர், சார்லி, பாலாசிங், பாவா லட்சுமணன், கராத்தே ராஜா, காதல் சுகுமார், காதல் தண்டபாணி, ரஞ்சன், மீராகிருஷ்ணன், ரேகா சுரேஷ், பிருந்தாதரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி மனுக்கண்ணன் இயக்குகிறார். படம் பற்றி கேட்டபோது,.”தகவல் அறியும் உரிமை...

இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

மத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் இதோ….துறை வாரியாக காலியிடங்கள்:மெக்கானிக்கல் 876,ஐ.டி., 23,எலக்ட்ரிகல் 133,கெமிக்கல் 296,சிவில் 39,மெடலர்ஜி 46,கிளாதிங் டெக்னாலஜி 32,லெதர் டெக்னாலஜி 4,ஸ்டோர்ஸ் 47,ஓ.டி.எஸ்., 59,ஆட்டோமொபைல்...